சர்க்கரை நோய் அறிகுறி

 *                    சர்க்கரை நோய் 

    வரும்போது ஏற்படும் அறிகுறியும்        

       வராமல் தடுக்கும் வழிமுறையும்


சர்க்கரை நோய் வரும்போது முதலில் உடலில் காணும் சில அறிகுறிகள்


வாயில் தித்திப்பு சுவை உண்டாகும்

அதிக நீர் வேட்கை தாகம் ஏற்படும்

உடலில் சோம்பல் களைப்பு உண்டாகும்

உடம்பில் அதிகமாக அழுக்கு சுரக்கும்

தேகம் முழுதும் எரிச்சல் கானும்

கால்கள் லேசாக மரத்துப்போகும்

சிறுநீரின் நிறம் மாறும் 

உடம்பில் நாற்றம் ஏற்படும் 

தூக்கம் களைப்பு அதிகமாக உண்டாகும் அதிகமாக வியர்வை சுரக்கும் 

உடல் கனமானதாக ஒரு உணர்வு உண்டாகும் 

தேகத்தில் ரோமங்கள் நகங்கள் இவை சீக்கிரமாக வளரும் 

குளிர்ச்சியான இனிப்பான உணவுகளின் மேல் பிரியம் உண்டாகும்

வாய் தொண்டை இவைகள் உலர்ந்து போகும் உடம்பில் அழுக்கு சேரும்

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியநிலை ஏற்படும் சிறுநீரில் ஈ மற்றும் எறும்பு சிறு சிறு பூச்சிகள் மொய்க்கும்


வழக்கத்திற்கு மாறாக இந்த மாற்றங்கள் உடலில் தோன்றினால் சர்க்கரை நோய் வருவதற்கான அறிகுறிகள் என உணர்ந்து கொள்ள வேண்டும்


சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வைத்திய முறையை தெரிந்து கொள்வோம்


தேவையான பொருட்கள் 


   கரிசலாங்கண்ணி 100 கிராம்             

                கீழாநெல்லி 100 கிராம்


       இவைகளை பொடியாக செய்து கொண்டு காலை மாலை இரண்டு வேளையும் தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம் பெறும் இதன் விளைவாக சர்க்கரை நோய் உடலில் தோன்றாது 


இன்னொரு வைத்தியமுறை

  இதற்கு தேவையான பொருட்கள்

         கரிசலாங்கண்ணி 100 கிராம் 

                           தூதுவளை 25 கிராம்          

                       முசுமுசுக்கை 25 கிராம்

                                       சீரகம் 25 கிராம் 


   இவைகளை பொடியாக செய்து கொண்டு காலை மாலை என இரண்டு வேளையும் மூன்று  கிராம் அளவு எடுத்து இதை பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் சர்க்கரை நோய் எப்போதும் தோன்றாது 


மேலும் 

உடலில் உஷ்ணம் தீரும் 

கணையம் முறையாக இயங்கும்

சளி இருமல் உடனே குணமாகும் தேவையற்ற கொழுப்புகள் குறையும் பித்தத்தைத் தணிக்கும் தலை கிறுகிறுப்பு மயக்கம் சோகை இவைகள் 

குணமாகும் கல்லீரல் பலம் பெறும்


இதை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் எப்பொழுதும் வராது மேலும் பல நன்மைகள் இந்த மருந்தால் உண்டாகும்


          வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

               பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி