மூலிகை தேநீர்
சீரகம் 4 ஸ்பூன்
கொத்தமல்லி விதை 4 ஸ்பூன்
சோம்பு 4 ஸ்பூன்
லவங்கபட்டை 2
ஏலக்காய் 12
கிராம்பு 14
மிளகு 28
லேசாக ஈரபதம் போக வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு இதில் 2 ஸ்பூன் அளவிற்கு சுக்கு பொடி சேர்த்து மிக்சியில் அரைத்து பத்திரபடுத்தவும் .
இதில் ஒருவருக்கு 1 டீ ஸ்பூன் அளவு பொடியை 2 டம்ளர் அளவு நீரில் போட்டு அதில் துளசி இலை 5 போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுருக்கவும் . இறக்கும் முன் 1/4 ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்து ஓரிரு கொதி வந்த பின் இறக்கவும் .பிறகு அதை வடிகட்டி ஒரு நபர்க்கு 1/2 எலுமிச்சை சாறு விட்டும் அதில் தேன் ( சர்க்கரை வியாதி எனில் உப்பு ) சேர்த்து சாப்பிடவும் . இதை சாப்பிட்ட பிறகு அரை மணி நேரத்திற்கு வேறெதுவும் சாப்பிட கூடாது .
பயன்கள் :
1 . உடல் சூடு அதிகமாக இருப்பவருக்கு மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்து உடல் சூடு குறைந்து வெள்ளை நிறமாக மாறும் .
2 . நன்கு பசி எடுக்கும் ஜீரண உறுப்பு பலம் பெறும் .
3 . நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .
4 . சளி பிடிக்காது
5 . அதிக வியர்வை உள்ளவர்களுக்கு அந்த பாதிப்பை படிப்படியாக குறைக்கும் .
6 . மூலம் உள்ளவர்களுக்கு மலம் இலகுவாக கழியும் .
7 . ராஜ உறுப்புகள் பலம் பெறும்
8 . கொரனா போன்ற நோய் தாக்காமல் தடுக்கும் , இந்நோய் இருப்பவர்க்கு சிறந்த உடல் தேற்றியாக அமையும் .
மேலும் பல நன்மைகள் உண்டு
*** தினமும் ஒரு வேளை மட்டுமே போதும் . இதை தொடர்ந்து எடுக்க நோயில்லாமல் நீண்ட ஆயுள் வாழலாம் .
நண்பர்கள் இதை பின்பற்றி நோயின்றி வாழ வாழ்த்துக்கள்......
Comments
Post a Comment