துளசி சூப்

 குளிருக்கு இதமாகவும் மருந்தாகவும் மூலிகை சூப்.:


துளசி சூப்.:


தேவையான பொருட்கள்.:

துளசி இலைகள் - ஒரு கைப்பிடி,

நறுக்கிய கேரட், பீன்ஸ்,

பச்சைப் பட்டாணி - ஒரு கப்,

இஞ்சி, பூண்டு (இடித்தது) - சிறிதளவு,

மிளகு, சீரகம் (பொடித்தது) - சிறிதளவு,

மல்லித்தழை - சிறிதளவு,

உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.


செய்முறை.: 

நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, துளசி இலைகள், இடித்த இஞ்சி, பூண்டு, உப்பு ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். 


தண்ணீர் சிறிது சுண்டியதும் இறக்கவும். 


பின் சற்று அதை மசித்து வடிகட்டி, பொடித்த சீரகம், மிளகு சேர்த்துப்பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி சூடாகப் பருகவும்.

Comments

Popular posts from this blog

இடு மருந்து

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்