உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம்

 சித்தர்கள் அருளிய சித்தர்கள் அருந்திய

அந்தக்கால குளிர்பானம்  இது


       வால்மிளகு ஏலக்காய் இரண்டையும் சமமாக பொடி செய்து  அதில் 5 கிராம் பொடியை 200 மில்லி கரும்புச் சாற்றில் கலந்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்


கை கால் எரிச்சல் காணாமல் போகும் 

பித்த நோய்கள் முழுவதும் நீங்கும் பெண்களின் வெட்டைச்சூடு தணியும்

உள்ளுறுப்புகள் பலம் பெறும் 


  சப்த தாதுக்களான நிணநீர் இரத்தம் தசை கொழுப்பு எலும்பு மச்சை சுக்கிலம் என்கின்ற அனைத்திற்கும் பலம் உண்டாகும்


உடலில் நோய் வராமல் நீண்ட நாட்கள் வாழ சித்தர்கள் அருந்திய பானம் இது


பானம். 2


  பனங்கற்கண்டு  மிளகு இவைகளை பொடியாக செய்து இதில் ஒரு ஸ்பூன் பசுவின் மோரில்கலந்து விடியற்காலை பொழுதில் பருகிவந்தால் உடலில் இருக்கின்ற அனைத்து விதமான உஷ்ணங்களும்  தணிந்து விடும்


உடலுக்கு செரிமானத்தை தந்து பசியை உண்டாக்கி தீமையை தருகின்ற பித்தத்தைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும் உன்னத பானம் இது


பானம் 3


   தேன் மற்றும் இஞ்சி சாறு இரண்டையும் வகைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து தேங்காய் இளநீரில் கலந்து குடித்து வந்தால் இதனால் உடல் முழுவதும் குளிர்ச்சி உண்டாகும் 


இளமை நீடிக்கும் உடலில் தோல் சுருக்கம் ஏற்படாது நாடி நரம்புகளுக்கு வலிமை கிடைக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று ஆரோக்கியமாக வாழ்வதற்கு சித்தர்கள் அருளிய  சிறந்தபானம் இது


அடுத்து    


    கால் லிட்டர் தண்ணீரில் யானை நெருஞ்சில் இலையை போட்டு நன்றாக அலசி வர தண்ணீரானது விளக்கெண்ணை போல வழவழப்பாக மாறிவிடும் இதில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும்


உடல் உறுப்புகள் அனைத்தும் உறுதி பெறும் ஆண்களின் விந்து ஸ்கலிதம் குணமாகும் 


பெண்களுக்கு இருக்கின்ற வெள்ளை வெட்டை உஷ்ண நோய்களுக்கும் இது நல்ல மருந்தாக செயல்படும்


குறிப்பு


  காலைப்பொழுதில் பனியில் மலர்ந்த மலர் வாடாமல் இருப்பதைப்போல உடலை குளிர்ச்சியாக வைத்திருந்தால் உள் உறுப்புகளும் வாடாமல் வலிமையாக இருக்கும் 


  மாறாக உடலில் வெப்பம் அதிகரித்து விட்டால் இதனால் உள் உறுப்புகள்  வாடிய மலராக உலர்ந்து தளர்ந்து விடும்


ஆகவே உடலின்  குளிர்ச்சியை காக்க

சித்தர்கள் அருளிய குளிர் பானங்களை பருகுங்கள் ஆரோக்கியமாய் திகழுங்கள்


         வளமுடன் வாழ வாழ்த்துக்கள் 

  

                     சித்தர்களின் சீடன்

               பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி