அல்சர் கிருமி
🇨🇭 #அல்சர்_கிருமியால்_புற்றுநோய் #வருமா❓
👉 ஹெலிகோபேக்டர் பைலோரி கிருமி(Helicobacter pylori) என்பது ஒரு பாக்டீரியா கிருமி.
இந்த கிருமி வயிற்றில் இருந்து, அதை வருடக்கணக்கில் கவனிக்காமல் இருந்தால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு உண்டு❗❗
🔴 ஹெச்-பைலோரி❓
இந்த பாக்டீரியாவைக் கண்டுபிடித்து அதற்கு வடிவம் கொடுத்தவர்கள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் பேரி ஜெ. மார்ஷல், ராபின் வாரென். இந்த நோயைக் கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு 2005-ல் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. மார்ஷல் இந்தக் கிருமியை தன் குடலில்தானே செலுத்தி சுய பரிசோதனை செய்து நிரூபித்தார். இந்தக் கிருமிகள் குடலின் உட்புறச் சுவர்களில் ஒட்டிக் கொண்டு இருக்கும். அப்படியே குடலில் அமிலத்தன்மையை உருவாக்கி, வாய்வையும் உண்டாக்கும். இந்த அமிலத்தாலும் வாய்வுனாலும் தான் நம் குடலில் அல்சர் போன்ற நோய்கள் உருவாகின்றன என்று சொல்லப்படுகிறது.
டென்ஷனாகும் போது மூளையின் கட்டளைப்படி வயிற்றில் அமிலங்கள் தோன்றும். அது அளவுக்கு மீறிப் போகும்போது குடலில் புண்கள் உருவாகலாம்.
மன உளைச்சல், கவலைப்படுதல், உணவு மாற்றம், கோபம், டென்ஷன் இதெல்லாம் கூட அல்சரை உருவாக்கும்.
ஆனால் சமீபகாலமாக ஹெச்-பைலோரி (ஹெலிகோபேக்டர் பைலோரி) என்ற ஒரு வகை பாக்டீரியாவால்தான் அல்சர் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஆனாலும், தொடர்ந்து நேரம் கடந்து உணவு உண்பது, அதிகக் காரமான உணவுகளை அடிக்கடி உண்பதும் அல்சரை தீவிரப்படுத்தக்கூடும்.
👉அல்சர் (குன்மம்) என்பது………
▶ தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம்.
▶ இரைப்பையில் புண் ஏற்பட்டால் ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ (Gastric ulcer) என்றும்,
▶ முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் ‘டியோடினல் அல்சர்’ (Duodenal ulcer) என்றும் அழைக்கிறோம்.
⭕ அல்சர் எப்படி உருவாகிறது❓
நம் இரைப்பை மற்றும் சிறுகுடலின் ஆரம்பப் பகுதியில்தான் அல்சர் உருவாகும். நாம் உண்ணும் உணவு இரைப்பைக்குச் சென்றதும் அங்கு அமிலங்களால் சூழப்பட்டு ஒருவகையான ஜீரண மாற்றத்தை அடையும். விரல் வெந்துவிடும் அளவிற்கு வீரியம் மிக்க அமிலம் அது. இரைப்பையின் சுவர்கள் வலுவானவை என்பதால் அமிலங்களால் ஒன்றும் ஆவதில்லை. ஆனால் ஹெச்-பைலோரி கிருமிகளாலோ பிற காரணங்களாலோ அமிலங்களின் உற்பத்தி அதிகமாகும்போது, இரைப்பையின் சுவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் அங்கே புண்கள் உருவாகும். அதைத்தான் நாம் அல்சர் என்கிறோம். இதைக் காலத்தோடு கவனிக்கத் தவறினால், நாளடைவில் இது இரைப்பைப் புண்ணாக மாறிவிடும்……
கவனிக்காமல் விட்டால் புற்றுநோயாக மாறுவதற்கு அதிக வாய்ப்புண்டு. அதிலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு சற்று அதிகம். அப்போது புண்ணில்…… ரத்தக் கசிவு ஏற்பட்டு ரத்த வாந்தி வரலாம். புண் இரைப்பையில் இல்லாமல், முன்சிறுகுடலில் இருந்தால், குடல் அடைப்பு ஏற்படுவதுண்டு. சமயங்களில் குடலில் துளை விழுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
🔴👉புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே...:
உணவு விழுங்க முடியாத பிரச்னை - புரையேறுதல் - குரலில் மாற்றம் ஆகிய அறிகுறிகள் ஒருங்கிணைந்து இருத்தல், உணவு விழுங்குதல் பிரச்னையுடன் முதுகில் வலி, வயிற்றுப் புண் உள்ளிட்டவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக எண்டோஸ்கோப்பி பசோதனை செய்யும் நிலையில் புற்று நோய் பாதிப்பை உடனடியாகக் கண்டுபிடித்துவிட முடியும்.
உணவுக் குழாயில் உள்ள புற்று நோய் பாதிப்பு, உடலின் பிற பகுதிகளுக்குப் பரவாமல் உள்ள நிலையில் மருந்துகள் மூலம் குணப்படுத்தி விட முடியும். எனவே ஆரம்ப நிலை பசோதனையே சிறந்தது.
⭕ சித்த மருத்துவத்தில்
குன்மம் ( அல்சர்) என்று சொல்லுவார்கள்
⭕👉 (அல்சர்) குன்மத்தில் எட்டு வகைகள்
அவை…………
▶ வலி குன்மம்,
▶ அழல் குன்மம்,
▶ இய குன்மம்,
▶ முக்குற்ற குன்மம்,
▶ வாயு குன்மம்,
▶ எரி குன்மம்,
▶ சக்தி குன்மம்,
▶ வளி குன்மம்
ஆகியன 8 வகைகள் ஆகும்.
⭕ ஹெச்-பைலோரி வரக் காரணம் என்ன❓
1. சுத்தமற்ற சுகாதாரமற்ற உணவை உண்ணுதல்.
2. பாத்திரங்களை சரிவர கழுவாமல் அதிலேயே சாப்பாடு போட்டுச் சாப்பிடுவது.
3. உணவை கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, மீதத்தை அப்படியே வைத்திருந்து, மீண்டும் ஒருமுறை சாப்பிடுவது.
4. கெட்டுப்போயிருந்தாலும், அதை ஃபிரிட்ஜில் வைத்து, நாள்பட்டு உண்பது.
5. பயணத்தின்போதோ, அவசரத் தேவைக்கோ சுகாதாரமற்ற ரோட்டோர ஹோட்டல்களில் சாப்பிடுவது.
6. திறந்து வைத்திருக்கும் உணவு, தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிடுவது.
இவையெல்லாம்தான் ஹெச்-பைலோரி கிருமி நம் குடலுக்குள் நுழையக் காரணமாகின்றன. இவற்றைத் தவிர்த்தாலே அல்சர் நமக்கு வராது.
⭕ அல்சருக்கான அறிகுறிகள் என்ன❓
⏩ இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். இதைத் தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும்.
▶எடை இழப்பு,
▶பசியின்மை,
▶வயிறு வீக்கம்,
▶குமட்டல்,
▶அவ்வப்போது வாந்தி வருதல்,
▶நெஞ்செரிச்சல்,
▶எப்போதும் வயிறு கபகப என்று எரிதல்,
▶பசியாக இருக்கும் என்று சாப்பிட்டாலும் எரிச்சல் குறையாமல் இருத்தல்,
▶எதையும் ருசித்துச் சாப்பிட முடியாமை.
▶குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும்.
▶பிறகு, வயிற்றில் வலி தோன்றும்.
▶குறிப்பாக, இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும்.
புண் உள்ள இடத்தில் அமிலம் படுவதால், இந்த வலி ஏற்படுகிறது.
▶அதுபோல் உணவைச் சாப்பிட்ட பின்பும் இதே வலி உண்டாகும். காரணம், புண்ணின் மீது உணவு படுவதால் இப்படி வலி ஏற்படுகிறது.
🉐👉பொதுவாக………
▶சாப்பிட்டதும் வயிற்று வலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர்.
▶சாப்பிட்டதும் வலி குறைந்தால், அது டியோடினல் அல்சர். இவற்றைத் தவிர, குமட்டலும் வாந்தியும் வரும்.
🉐 சரி, காரம் அதிகம் சாப்பிட்டால் அல்சர் வராது என்கிறீர்களா❓
காரமாக சாப்பிட்டதால்தான் அல்சர் வந்தது என்ற சொல்ல முடியாது. அல்சர் வந்த காலத்தில் குடல் புண்ணாகி இருக்கும்போது, காரம் சாப்பிட்டால் எரிச்சலும் வலியும் அதிகம் இருக்கும். அல்சர் சமயத்தில் காரமில்லாத உணவைச் சாப்பிட்டாலும் வலிக்கும்.
🈹 நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவதால் அல்சர் வருமா❓
குடலில் உணவு முற்றிலும் இல்லாத சமயத்தில், அதாவது நீண்ட நேரம் சாப்பிடவில்லை என்றால், செரிமானத்திற்காக இரைப்பையில் சுரந்த அமிலம் குடலை பாதிக்க ஆரம்பிக்கும். இது தொடர்ந்தால் நாளடைவில் குடலில் புண் ஏற்படும் ஹைச்-பைலோரி தாக்கப்பட்டவராக இருந்தால் இன்னும் எளிதாக குடலில் புண் உருவாகி விடும். எனவே நேரத்திற்கு கொஞ்சமாவது சாப்பிட்டு விட வேண்டும்.
⭕ அல்சர் வர ஹெச்-பைலோரி தவிர்த்து வேறு காரணங்கள் உண்டா❓
80 சதவீதம் ஹெச்-பைலோரிதான் அல்சர் வரக் காரணம். இது தவிர்த்து, தொடர்ந்து புகையிலை பயன்படுத்துதல், புகைபிடித்தல், அதிகளவு மது அருந்துதல், சில வலி நீக்கி மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுதல் ஆகிய காரணங்களால், அல்சர் வரக்கூடும்.
💊 #வருவதைத்_தடுக்க❓
⏩அல்சர் தீராத வியாதி அல்ல. ஓரிரு வாரங்களில் குணமாக்கிவிடலாம். இதற்கு உணவுக் கட்டுப்பாடும் பழக்கவழக்கமும் அவசியம். காரம், புளிப்பு, எண்ணெய்ப் பதார்த்தங்களை அறவே தவிர்த்து விட வேண்டும்.
⏩ உணவில் தயிர், மோர் அதிகம் சேர்க்க வேண்டும்.
⏩ காய்கறிகளை நிறைய சாப்பிட வேண்டும்.
⏩குழைந்த அரிசிச் சாதம், கீரை, மோர் அதிகம் சேர்க்க வேண்டும். கஞ்சி நல்லது.
⏩எண்ணெயில் பொரித்த உணவுகள், இனிப்புப் பலகாரங்கள், காரமான குழம்பு கூடவே கூடாது.
⏩எல்லாவற்றையும் விட, சாப்பாட்டை ஒரே நேரத்தில் விழுங்காமல், இடைவெளி விட்டு சிறிது சிறிதாக ஐந்து அல்லது ஆறு வேளைகூட உண்ணலாம்.
⏩ நேரத்துக்கு உணவைச் சாப்பிட வேண்டும்.
⏩உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். கவலை, கோபம், எரிச்சல் போன்ற மனநிலைகளின் போது சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
⏩சாப்பிடும்போது சந்தோஷமான மனநிலைக்கு மாறிவிடுங்கள்.
⏩இரைப்பைப் புண் உள்ளவர்கள் அடிக்கடி சிறிது சிறிதாக உணவை உண்பது நல்லது.
⏩மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும்.
⏩வேகவைத்த இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள்.
⏩விரைவு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள்.
⏩அதிக இனிப்புப் பண்டங்களையும், புளித்த உணவுகளையும் ஒதுக்குங்கள்.
⏩கீரைகளில் மணத்தக்காளியும், காய்கறிகளில் முட்டைக்கோஸும் இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்த உதவுகின்றன.
⏩எந்தக் காரணத்தைக் கொண்டும் பட்டினி கிடக்கக் கூடாது.
⏩சாப்பிட்டதும் படுக்கக்கூடாது.
⏩எச்.பைலோரி கிருமி அசுத்தமான தண்ணீர் மூலம்தான் பரவுகிறது. ஆகவே, இதைத் தடுக்கச் சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டியது முக்கியம்.
⏩புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, பான்மசாலா பயன்படுத்தக் கூடாது.
⏩மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகள், ஆஸ்துமா, அலர்ஜி நோய்களுக்குத் தரப்படும் ஸ்டீராய்டு மாத்திரைகள், உடல்வலி மாத்திரைகள் போன்றவற்றைத் தேவையில்லாமலும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.
⏩இரைப்பைப் புண் குணமாக, எல்லா விதக் கவலைகளில் இருந்தும் விடுபட வேண்டும்.
⏩மன அமைதியும் ஓய்வும் மிக முக்கியம். இதற்குத் தியானம் செய்வது நல்லதது.
இரைப்பைக்கு வலு சேர்க்கும் யோகாசனங்களும் உள்ளன. தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர் ஒருவரின் உதவியுடன் இவற்றை முறைப்படி செய்துவர, இரைப்பைப் புண் வருவதைத் தடுக்கலாம்
🇨🇭 #வீட்டு_கை_வைத்தியம்🇨🇭
💊மணத் தக்காளி கீரை💊
🇨🇭மணத்தக்காளி கீரை சூப் செய்வது எப்படி❓
💊தேவையான பொருள்கள்❓
மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு
மிளகு - 10 முதல் 15
சீரகம் - ஒரு ஸ்பூன்
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு துண்டு (இன்ஞ்)
கொத்தமல்லி விதை - ஒரு ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
வெந்தயம் - கால் ஸ்பூன்
மஞ்சள் - 2 சிட்டிகை அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
👉சூப் செய்யும் முறை❓
முதலில் கீரையை நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கி, அதிலிருக்கும் மண்ணெல்லாம் போகும்படி இரண்டு மூன்று முறை நன்கு அலசி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வெந்தயத்தை வெறும் வாணலியில் எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் சுத்தம் செய்துப் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கீரையைச் சேர்த்து நன்கு வேக விடுங்கள்.
பின்னர் அதில் மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி விதைகள், லேசாக எண்ணெய் இல்லாமல் வெறும் வாணலியில் வறுத்த வெந்தயம் ஆகியவற்றை ஒன்றிரண்டாகக் கொரகொரவென்றுப் பொடித்து கீரையுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து, சிறிது சுண்டும் வரை அடுப்பிலேயே வைத்திருந்து இறக்கி வைத்து, சிறிது சூடு குறைந்ததும் குடிக்கலாம்.
இந்த சூப்பை மற்ற வழக்கமாக நீங்கள் குடிக்கும் சூப்களைப் போன்று மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். குடற்புண்கள் இருப்பவர்கள், ஏன் இரைப்பையில் அழுகிற நிலையில் சீழ் வடியும் அளவுக்கு மோசமான புண்கள் இருந்தால் கூட இந்த சூப்பைத் தொடர்ந்து தினமும் கொஞ்சமாகக் குடித்து வந்தீர்கள் என்றால், அந்த புண்களை ஆற்றுவதற்கு இதைவிட சிறந்த அருமருந்து இருக்கவே முடியாது. இதை மிஞ்சிய ஒரு மருந்தை எந்த மருத்துவராலும் கூட கொடுக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.
Comments
Post a Comment