குழந்தைகளின் காய்ச்சல் தீர

 குழந்தைகள் காய்ச்சலைக் குறைக்கும் 10 வீட்டு வைத்தியம்


1. நெற்றியில் ஈரத்துணி

குழந்தையின் நெற்றியில் காட்டன் துணியை நனைத்து, பிழிந்து அதை நெற்றியில் பற்று போல மடித்து போட்டால் காய்ச்சல் குறையும். உடலிலும் ஈரத் துணியை ஒத்தி ஒத்தி எடுக்கலாம். இதனால் காய்ச்சல் விரைவில் குறையும். குழந்தையை இளஞ்சூடான தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும். சாதாரண தண்ணீரில் குழந்தையை குளிப்பாட்ட கூடாது.


2. தாய்ப்பாலே சிறந்த மருந்து

குழந்தைக்கு திரவ உணவுகளை கொடுத்திட வேண்டும். 0-6 மாத குழந்தைக்கு தாய்ப்பால் அதிக அளவில் கொடுப்பது நல்லது. 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால், சுத்தமான தண்ணீர், பழச்சாறு கொடுக்கலாம். மருத்துவர் பரிந்துரைத்து இருந்தால் சலைன் டிராப்ஸை குழந்தையின் மூக்கில் போடலாம். 


3. வெங்காய சிகிச்சை

வெங்காயத்தை அறிந்து அதைக் குழந்தையின் உள்ளங்காலில் 2 நிமிடம் அப்படியே வைத்திருக்கவும். ஒரு நாளைக்கு இருமுறை இந்த சிகிச்சையை செய்யலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெங்காய சாறை 2 டீஸ்பூன் அளவுக்கு சாப்பிட கொடுக்கலாம். இதனாலும் காய்ச்சல் குறையும்.


4. இஞ்சி குளியல்

2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பவுடரை குழந்தை குளிக்கும் இளஞ்சூடான தண்ணீர் டப்பில் போட்டு அந்த தண்ணீரில் குழந்தையை 10 நிமிடம் வைத்திருக்கலாம்.


5. லெமன் தேன்

ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் அதனுடன் இஞ்சி சாறை 4 சொட்டு கலந்து குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான வைத்தியம்.


6. உலர் திராட்சை

அரை கப் தண்ணீரில் 25 உலர் திராட்சைகளை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறியதும் திராட்சை மிருதுவாகிவிடும். அப்போது அதைப் பிழிந்து அரைத்து, வடிகட்டி, சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சிறிதளவு கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம். ஒரு நாளைக்கு இரு முறை தர வேண்டும். 8+ மாத குழந்தைகளுக்கான வைத்திய முறை இது. 


7. தனியா தண்ணீர்

இரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் ஒன்றும் பாதியுமாக அரைத்த தனியாவை ஒரு டீஸ்பூன் அளவு போடவும். நன்கு கொதி வந்து பாதியாக சுண்டியதும், அதை வடிகட்டி கருப்பட்டி சேர்த்து குழந்தைக்கு இளஞ்சூடாக குடிக்க கொடுக்கலாம். 8+ மாத குழந்தைகளுக்கான வைத்திய முறை இது


8. துளசி தண்ணீர்

துளசி தண்ணீரை தயாரித்து உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுக்கலாம்.


9. வெந்தய தண்ணீர்

2 கப் தண்ணீரில் முன்னாள் இரவே 2 டீஸ்பூன் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். மறுநாள் அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் அடிக்கடி சிப் செய்து குடிக்க வேண்டும்.


10. தூக்கமும் மருந்துதான்

காய்ச்சலை உடலில் ஏற்படுத்தி நோய் கிருமிகளை அழிக்கும் வேலை, உடலில் நடந்து கொண்டிருக்கும். இந்த சமயத்தில் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். நன்கு தூங்க வேண்டும். இதுவே காய்ச்சலை விரைவில் விரட்டும் மருந்து.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி