மலைவேம்பு மூலிகை
அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த மலைவேம்புவின் பயன்கள்...!!
★வேம்பில் அதிக வகைகள் உண்டு. மலைவேம்புக்கு தனி மகத்துவம் உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் முதல் மூன்று நாட்களில் கொடுக்கவேண்டும். மலைவேம்பை நன்கு அரைத்து மூன்று வேளை தர வேண்டும்.
★இதை சாப்பிடுபவர்கள் எண்ணெய் பண்டங்கள் மற்றும் புளியை தவிர்க்க வேண்டும். உடலில் உள்ள நீர் கட்டிகள், நீர் கொப்பளங்கள் ஏற்பட காரணம், உடலில் தேங்கியுள்ள கழிவுகளாலும், உஷ்ணத்தினாலும் ஏற்படுகிறது. மலைவேம்பை சாப்பிடுவதால் கர்ப்பப்பையில் உள்ள கிருமிகளை நீக்கி கர்ப்பம் தரிக்க உதவுகிறது.
★டெங்கு காய்ச்சலுக்கும் இதனை கஷாயம் செய்து கொடுக்கலாம். சிறுநீரில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் கல் அடைப்பு போன்ற நோய்களுக்கு மருந்தாகிறது.
★வேம்பு இலை, குடல் புழுக்களைக் கொல்லும்; குடல் வாயுவை அகற்றும்; வீக்கம், கட்டிகளைக் கரைக்கும்; தாய்ப்பால் சுரப்பைக் குறைக்கும்.
★வேப்பம் பூ, குடல் புழுக்களைக் கொல்லும். வேம்பு விதை, நஞ்சு நீக்கும்; நோய் நீக்கி உடலைத் தேற்றும். வேம்பு பட்டை, முறைக் காய்ச்சலைக் குணமாக்கும்; உடல் பலத்தை அதிகரிக்கும்.
★வேம்பு எண்ணெய், பித்த நீரை அதிகரிக்கும்; இசிவு நோயைக் குணமாக்கும்; காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொழுந்தான வேப்ப இலைகளைப் பறித்து, அரைத்து நெல்லிக்காய் அளவு அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.
★வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற ஒரு சிறு துண்டு வேம்பு பட்டையிலிருந்து தயாரித்த கஷாயத்தை ஆறு தேக்கரண்டி அளவு குடிக்க வேண்டும்.
★தோல் நோய்கள் குணமாக வேம்பு எண்ணெய்யை நோயுள்ள பகுதியில் பூச வேண்டும். இரசத்தில் வேப்பம் ஈர்க்கு மற்றும் வேப்பம் பூக்களைத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள பித்த நோய்கள் குணமாகும்.
Comments
Post a Comment