இரத்த சோகை

 🇨🇭#பெண்களை_மிக_அதிகமாகத்_ #தாக்கும்_ரத்த_சோகைக்கு……❗❗❗


💊#எளிய_வீட்டு_வைத்தியம்…❓


பெண்களை மிக அதிகமாகத் தாக்கும் ரத்தசோகையை நூற்றுக்கு நூறு உணவுப் பழக்கத்தின் மூலமே விரட்டி அடித்துவிடக் கூடிய ஒன்றுதான்” 


ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது, ரத்தசோகை ஏற்படுகிறது. 


உடம்பில் இரும்புச்சத்து குறைந்தால் ஹீமோகுளோபின் அளவும் குறையும். 


குழந்தைகள், பெண்கள், கருவுற்ற தாய்மார்கள்’தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முதல் காரணமே…


சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாததுதான். மருந்து, மாத்திரைகளை அதிக அளவு உட்கொள்பவர்களுக்கும் ரத்தசோகை வரலாம். மரபு வழியி’லும் இந்தப் பிரச்னை வரலாம்.


உடம்பில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை உற்பத்தி செய்ய புரதம், இரும்புச்சத்து மிகவும் அவசியம். புரதச்சத்து உணவு’களான பால், பருப்பு, பயறு வகைகள், பழங்கள், பேரீச்சம்பழம், கீரை வகைகளை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது, அந்தச் சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ள……


▶ வைட்ட’மின்-சி, 


▶ தாது உப்புகள், பி-12, 


அமிலத்தன்மை, ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவு’களையும் கூடவே சேர்த்துக் கொள்ள’வேண்டும். 


முட்டை’யின் மஞ்சள் கருவில் இரும்பு, புரதம், ஃபோலிக் ஆசிட், பி.12 

போன்ற எல்லாச்’சத்துக்களும் அடங்கியிருக்”கின்றன. சிக்கன், மீன், முட்டை, ஈரல் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்’களுக்கு ரத்தசோகை வருவதற்’கான வாய்ப்புகள் குறைவு” 


➡ மூச்சுத் திணறல், 


➡ அசதி, 


➡ நடக்கவே முடியா’மல் போதல், 


➡ முகம், கண், விரல், கைகள் வெளுத்துப் போதல் 


போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது ரத்தசோகையாக இருக்’கலாம். உடனடி’யாக உணவு விஷயத்’தில் கவனத்தை செலுத்துங்’கள்” 


”உணவுதான் உற்சாக’மாக வாழ்வதற்கு ஒரே மருந்து. 


சத்துள்ள உணவுகளை சரிவி’கிதத்தில் சாப்பிட்டால் போதும்.……


⏩ ரத்த சோகையா❓

அப்படினா என்ன..❓னு கேட்பீர்கள். 


👉 இதோ, ரத்தசோகையை விரட்டியடிக்கவும் ……வரவிடா’மல் தடுக்கவும் கூடிய உணவுகள்” 


🇨🇭 #உணவே_மருந்து🇨🇭


💊#பூசணி_விதை_பாயசம்💊


❓தேவையானவை:


பூசணி விதை – 150 கிராம்


பால் – 250 மில்லி


சர்க்கரை – 75 கிராம்


நெய் – 2 டேபிள்ஸ்பூன்


முந்திரி – 10 கிராம்


திராட்சை – 5 கிராம்


ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்


#செய்முறை❓


பூசணி விதையை, சிறிதளவு பாலில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலைக் காய்ச்சவும். அதில் அரை டம்ளர் பாலை தனியாக வைத்துவிட்டு, மீதமுள்ள பாலில் அரைத்த விழுதைப் போட்டு, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து போட்டு இறக்கவும். தனியாக உள்ள அரை டம்ளர் பாலை குளிர வைத்து, பாயசத்துடன் கலந்து, ஏலக்காய்தூள் தூவி, ‘ஜில்’லென்று பரிமாறவும். காலை சாப்பாட்டுக்கு முன்பு ‘சூப்’ போல் இந்தப் பாயசத்தை பருகலாம்.


💊#பருப்பு_பீன்ஸ்_கூட்டு💊


💢தேவையானவை❓


பீன்ஸ் – 100 கிராம்


பாசிப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 50 கிராம்,


பூண்டு – 2 பல்


சீரகம், நெய் – தலா ஒரு டீஸ்பூன்


வறுத்துப் பொடித்த கறுப்பு எள் – ஒரு டீஸ்பூன்


கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்


மஞ்சள்தூள், கறிவேப்பிலை, உப்பு – சிறிதளவு


❓செய்முறை❓


பாசிப்பருப்பு, துவரம்பருப்புடன் மஞ்சள் தூள், பூண்டு, சீரகம் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பீன்ஸ், உப்பு போட்டு வேக விடவும். இதனுடன், வெந்த பருப்பை சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். பொடித்த எள்ளை மேலாகத் தூவி பரிமாறவும். இதை சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம்.


🇨🇭 பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்❓


♦தங்கள் அம்மா,மனைவி,பெண் குழந்தைகள்.... அவசியம் சாப்பிடவேண்டும்....


1.முருங்கைக்கீரை


2.சுண்டக்காய்


3.சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு அவித்து சாப்பிடுனும்


4.சுண்ட வற்றல் குழம்பு....(வயிற்றில் பூச்சிகளை கொல்லுமாம்)


5.எள் உருண்டை


6.திராட்சை,மாதுளை


7.கறி வேப்பிலை துவையல்


8.பீர்க்கங்காய்


9.உளுந்து களி


10.கறுப்பு ,உளுந்து இட்லி,தோசை


11.பொன்னாங்கன்னி கீரை


12.வெள்ளாட்டு 

கறி......எலும்பு சூப்,ஈரல்


13.நெல்லிக்காய்..

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி