நெல்லிக்கனி
#நெல்லிக்கனியில்_நிறைந்துள்ள_10_அற்புத_மருத்துவ_பயன்கள்:
நெல்லிக்கனியில் பல மருத்துவப்பயன்கள் அடங்கியுள்ளன, இதில் நார்சத்து, விட்டமின்கள், கரோடின், சோடியம், இரும்புசத்து மற்றும் புரோட்டீன்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது, இந்த அற்புதம் நிறைந்த கனியை நாம் உணவில் சேர்த்துக்கொண்டால் அறிவாற்றல் பெருகும் மேலும் நோய்கிருமிகளிடமிருந்து நமது உடலை பாதுகாக்கும்.
நெல்லிக்கனியின் மருத்துவ பயன்கள்
காசநோய் உள்ளவர்கள் நெல்லிக்கனி சாற்றை தினமும் குடித்துவந்தால் நோயின் தாக்கத்தை சற்று குறைக்கலாம்
தேவையற்ற கொழுப்புகளினால் உடல் பருமன் அதிகரிக்கிறது எனவே உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் இதை சாப்பிடுவதால் கொழுப்பு குறைக்கப்படுகிறது
மலச்சிக்கல் உள்ளவர்கள் நெல்லிச்சாறு குடித்தால் இந்த பாதிப்பிலிருந்து விடுதலை பெறலாம்
வயிற்று போக்கு மற்றும் இரைப்பை கோளாறு போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது
தினம் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் புதிய இரத்த சிவப்பணுக்களை தோற்றுவிக்கிறது மேலும் இரத்தத்தில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்கிறது
சக்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து, இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து சீராக வைக்க உதவுகிறது
இதய துடிப்பின் அளவை சீர் செய்கிறது
இது நமது உடல் சூட்டை தனித்து உடலை குளிர்ச்சியடைய செய்கிறது
வாய்ப்பகுதியில் ஏற்பாடு புண்கள் மற்றும் பற்களில் ஏற்படும் இரத்த கசிவு போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது
இவற்றில் கேன்சர் போன்ற கொடிய நோய்களை தடுக்கும் அளவுக்கு சத்துக்கள் நிறைந்துள்ளது எனவே தினமும் ஒரு நெல்லி கனி அல்லது நெல்லிக்கனி சாறு எடுத்துக்கொண்டால் இதன் பயன்களை பெறலாம்.
#நோயற்ற_வாழ்விற்கு
Comments
Post a Comment