சிறுகுறிஞ்சான் வைத்தியம்

 சிறுகுறிஞ்சானின் அற்புத மருத்துவ பயன்கள்


1.நீரிழிவு நோய் (Diabetes) உள்ளவர்கள் கட்டுப்பட சிறுகுறிஞ்சான் இலைகளுடன் சம அளவு நாவற்கொட்டைகளை தனித்தனியாக நிழலில் உலர்த்தி  இடித்து தூளாக்கி அதனை சலித்து காற்று புகா டப்பாக்களில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி தூளை வாயிலிட்டு வெந்நீர் குடித்துவர விரைவில் நீரிழிவு நோய் கட்டுப்படும்.


2.சுவாச காசம் அதாவது மூச்சு திணறல் மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறுகுறிஞ்சானின் வேர் சிறந்த மருந்தாகும். இத்துடன் ஒரு சிட்டிகை, சுக்கு, மிளகு, திப்பிலி மற்றும் வேர் இவற்றை தூளாக்கி ஒரு தேக்கரண்டி பொடியுடன் வெந்நீர் சேர்த்து குடித்து வர விரைவில் குணமாகும்.


3.உடலில் தோன்றும் வாயு பிரச்சனை, அஜீரணம் போன்ற காரணங்களினால் வயிற்றில் வாயுவின் சீற்றம் மிகுந்து குடலின் உட்புறச் சுவர்களைப் பாதிக்கிறது. மேலும் மது, புகை போன்றவற்றாலும் குடல் பாதிக்கப்படும். இதற்கு குறிஞ்சாக் கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் விரைவில் விரைவில் குணமாவதுடன் வயிற்றில் இருக்கும் கிருமிகள் மடியும்.


4.பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்தால் குறிஞ்சாக் கீரையை கடிபட்ட இடத்தில் வைத்து கட்டி, அதன் இலைகளை கஷாயம் செய்து சாப்பிட்டால் விரைவில் விஷம் முறியும்.


5.ஒவ்வாமையால் (Allergy) பாதிக்கப்பட்டவர்கள் சிறுகுறிஞ்சான் வேரைக் தூள் செய்து அடிக்கடி சாப்பிட்டு வர வாந்தி ஏற்பட்டு விஷம் வெளியாகும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி