சரவாங்கி கசாயம்

 சரவாங்கிக் கசாயம் 

மூட்டு வலியைக் குறைக்கவும் உடல் எடையைக் குறைக்கவும் பயன்படும் மருந்து இது 

மூட்டு வலிகளில் மிகவும் மோசமான மூட்டு வலி சரவாங்கி என்ற ஆம ( கப ) வாதம் என்று அழைக்கப் படும் ருமாட்டாய்டு ஆர்த்திரைடிஸ்  ஆகும் 

கபத்தோடு வாதம் சேர்ந்து முட்டுகளின் இயக்கத்தை குறைத்து மூட்டுகளில் இறுக்கத்தை ஏற்படுத்தி மூட்டுகளின் இயக்கத்தையும் அமைப்பையும் மாற்றி விடும் பிரச்சினையைத்தான் சரவாங்கி என்று சொல்கிறோம் 

முடக்கு வாதம் என்பது சில நேரங்களில் வலி குறைவாகவும் சில நேரங்களில் வலி அதிகமாகவும் சில நேரங்களில் மருந்துகளின் துணையுடன் கட்டுக்குள் இருக்கும் சில நேரங்களில் என்ன மருந்து எடுத்தாலும் வலியும் வேதனையும் கட்டுப்படாமலும் வீக்கத்தோடும் வேதனையோடும் இருக்கும் 

மருந்து 

திரிகடுகு சூரணம் ..........  ஆறு கிராம் 

திரிபலா சூரணம் ...........  ஆறு கிராம் 

சுத்தி செய்த கொடிவேலி சூரணம் .........  இரண்டு கிராம் 

கோரைக்கிழங்கு சூரணம் .........  இரண்டு கிராம்

வாயு விடங்கம் சூரணம் .........  இரண்டு கிராம்

ஆகிய ஐந்து பொருட்களையும்

 நானூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் நன்கு காய்ச்சி

 நூறு மில்லி கசாயமாக சுருக்கி இறக்கி வடி கட்டி

 ஒரு வேளை மருந்தாக குடிக்க வேண்டும் 

நாள்தோறும் காலை இரவு என இரண்டு வேளைகள் உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னர் இவ்வாறு குடித்து வர வேண்டும் 

கடுமையான கசப்பு சுவையுடன் கூடிய கசாயம் இது 


இதை மருந்தாக அல்ல ஒரு மூலிகை தேநீராகப் பயன்படுத்தி நலம் அடையலாம் 

மூட்டு வலி 

மூட்டு வலிப் பிரச்சினைக்காக என்ன மருந்துகள் சாப்பிட்டு வந்தாலும் 

தொடர்ந்து இதை ஒரு மூலிகை தேநீராகக் குடித்து வர

 வலிகளும் வேதனைகளும் படிப்படியாகக் குறைந்து வருவதையும் மூட்டுகளின் இயக்கம் மேம்பட்டு வருவதையும்  உணர முடியும் 

உடல் எடை குறைய 

உணவு முறை மாற்றம் உடல் பயிற்சி எவ்வளவு கடைப் பிடித்தாலும் மருத்துவ சிகிச்சை எடுத்தாலும் உடல் எடை குறையவில்லை என்னும் போது 

 தொப்பை இடுப்பு பிட்டப் பகுதி போன்ற இடங்களில் சேரும் கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைத்து உடல் அமைப்பு மேம்பட உதவும் கசாயம் இது 


குறிப்பு 

சுத்தி செய்த கொடி வேலி  மட்டுமே பயன்படுத்த வேண்டும்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி