பூண்டு மிளகு பால்

 நுரையீரல் தொற்றால் #மூச்சு_திணறலா...?

நுரையீரலை பலப்படுத்த பூண்டு+பால் + மிளகு + மஞ்சள் இருமலுக்கு கை கண்ட மருந்து. சளியுடன் இருமல்,மூச்சுத்திணறல்  எல்லாமே மூச்சுகுழாய் நுரையீரல் சம்பந்தபட்ட பாதிப்பே. 

பாலை நன்றாக காய்ச்சி மிளகை நசுக்கி  அதில் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து குடித்து வந்தால் நுரையீரலுக்கு அதிக சக்தி கிடைக்கும். மஞ்சளில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் தன்மை அதிகம். இதில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வேகமாக அதிகரிக்க கூடியவை. தற்போது #கொரோனா பேரிடர் நிகழ்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் ஒரு கப் பாலில் இரண்டு சிட்டிகை மிளகுத்தூள், ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்த பால் குடித்துவருவது நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும். மசாலா பால் என்பதால் குழந்தைகளும் குடித்துவிடுவார்கள். அதிக இனிப்புக்கு கூடுதலாக நாட்டுசர்க்கரை சேர்த்து கொடுக்கலாம். ​பால் + பூண்டு பாலில் பூண்டு வேகவைத்து கொடுப்பது தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும் என்பதுதான். பூண்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் நுரையீரல் புற்று நோய் வருவதை தடுக்க முடியும். பூண்டில் இருக்கும் அலிசின் என்னும் ஆன்டி பயாடிக் சத்து நுரையீரல் தொற்றை உண்டாக்கும் வைரஸ், பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமை கொண்டது. காரத்தன்மை கொண்ட பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிடும் போது காரம் தெரியாது. வாரம் இரண்டு நாள் 5 டம்ளர் பாலில் 10 பல் பூண்டு வீதம் உரித்து வேகவைத்து 4 டம்ளராக சுண்டும் வரை வேக வைத்து குடித்தால் நுரையீரலில் தொற்று பரவாமல் வலிமையாக்கி சுவாசக்குழாயில் ஆழமாக மூச்சை இழுத்து விடுவதற்கு பூண்டு நன்றாகவே உதவிடும். உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமநிலையில் வைத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறிப்பாக இந்த கஷாயம் நுரையீரல் பலவீனமாக இருந்தாலும் அதை பாதுகாக்க உதவும். 

ஒரு டம்ளர் பாலுக்கு சிறு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சீரகம், ஒரு சிட்டிகை மிளகுப்பொடி சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கவும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அளவு குறைத்து கொடுக்க வேண்டும். அதிக காரம் நிறைந்த இந்த கஷாயம் நுரையீரலை சுத்தப்படுத்த உதவும். வாரம் ஒரு முறை இந்த கஷாயம் குடிப்பதை தவறாமல் கடைபிடியுங்கள். தினமும் டீ குடிக்கும் போது இஞ்சியை தட்டி சேர்த்து இஞ்சி டீயாகவோ, அல்லது சுக்கு காபியாகவோ குடித்து வருவது மிகவும் நல்லது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி