மூச்சுதிணறல் ஏற்படாமல் இருக்க

 *   மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க    

  முனிவர்கள் சித்தர்கள் பயன்படுத்திய

              மூலிகையின் இரகசியம்


  திருநீற்று பச்சிலை எனும் மூலிகையின் இலைகளை பத்து எடுத்து இதை கசக்கி முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு நீங்கும் மூச்சுத்திணறல் விலகும் சுவாசம் சீராக நடைபெறும்


  பிராண சக்தியை குறைவின்றி பெறுவதற்காக சித்தர்கள் வாழ்ந்த குகையின் முன் வாசலில் திருநீற்றுப் பச்சிலை எனும் மூலிகையை வளர்த்து வந்தார்கள் என்பது கோரக்கர் அருளிய சந்திரரேகை என்னும் நூலே இதற்கு சான்றாக விளங்குகின்றது


  திருநீற்றுப் பச்சிலையை கஷாயமாகவோ அல்லது பொடியாகவோ செய்து சாப்பிட்டு வந்தால் சுவாசம் சீராக நடைபெறுவதோடு சுவாசப் பாதையில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கிருமி தொற்று  ஏற்படுவது தடுக்கப்படும் மேலும் உடலுக்குத் தேவையான பிராண சக்தி முழுமையாக கிடைக்கும்


சுவாச மண்டலம் சீராக இயங்க


  திருநீற்றுப் பச்சிலை தூதுவளை இரண்டையும் சம அளவாக பொடி செய்து இதில் ஐந்து  கிராம் எடுத்து முந்நூறு மில்லி தண்ணீரில் கலந்து பாதியாக சுண்டக் காய்ச்சி காலை மாலை இருவேளையும் தொடர்ந்து பருகி வர தொண்டையில் உண்டாகும் கபமும் நுரையீரலில் ஏற்படும் சளியும் நீங்கி சுவாச தொந்தரவுகள் அனைத்தும் குணமாகி உடலுக்கு தேவையான பிராண சக்தி அதிகமாக கிடைக்கும்


   தினமும் உறங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக காய்ச்சி ஆறவைத்த பசும் பாலில் மூன்று கிராம் குப்பைமேனி பொடியை கலந்து பருகிவர  நெஞ்சு வலி நீங்கும் மூச்சுத்திணறல் குணமாகும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சுவாச பிரச்சனைகள் நீங்கி சீராக சுவாசம் நடைபெற இது உதவும்


அனைத்து வகையான விஷ கிருமிகளின் தொற்றுகளை அழிக்கும் ஆற்றல் குப்பைமேனிக்கு உண்டு


  வாரத்திற்கு இரண்டு நாட்கள் மதிய உணவில் குப்பைமேனிக் கீரையை பொரியலாகச் செய்து சாப்பிட்டு வர எந்த விதமான வைரஸ் கிருமிகளும் உடலில் தோன்றாது  இது  உறுதி


  இரண்டு கைப்பிடி நொச்சி இலையை தண்ணீரில் வேகவைத்து இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து இதில் வரும் நீராவியில் வேது பிடித்து வர  சுவாச தொந்தரவுகள் அனைத்தும் நீங்கும் சுவாசம் தங்குதடையின்றி சீராக நடைபெறும்


           வளமுடன் வாழ வாழ்த்துக்கள் 

                         சித்தர்களின் சீடன்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி