5 மரப்பட்டை கசாயம்
ஐந்து மரப் பட்டை கசாயம்
நரம்பு முடிச்சு நோய் காரணமாக வரும் புண்கள்
சர்க்கரை நோய் காரணமாக வரும் புண்கள்
கால்களில் ஏற்படும் ஆறாத புண்கள்
உடலில் ஏற்படும் ஆறாத புண்கள்
மோசமான தோல் நோயான சொரியாசிஸ் நோய் புண்கள்
பெண்களுக்கு வெள்ளைபடுதல் காரணமாக ஏற்படும் புண்கள்
மெனோபாஸ் ஆன பெண்களின் பிறப்பு உறுப்பு வறட்சி காரணமாக ஏற்படும் புண்கள்
ஆகிய அனைத்து நாட்பட்ட புண்களையும், ஆறாத குழிப் புண்களையும் குணமாக்க உள் மருந்தாகவும் புண்களைக் கழுவுவதற்கு வெளிப்புற மருந்தாகவும் பயன்படும் அற்புதமான மருந்து இது
அரச மரப் பட்டை ............ இரண்டு கிராம்
ஆலமரப்பட்டை............ இரண்டு கிராம்
பூவரசு மரப் பட்டை............ இரண்டு கிராம்
அத்தி மரப் பட்டை ............ இரண்டு கிராம்
இத்தி மரப் பட்டை ............ இரண்டு கிராம்
ஆகிய ஐந்து பொருட்களையும் கொடுத்துள்ள அளவின் படி எடுத்து
நானூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் காய்ச்சி நூறு மில்லி கசாயமாக சுருக்கி இறக்கி வடிகட்டி ஒரு வேளை மருந்தாக குடித்து வர வேண்டும்
மிகவும் துவர்ப்பு சுவை உள்ள கசாயம் இது
நாள்தோறும் காலை இரவு என இரண்டு வேளைகள் உணவுக்கு முப்பது நிமிடங்களுக்குமுன் சாப்பிட வேண்டும்
நரம்பு முடிச்சி நோய் என்ற வெரிகோஸ் வெயின் நோய் வெரிகோஸ் அல்சர் அதனால் ஏற்படும் புண்கள்
கால்களில் இருக்கும் கருமையான நிறம் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே நரம்பு சுருள் நோய் குணமாகும்
மருந்து சாப்பிட்டால் குணமாகி சில மாதங்கள் கடந்த பின்னர் மறுபடியும் புண்கள் ஏற்படும் நரம்பு சுருள் நோயைக் குணப் படுத்தும் அரு மருந்து இது
Diabatic foot ulcer என்ற சர்க்கரை நோயினால் வரும் புண்களையும் ஆற்றக் கூடிய அருமையான மருந்து இது
பெண்களின் வெள்ளை படுதல் பிரச்சினையால் பிறப்பு உறுப்புகளில் அரிப்பு ஏற்பட்டு அதனால் ஏற்படும் புண்கள்
மெனோபாஸ் ஏற்பட்ட மாதவிலக்கு முடிந்த பெண்களின் பிறப்பு உறுப்பில் வறட்சி ஏற்பட்டு அதன் காரணமாக ஏற்படும் புண்கள்
தோலில் ஏற்படும் குழிப்புண்கள் ஆழமான புண்கள் குணமாக வேறு இடத்தில் இருந்து தோலை எடுத்து வைத்து தைத்து அறுவை சிகிச்சை செய்யக் கூடிய ஆறாத புண்களையும் குணமாக்கும் அரு மருந்து இது
Drug resistance bacteria என்ற மருந்துகளுக்குக் கட்டுப்படாத பாக்டீரியா பாதிப்புகள் காரணமாக வரும் புண்கள் போன்றவற்றையும் குணப் படுத்தும் மருந்து இது
இந்தக் கசாயத்தை காயங்களைக் கழுவும் மேற்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்தி விரைவில் நலம் பெறலாம்
Comments
Post a Comment