இடுப்பு வலி நீங்க

 ஆண்களின் முதுகு மற்றும் இடுப்பு வலியை நீக்க உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்


தேவையான பொருள்


1.பனை வெல்லம் - 10 கிராம்

2.அருகம் புல் - ஒரு கைப்புடி அளவு

3.பசும் நெய் - 5 கிராம்

4.தேங்காய் -  பாதியளவு

5.மலை வாழைப்பழம் -  1

6.அமுக்கரா கிழங்கு பொடி - 5 கிராம்


செய்முறை


முதலில் கொடுக்கப்பட்டுள்ளப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


👉பிறகு அருகம் புல்லுடன்  சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிக்கட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.


👉இதன் பிறகு அமுக்கரா கிழங்கு பொடி மற்றும் பசும் நெய் ஆகிய இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.


👉இதனுடன் ஏற்கனவே வடிகட்டி வைத்திருந்த அருகம் புல் சாற்றை 2 தேக்கரண்டி சேர்க்கவும்.


👉பிறகு இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்த தேங்காய் மற்றும் மலை வாழைப்பழம்,பனை வெல்லம் ஆகிய பொருட்களை சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.


👉இவ்வாறு உருவான சாற்றை காலையில் வெறும்வயிற்றுடன் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான இடுப்பு வலி முற்றிலுமாக நீங்கி விடும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி