தலைவலி - 1

 #தலைவலி_பகுதி_1


இன்றைய கால சூழ்நிலையில் அனைத்து தரப்பு மக்களிடத்திலும்  பொதுவாக காணப்படும் நோய் அறிகுறிகளில் ஒன்று தலைவலி. சிலருக்கு இந்த பிரச்சனை மிகப் பிரதானமாகவும் தீவிரமாகவும் இருக்கிறது.

தன் வாழ்நாளில் ஒருமுறை கூட தலைவலியை அனுபவிக்காத நபர்களை பார்ப்பது மிக மிகஅரிது.


கொலை வலியை கூட தாங்கிவிடலாம், ஆனால் இந்த தலைவலியை தாங்குவது மிகக் கடினம் என்று பலரும் கூற கேட்டிருப்போம்.

அந்த அளவுக்கு தலைவலி எனும் நோய் பல்கிப்பெருகி பரவலாக எல்லோரிடத்திலும் காணப்படுகிறது.


மைக்ரேன் தலைவலி, முன்பக்க தலைவலி, பின்பக்க தலைவலி, டென்ஷன் தலைவலி மற்றும் பொதுவாக காணப்படும் அனைத்து விதமான தலைவலிகள் பற்றியும், அது உருவாகும் காரணங்கள் பற்றியும் விரிவாக காண்போம்.


பல்வேறு காரணங்களால் ஒரு மனிதனுக்கு தலைவலிகள் உருவாகும் என்பதை தொன்மையான சீன அக்குபங்சர் மருத்துவம் மிகத்தெளிவாக கூறுகிறது, 

● பரம்பரை குறைபாடுகள். 

   (தாய்-தந்தையிடமிருந்து 

    குழந்தைக்கு ஏற்படும் குறைபாடு)

● உணர்ச்சிகள்.

   புறச்சூழல் மற்றும் மன 

   அழுத்தங்களால் நமக்குள்

   உருவாகும் உணர்ச்சிகளான

 - கோபம்

 - கவலை

 - சோகம் மற்றும் வருத்தம்

 - பயம்

 - அதிர்ச்சி

 - மிக்குணர்வு

 - குற்ற உணர்வு

 - அவமானம்

 ● அதிகமான வேலை

 ● அதிகப்படியான காம நுகர்வு

 ● ஒழுங்கற்ற உணவு முறை

 ● அதிர்ச்சி

 ● பேறுகாலம்

 ● வெளிப்புற  காரணிகளான

 - வெப்பம்

 - கோடை வெப்பம்

 - குளிர்

 - ஈரம்

 - காற்று

 - வறண்ட தன்மை.

போன்ற பற்பல காரணங்களால் தலைவலியானது உண்டாகிறது.


நோய்நாடி நோய் முதல்நாடி எனும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, எதன் வழியாக பிரச்சனை வந்ததோ அதனை மிகச்சரியாக கண்டறிந்து, அதன்பொருட்டு சிகிச்சை செய்தால் எப்பேர்பட்ட தலைவலியும் மிக எளிதாகவும் வேகமாகவும் குணமாகும் என்பது சர்வ நிச்சயம்.


1.பரம்பரை குறைபாடுகள்.


     மனித உடலின் அடிப்படை கட்டமைப்பானது அவரவர் தாய் தந்தையிடமிருந்தே பெறப்படுகிறது.

 சரியான உணவுமுறை, வாழ்க்கை முறை, காலநிலையில் வாழ்ந்த போதும் கூட சிலருக்கு அடிக்கடி நோய்கள் ஏற்படுவதை பார்க்கமுடிகிறது, இது பரம்பரை பிரச்சினைகள் என்று அறியப்படுகிறது.


பொதுவாக பெற்றோரின் ஆரோக்கியம்.

கரு உண்டாகும் போது பெற்றோரின் உடல் மற்றும் மனநிலை,

மற்றும் கர்பகாலத்தில் தாயின் ஆரோக்கியம் ஆகிய மூன்று விஷயங்கள் ஒரு குழந்தையின் உடலமைப்பு மற்றும் ஆரோக்கியத்தின் மீது ஆளுமை செலுத்துகிறது.

இந்த காரணிகளில் ஏதேனும் ஒன்றால்  மனிதன் பாதிக்கப்படும் போது  உடலின் ஆரோக்கியம் சீர்கெடுவது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் தலைவலி ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது.


சிறுவயதில் சிலருக்கு விட்டுவிட்டு அடிக்கடி தலைவலி வரும், சிலருக்கு தொடர்ச்சியாக தலைவலி இருக்கும்,

பொதுவாக 7 முதல் 10 வயதுக்குள் இதன் அறிகுறிகள் தீவிரமாக தெரிகிறது.


தாய் தந்தையின் Qi மற்றும் Essence'இல் குறைபாடு இருக்கும் போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தையின் pre-Natal (பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் எஸன்ஸ்) எஸன்ஸானது இயற்கையாகவே பலகீனமாக இருக்கிறது.

இதனால் சிறுவயதிலேயே சிறுநீரகம் மற்றும் கல்லீரல் குறைபாடு ஏற்பட்டு பின்னாட்களில் தலைவலியை உண்டாக்குகிறது.

பரம்பரையாக வரும் சிறுநீரக மற்றும் கல்லீரல் சக்தி குறைபாட்டால் சிறுநீரை அடக்கமுடியாமல் போதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உயிர் ஆற்றல் குறைபாடு, லேசான தலைவலி, கிட்டப்பார்வை போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.


பொதுவாகவே ஒரு குழந்தை உருவாகும் தருணத்தில் பெற்றோர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், மாறாக அதிகப்படியான வேலைபளு, அதீத காம நுகர்வு, மது மற்றும் போதை பொருட்கள், அதிக இரசாயனம் சார்ந்த மருந்துகள் உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால் பெற்றோரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தால், உருவாகும் குழந்தையும் திடமான அடிப்படை கட்டமைப்பு இல்லாத குழந்தையாகவே உருவாகிறது, இது போன்ற குழந்தைகளும் எதிர்காலத்தில் தலைவலி பிரச்சனையால் பாதிக்கக்கூடும்.


பெற்றோரின் குறைபாடுகள் குழந்தையின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை மட்டுமே பாதிக்கும் என்றில்லை, நுரையீரல், மண்ணீரல், இதயம் போன்ற உறுப்புகளும் பாதிக்கக்கூடும்.


உதாரணமாக, அதிகப்படியான உடலுழைப்பு காரணமாக பெற்றோரின் ஆரோக்கியம் சீர்கெட்ட நேரத்தில் உருவான குழந்தைக்கு மண்ணீரல் பலகீனம் இருக்கும்.

அதிகப்படியான போதைப்பொருள்கள், இரசாயன மருந்துகளால் பாதிப்படைந்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.


மண்ணீரல் பிரச்சனை கொண்ட தாய்-தந்தைக்கு பிறக்கும் குழந்தைக்கு பசியின்மை, செரிமான கோளாறுகள், ஊட்டச்சத்து குறைபாடு, தளர்வான தசைகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும், இவர்களுக்கு முன் நெற்றியில் தலைவலியானது ஏற்படும்.


நுரையீரல் குறைபாடுள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும், சுவாச பிரச்சனை, தோல் அலர்ஜி, மற்றும் கக்குவான் இருமல் போன்ற பிரச்சனைகளும், இவர்களுக்கு இடம்விட்டு இடம் நகரக்கூடிய தலைவலி ஏற்படும்.


இதயம் சார்ந்த குறைபாடு கொண்ட அம்மா-அப்பாவிற்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கனவுகள் நிறைந்த தூக்கம், அடிக்கடி தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளுதல், பதட்டம், 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இரவில் திடீரென எழுந்து அழுதல், போன்ற பிரச்சனைகள் இருக்கும், இவர்களுக்கு நெற்றியில் அல்லது தலை முழுவதும் தலைவலியானது வியாபித்து இருக்கும்.

கர்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் விபத்து மற்றும் அதிர்ச்சி ஆகிய காரணங்களாலும் கருவில் உள்ள குழந்தை பாதிக்கப்பட்டு எதிர்காலத்தில் தலைவலியானது உண்டாகும்.


தொடரும்.


அடுத்த பதிவில் உணர்ச்சிகளால் ஏற்படும் தலைவலி பற்றி பார்ப்போம்.


மகேந்திரன்.

ஜேடர்பாளையம்.

நாமக்கல் மாவட்டம்.

cell.9597820861.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி