குப்பைமேனி உப்பு
குப்பைமேனி உப்பு:-
குப்பைமேனிச் சாறு அரை லிட்டர் அளவில் எடுத்து, அதில் அரை கிலோ அளவு கல்லுப்பைக் கொட்டிக் கரைத்து அடுப்பிலேற்றி சிறு தீயாய் எரிக்கவும். பின்னர் சாறு சுண்டி, உப்புப் படிவங்கள் சட்டியில் காருப்பாய் படிய ஆரம்பிக்கும். இதனைச் சுரண்டி எடுத்து தூள் செய்து கொள்ளவும். உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்கள் ஏதேனும் ஒரு கீரையை எலுமிச்சைச் சாறு விட்டுக் கடைந்து, அதில் தேவைக்கேற்ப இந்த உப்பு சேர்த்து, கீரையை மட்டும் காலை உணவாக இரு மாதங்கள் உண்ண வேண்டும். முத்தோஷங்களும் தன்னிலையடைந்து, கொழுப்பு குறைந்து உடல் எடை சீராகிவிடும்.
மேனி உப்பை காய்கறிக் கலவையுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். நார்த்தங்காய் ஊறுகாயில் மேனி உப்பு சேர்த்து பயன்படுத்த நல்ல ஜீரணம் உண்டாகும். தயிர் சாதம், மோர் சாதத்திற்கும் மேனி உப்பைப் பயன்படுத்த, மிக பலனுண்டாகும்.
பெண்களுக்கு மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்றுவலி, இடுப்பு வலி குணமாக, இரண்டு சிட்டிகை மேனி உப்பை மோரில் கலந்து சாப்பிட்டால் உடனே குணப்படும்.
Comments
Post a Comment