ஆவி பிடிக்காதே
"ஆவி பிடிக்காதே"...
தாத்தன் பூட்டன் காலந்தொட்டு பயணிக்கும் சளித் தொந்தரவுகளுக்காக வழக்கத்தில் உள்ள " ஆவி பிடித்தல்" முறையை,தற்போதைய கொரோனா காலத்திற்கு பலன் அளிக்காது என்ற மாய பிம்பத்தை மக்களிடைய கடந்த சில நாட்களாக பரப்பி வருகின்றனர்.
உண்மையில் #ஆவி_பிடித்தல் என்பது கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாது.ஆனால்,"கொரோனா வைரஸால் பாதிப்படையும் மிக முக்கிய உடல் உறுப்பான #நுரையீரலை_பலப்படுத்தும்" என்பதே உண்மை.
மிக உயர் வெப்ப ஆவியை செயற்கை முறையில் மின் சாதன அமைப்புகள்(நெபுலைசர் & ஸ்டீரிமர்) மூலம் அதிவேகமாக உள்வாங்கும் போது சுவாசப்பாதை மற்றும் நுரையீரல் திசுக்கள் பாதிப்படையும்.
மாறாக,தண்ணீரின் கொதிநிலையில்(100°செ) வெளிப்படும் ஆவியை இயல்பாக சுவாசித்து உள்வாங்கும் போது எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
பொதுவாக ஆவிபிடித்தலுக்கு,
நொச்சி இலை,வேப்பிலை மற்றும் மஞ்சள் போதுமானது.கூடுதலாக துளசி,கற்பூரவல்லி,ஆடாதொடா, யூக்கலிப்டஸ்,எலுமிச்சை இலை மற்றும் குப்பைமேனி இலைகளை பயன்படுத்தலாம்.
ஆவி பிடிக்கும் முறை-
இயல்பான கொதிநிலையில் வெளிப்படும் ஆவியை நாசித்துவாரங்களின் வழியே உள்வாங்கி வாய் வழியாக வெளிவிட வேண்டும்.அதேபோல் வாய்வழியாக உள்வாங்கி நாசித்துவாரங்களின் வழியே வெளிவிட வேண்டும்.
நுரையீரல் பலமானதாக, ஆரோக்கயமானதாக இருக்கும் போது எந்தவொரு கிருமியின் தாக்கமும் இருக்காது.நுரையீரலை பலவீனப்படுத்தும் புகைப்பழக்கம், பொடி போடும் பழக்கம் மற்றும் ஸ்டீராய்டு நிறைந்த இன்கேலர்களை தவிர்ப்பது கூடுதல் பலம்.
இயற்கையான பாரம்பரிய வழிமுறைகளை காவு வாங்கி,தங்கள் தயாரிப்புகளை மக்கள் மேல் திணித்து கொள்ளை லாபம் பார்க்க துடிக்கும் மருந்து மாஃபியாக்களின் சூழ்ச்சி வலையே இந்த "ஆவி பிடிக்காதே"....
-Dr.T.பழனிவேல்ராஜன்,B.H.M.S.,
Comments
Post a Comment