Pscho mania
🇨🇭#மேனியாவை_பற்றி #தெரிந்துகொள்ளுங்கள்❗❗❗
🔯 #மேனியா_என்றால்_என்ன
#தெரியுமா❓
சரியான “மேனியா’வா❓
அநியாயத்துக்கு சிலருக்கு, அர்த்தமே இல்லாமல் கடுங்கோபம் வரும் இந்த அனுபவம் உண்டா உங்களுக்கு❓
இப்படிப்பட்டவர்களை சரியான “மேனியா’வாக இருக்கிறாரே மனுஷன்…என்று அழைப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
👉மேனியா என்றால் என்ன தெரியுமா❓
மேனியா என்பது பைபோலார் நோயில் ஏற்படும் முக்கிய அறிகுறியாகும். மேனியா என்றால் குறைந்தது ஒரு வாரத்திற்கு மன நிலை மாற்றம் ஏற்படும். அச்சமயங்களில் , அதீத மகிழ்ச்சியோடும் ,கடுகடுப்போடும் காணப்படுவார்கள்.
இந்த மனநிலையில் இருக்கும்போது
▶சாதாரண மனிதராக இல்லாமல்……
▶அடிக்கடி கோபம்,
▶தேவையில்லாமல் சீற்றம்,
▶எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள தயாரிள்ளா குணம் கொண்டவர் என்று பொருள்.
▶மனோரீதியான பிரச்னை உள்ளவர்.
▶சாதா மேனியாவாக உள்ளவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு சில மணி நேரம், சில நாள், சில மாதம் தான் இப்படிப்பட்ட நிலை நீடிக்குமாம். ஆனால், மாதக்கணக்கில் நீடித்தால், மனோதத்துவ நிபுணரை பார்க்கத்தான் வேண்டும்.
⭕ யாருக்கு வருகிறது மேனியா❓
அதன் அறிகுறி என்ன❓
❗ பகட்டாக தான் இருப்பர் ஆனால், எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எதிர்வாதம் எப்போதும் உண்டு. உச்சமாக சண்டையும் போடுவர்.
❗ திடீரென உணர்ச்சிவசப்படுவர்
“நீ சொல்றது தப்பு, உனக்கு ஒண்ணும் தெரியாது’ போன்ற வசனங்கள் அடிக்கடி வரும்.
❗ அதிகமாக செலவழிப்பர் ஆடம்பரம் பிடிக்கும் செக்ஸ் போக்கு அதிகமாக இருக்கும்.
❗ தூங்குவது குறைவாகத்தான் இருக்கும் ஆனால் சோர்வே தெரியாது.
❗ எதிலும் திட்டமிடாத நிலை உள்ளதால், இவர்கள் கடனாளி ஆவதுண்டு. அதனால், மது, போதைக்கும் அடிமையாகிவிடுவர்.
❗ எந்த ஒரு சிறிய சண்டையும் விர்ர்ர்ரென தலைக்கு ஏறி விடும் என்பதால், எந்த விளைவுகளும் இவர்களுக்கு வந்து சேரும்.
❗ நார்மலான மனிதர்கள் அல்ல என்பதால், இவர்கள் சாப்பிடுவதிலும், சிரிப்பதிலும், அழுவதிலும் மிகவும் அதிகமாகவே இருப்பர். இவர்கள் எல்லா நடவடிக்கையும் நார்மலுக்கு மாறாகவே இருக்கும்.
❗ தாம் எதை வேண்டுமானாலும் சாதித்துவிடுவோம் என்ற அசட்டு தைரியம் ஏற்பட்டு பல சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் முடிவுகளை எடுப்பார்கள்.
❗ அதீத ஆற்றல் வெளிப்படுவதால்,அவர்களால் ஓரிடத்தில் அமர முடியாமல் ,ஏதேனும் காரியத்தில் ஈடுப்பட்டு கொண்டே இருப்பார்கள்.
❗ தூக்கம் அதிகம் தேவையில்லை என்ற எண்ணத்திலேயே இருப்பார்கள்
❗ சதா ஓயாமல் பேசுவதோடு மட்டுமல்லாமல் ,அவர் பேசுவதை கூர்ந்து கவனித்தால் ,மாறி மாறி பல தலைப்புகளை பேசுவார்கள்.
❗ புதிய நபர்களை எளிதில் தன் நண்பர்களாக ஏற்றுக்கொள்வார்கள். சிறிது நேரமே ஒருவரிடம் பழகி இருந்தாலும் அவர்களிடத்தில் நன்கு பரிச்சையமான நண்பர்களை போன்று நடந்து கொள்வது, மற்றவர்களிடம் எளிதில் பணம் பரிமாற்றம் செய்துகொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்
❗ தன் கோபத்தில் பொருட்களை உடைப்பது, ஆயுதங்களை துஷ்ப்ரயோகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். உடனுக்குடன் புதிய பல முடிவுகளை எடுப்பதால், தான் என்ன செய்கிறோம் என்ற தெளிவான சிந்தனைகள் இல்லாமல் காணப்படுவார்கள்.
❗ மேனியாவின் அறிகுறிகள் ஏற்படும்போது ஒருவர் தம்மை அளவுக்கு அதிகமாக சுயமதிப்பீடு செய்துகொள்வார்கள் அதன் விளைவாக அவர்களின் அந்த எண்ணங்கள் அதிக தீவிரமடைந்து தம்மை உலகிலேயே தலை சிறந்தவர் என்று கருதிக்கொள்வார்கள்.இதற்கு Grandiose Delusion என்று பெயர்.
👉உதாரணத்திற்கு………
⏩ ஒருவர் தமக்கு லாட்டரி மூலம் பலகோடி ரூபாய் பரிசாக பெற்றதாகவும், தான் ஒரு கோடீஸ்வரர் என்றும் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டிருப்பார்.
⏩ ஒருவர் தம்மை ராஜாவாகவும்,தான் ஒரு ராஜகுடும்பத்தை சேர்ந்தவர் என்றும் நம்பிக்கை கொண்டு அதற்கேற்றாற் போல நடந்துகொள்வார்கள்.
⏩ சிலர் தன்னை யாரோ பின் தொடர்வது போன்றும் அவர்களால் தனக்கு ஏதோ மிக பெரிய ஆபத்து ஏற்படப்போவதாகவும் நம்பிக்கை கொண்டு அந்த பயத்தில் அவர்கள் ஓடி ஒளிந்து கொள்ளும் அளவிற்கு அவர்களின் எண்ணங்கள் இருக்கும். அதனை நூறு சதவீதம் உண்மையென நம்புவார்கள்.
⏩ சிலர்க்கு யாரும் இல்லாத சூழ்நிலையிலோ அல்லது அனைவரும் இருக்குமிடத்திலோ, யாரோ ஒருவர் தன்னிடம் பேசுவது போன்ற குரலோ அல்லது வேறு ஏதேனும் சத்தமோ காதில் கேட்டால் , அதற்கு Auditory Hallucination என்று பெயர். மேனியாவின் அறிகுறிகளுடன் இவ்வாறான அறிகுறிகளும் சேர்ந்து காணப்பட்டால் அதற்கு mania with psychosis symptoms என்று பெயர்.
Comments
Post a Comment