சுவை
மறந்துபோன பழக்கத்தால் பலர் நோயுற்று வாழ்கிறோம்
1. நாம் உண்ணும் உணவுகளில் 90 சதவீதம் காரம், உப்பு, புளிப்பு, இனிப்பு சுவையே அதிகளவில் உள்ளது.
2. நாம் உண்ணும் உணவுகளில் கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு இந்த ஐந்தும் கலந்து இருக்கவேண்டும்.
3. நாம் உண்ணும் உணவில் 0.5 சதவீதம் கூட கசப்பு இல்லாமல் உண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
4. உடலில் கசப்புத் தன்மை இல்லாமல் போனதால் பல கொடுமையான நோய்கள் நம்மைத் தாக்குகின்றன.
5. உடலில் கசப்புத் தன்மை இருக்குமேயானால் எந்தவொரு வைரஸும், பாக்கடீரியாக்களும் நமக்கு தீங்கு இழைக்கக்கூடியவைகளை தடுத்து அல்லது அழித்து விடும். நம்மை காத்துவிடும்.
6. உடல் பலவீனப்பட்டவர்களையே இந்த வைரஸுக்கள் அதிகமாகவும், பலமாகவும் தாக்குகின்றன.
7. நோய்எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை வெகுவாக பாதிக்கிறது. பலமில்லா உடலினர்களை சோர்வடையச் செய்கிறது. நோய்கள் சுலபமாக தொற்றிக் கொள்கிறது.
8. மருத்துவத்துறை வல்லுனர்கள் ஆயிரம் விளக்கம் கொடுத்தாலும் அதை மக்கள் கடைபிடிக்கிறார்களா என்பது சந்தேகமே.
9. நோய்த்தொற்று கண்டவுடன் உடலில் கசப்புத் தன்மை இல்லை என்பது தெரிந்தவுடன் பலவித கசாயங்களும், வேதுபிடித்தலும், பலவகை சூரணங்களும் எடுத்துக்கொள்ளலாம் எனச் சொல்கிறார்கள்.
10. அப்படி எடுத்துக்கொள்வதால் எல்லா உடலும் ஏற்றுக்கொள்ளுமா? அல்லது அந்த நோய்தொற்று விலகிவிடுமா? என்பது தெரிவில்லை.
11. சில உடலினர்களுக்கு ஏற்றுக்கொள்கிறது. சிலருக்கு ஏற்றுக்கொள்வதில்லை. காரணம் ஒவ்வொருவரின் உடலும் வாதம், பித்தம், சிலேத்துமம் இந்த மூவகையிலும் மாற்றமிருக்கும். இரத்தப்பிரிவு இருப்பதுபோல….
12. இப்போது கடின உடல் உழைப்பாளிகள், விவசாயிகள் போனறோரை எந்தவொரு நோயும் எளிதில் தீண்டுவதில்லை.
13. உடல் உழைப்பில்லாமல் மன உழைப்பில் வாழ்பவர்களும், அறுவைசிகிச்சை செய்தவர்களையும், உடல் பலவீனமானவர்களையும் உடலில் கசப்புத் தன்மை இல்லாதவர்களையும் எளிதில் பல நோய்கள் பற்றிக்கொள்கின்றன.
14. இனிமேலாவது மக்கள் கசப்பான உணவுகளை கொஞ்சமாவது தினமும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
15. தினமும் நாம் உண்ணும் உணவுகளில் எல்லாவகை சுவைகளும் இருக்கும். ஆனால் கசப்பான சுவை கொண்டது இருக்காது.
16. இனிமேல் கசப்புத் தன்மை உள்ள உணவுகளை தினமும் சிறிதளவாவது எடுத்துக்கொள்ள பழகவேண்டும். அப்படி கடைபித்துவந்தால் இந்த கொரோனா போன்ற எந்த வைரஸ் வந்தாலும் நாம் பெரிய பாதிப்பில்லாமல் தப்பித்துக் கொள்ளலாம்.
கசப்புத் தன்மையை எப்படி நாம் சேர்த்துக்கொள்வது எனக் கேட்டால் தினமும் பல் விளக்க வேப்பமரக் குச்சியைக்கூட பயன் படுத்தலாம். வாயும், சுவாசப் பாதையும் கசப்புத் தன்மை பெறும்.
வேப்பம் பட்டையை மேல் புரணியை நீக்கி எடுத்துவிட்டு பட்டையை சிறுகச் சிறுக நறுக்கி பொடி செய்து, நன்றாக காயவைத்து அரைத்து பவுடராக வைத்துக்கொண்டு தினம் ஒரு சிட்டிகை அளவேனும் எடுத்து தினமும் காலையும், மாலையும் பல் தேய்த்து வந்தால் அல்லது வாய் கொப்பளித்து வந்தாலும் வாய் வழியாகவும், மூக்கின் வழியாகவும் செல்லும் கிருமிகள் உள்ளே நுழையாமல் தடுக்கப்படும்.
ஒரு சிட்டிகை அளவு வேப்பம் பட்டைப் பொடியை தேனில் அல்லது நெய்யில் குழைத்து வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இன்னும் இந்த தெய்வீக மரமான வேப்பமரத்தில் இருந்து செய்யக்கூடிய மருந்துகளை அடுத்தடுத்த பதிவுகளில் பதிவிடுகிறேன். இந்த எளிய முறைகளை மக்கள் செய்துவந்தால் நன்மைபெறலாம்.
மக்கள் நலனில்
என்றென்றும்
சிவனடியான்-சித்தவைத்தியன்
சி.சங்கரலிங்கம்.SMP
Comments
Post a Comment