பித்த மயக்கம்
*#பித்தமயக்கம்,
#பிரஷர்_மயக்கம் தீர
எளிய வைத்தியம்*
*1, சீரகம் சுக்கு ஏலக்காய் நெல்லிவற்றல் இவைகளை சம அளவாக சூரணம் செய்து கொண்டு பால் அல்லது தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தால் ஏற்படுகின்ற மயக்கம் அனைத்திற்கும் இதன்மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் இதில் சிறிது இந்துப்பு கலந்து இதில் ஐந்து கிராம் சூரணத்தை எடுத்து காலையில் சாப்பிடுகின்ற முதல் அன்னத்தில் பிசைந்தும் சாப்பிட்டு வரலாம் இதனால் உடல் எரிச்சல் குறையும் உடல் உஷ்ணம் தணியும் ரத்தத்தில் வெப்பம் தணிந்து பித்த மயக்கம் குணமாகும்*
*2, பொன்னாங்கண்ணி 100 கிராம்* *கரிசலாங்கண்ணி 75 கிராம்*
*சீரகம் 50 கிராம் மிளகு 25 கிராம்*
*இவைகளை பொடியாக செய்து கொண்டு இதில் மூன்று கிராம் அளவு எடுத்து சுடுநீர் கலந்து பருகி வந்தால் உடல் உஷ்ணம் பித்தமயக்கம் பிரஷர் மயக்கம் குணமாகும். இதை காலையில் சூப்பாக செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி உண்டாகும் நோயால் தேகம் மெலிந்து இருப்பவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும் நல்ல மருந்தாக இது செயல்படும் மேலும் சளி ஈளை தொண்டைக்கட்டு கபம் இவைகள் நிவர்த்தியாகியாகும் உடல் வலிமை பெறும் ஆண் பெண் இருபாலருக்கும் சுக்கில சுரோணிதம் மிகுதியாக உற்பத்தியாகும் பொதுவாக உடலுக்கு அனைத்து வகையிலும் நல்ல ஆரோக்கியத்தை தரும்*
*3, இரண்டு ஆடாதொடை இலையுடன் பத்து மிளகு மிளகின் அளவு சீரகம் சேர்த்து கசாயமாக செய்து இதை அதிகாலையில் பொழுதில் சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம் தீரும் இதை தொடர்ந்து ஒரு மண்டல காலம் சாப்பிட்டுவந்தால் உயர் ரத்த அழுத்தம் என்கின்ற பிரஷர் அளவு குறைந்து மயக்கமும் ஏற்படாது*
#பித்த_மயக்கம் தீர கசாயம்*
*வரக்கொத்தமல்லி இரண்டு ஸ்பூன், எலுமிச்சை இலை பத்து, அகத்திக்கீரை ஐந்து ஐந்தாறு இலைகள், இவைகளை ஒன்றிரண்டாக இடித்து இரண்டு டம்ளர் தண்ணீரில் சேர்த்து பாதியாக சுண்ட வைத்து காலைப் பொழுதில் தினந்தோறும் குடித்துவந்தால் உடனே உடலில் சூடு குறைந்து விடும் மேலும் பித்த மயக்கம் தலை கிறுகிறுப்பு குணமாகும் சகலவித பித்தத்தையும் உடல் சூட்டையும் தனித்து உடலுக்கு குளுமை தரும் பத்தியம் இல்லாத எளிய வைத்திய முறை இது*
Comments
Post a Comment