தலைவலி - 3

 #தலைவலி_பகுதி_3


கடந்த இரு பகுதிகளில் தலைவலியின் தன்மை மற்றும் உருவாகும் காரணங்கள் பற்றி சீன அக்குபங்சர் முறையில் வகரிவாக பார்த்தோம்.


அதிகமான உடலுழைப்பு,

அதிகமான பாலியல் செயல்பாடு,

மற்றும் முறையற்ற உணவுமுறையால் ஏற்படும் தலைவலிகள் பற்றி இன்று பார்ப்போம்.


அதிகப்படியான உடலுழைப்பு.


ஒவ்வொரு உயிருக்கும் தேவையான அளவு உணவு, தேவையான அளவு உடலுழைப்பு, மற்றும் தேவையான அளவு ஓய்வும் தேவை, இந்த மூன்றும் சரி விகிதத்தில் இருந்தால் மட்டுமே ஆரோக்கியம் என்பதும் மேலோங்கி இருக்கும்.


ஒருசிலர் தேவையான ஓய்வின்றி அதிகப்படியான உடலுழைப்பில் ஈடுபடுகிறார்கள், இதனால் மண்ணீரல் Qi பாதிப்படைகிறது, இதுவே தொடரும் பட்சத்தில் சிறுநீரக Yin'னிலும் பாதிப்பு ஏற்படும்.

சிறுநீரக Yin பற்றாக்குறையால் ஒட்டுமொத்த தலையிலும் தலைவலியானது ஏற்படலாம், அல்லது கல்லீரல் வெப்பத்தை ஏற்படுத்தி மைக்ரேன் தலைவலி மற்றும் தலையில் உள்ள பித்தப்பை சக்தியோட்ட பாதைகளில்(பக்கவாட்டு தலையில்)  வலியை உண்டுபண்ணும்.


அதிகமான காமநுகர்வு.

மாதம் ஒரு போகம் என்பது சித்தர் வாக்கு, அதிகமான பாலியல் செயல்பாடுகள் என்பது தலைவலிக்கான ஒரு பொதுவான காரணமாக சீன அக்குபங்சர் மருத்துவமுறையில் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஆண்கள் இந்த பிரச்சனையால் அதிகம் பாதிப்படைகிறார்கள்.


பொதுவாக பாலியல் உறவின் போது தற்காலிகமாக சிறுநீரக எஸன்ஸ் இழப்பு ஏற்படுகிறது, அது மீண்டும் சில நாட்களில் மறு உருவாக்கம் பெற்று இயல்புநிலைக்கு வந்துவிடும், இதனால் எந்த பாதிப்பும் இல்லை.


ஆனால் சிலர் சிறுநீரக Essence மறுஉருவாக்கம் நிகழ்வதற்கு கூட வாய்ப்பளிக்காமல் தொடர்ந்து அதிகமான காம செயல்களில் ஈடுபடுவதால் சிறுநீரகத்தில் சக்தி குறைபாடு ஏற்படுகிறது, அவர்களின் அடிப்படை ஆரோக்கியத்தை பொறுத்து யின் அல்லது யாங் ஏதாவது ஒன்றில் பிரச்சனை ஏற்படும், இதில் பெண்களை காட்டிலும் ஆண்களே அதிகம் பாதிப்படைகிறார்கள். 

பெண்களை பொறுத்தவரை சிலர் குறுகிய கால இடைவெளிக்குள் பல குழந்தைகளை பெற்றெடுக்கின்றனர்,  இதனால் சிறுநீரகம் மற்றும் கர்பப்பை ஆகியவை பலகீனம் அடைகிறது, இது சிறுநீரக Essence குறைவதற்கான   மிக முக்கிய கிரணமாகும். பெண்களுக்கு ஏற்படும் அதி உதிரப்போக்கு (menorrhagia) எனும் பிரச்சனை பல ஆண்டுகள் தொடரும்போது சிறுநீரகத்தில் Essence குறைபாடு ஏற்படும்.

 இந்த குறைபாடுகளால் தலையின் இருபக்கமும் அல்லது தலை முழுமைக்கும் தலைவலி ஏற்படலாம்.

குறிப்பாக சிலருக்கு உடலுறவுக்கு பின்பு  தலைவலி அல்லது தலைசுற்றல் வருவதை உணர்ந்திருப்பீர்கள்.


முறையற்ற உணவுமுறை.


உணவுமுறைக்கும் தலைவலிக்கும் நெருங்கிய மற்றும் ஆழமான தொடர்புண்டு.

முறையற்ற உணவுமுறைகளால் உடலின் பல்வேறு உள்ளுறுப்புகள் பாதிப்படைந்து, தலைவலிகள் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.


தொடர்ந்து உடலின் தேவைக்கு போதுமான அளவில் உணவு உட்கொள்ளாத போது Qi மற்றும் blood உற்பத்தி குறைந்து உச்சந்தலை பகுதியில் தலைவலியை உண்டாக்கும்.


தேவைக்கு அதிகமாக உணவு உண்ணும்போது இரைப்பையிலுள்ள Qi'யின் ஓட்டம் தடைபட்டு மண்ணீரலும் பலகீனமடையும், இதன் காரணமாக நெற்றி பகுதியில் குத்தும் தன்மைகொண்ட தலைவலி உருவாகிறது.


அதிக சூடான மற்றும் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுவதை சிலர் வாடிக்கையாக கொண்டிருப்பார்கள்,

உதாரணமாக, மசாலா, மாமிசம், மது, போன்ற பொருட்களை தொடர்ந்து எடுத்துக்கொள்வதால் கல்லீரலில் பற்றி எரியும் அளவுக்கு சூடு (Liver frie) உண்டாகிறது, மற்றும் இரைப்பையிலும் சூடு உருவாகிறது.

கல்லீரல்-தீ பக்கவாட்டு தலையிலும், இரைப்பை சூடு முன் தலை பகுதியிலும் கூர்மையான பொருளால் குத்துவதை போன்ற தலைவலியை உருவாக்கும்.


எண்ணெய் பொருட்கள், பொறித்த உணவுகள், ஐஸ்கிரீம், மைதா, இனிப்புகள், வெள்ளை சர்க்கரை போன்ற பொருட்களை தொடர்ந்து அதிக அளவில் உட்கொள்ளுவதால் மண்ணீரலில் ஈரப்பதம் (Spleen dampness) உருவாகும், இதன்பொருட்டு நெற்றியில் மந்தமான தலைவலி, தலைபாரம் உண்டாகும்.


உப்புசுவையை தரும் உணவுகளை தாராளமாக எடுத்துக்கொள்வதன் விளைவாக சிறுநீரகக் குறைபாடு ஏற்பட்டு மந்தமான பின்பக்க தலைவலியை தரும்,

பாக்கெட்டில் அடைத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட மாமிச உணவுகள் இந்த பிரச்சனைகள் உருவாக காரணமாக இருக்கிறது.


திராட்சை, தயிர், ஊறுகாய், வினிகர், போன்ற புளிப்பு நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுப்பதன் மூலமாக கல்லீரல் பாதிக்கப்பட்டு தலைவலி உண்டாகும்.


உணவை மிக வேகமாக சாப்பிடுவதால் இரைப்பை பாதிக்கப்பட்டு முன் தலையில் குத்தும் வலியையும்,

இரவில் காலம் கடந்து சாப்பிடுவதால் இரைப்பை Yin பாதிக்கபட்டு முன்தலையில் மந்தமான தலைவலி ஏற்படும்.


மேற்கண்ட அனைத்து தலைவலி பிரச்சனைகளையும் அக்குபங்சர் சிகிச்சை மூலம் நிரந்தரமாக குணமாக்க முடியும்.


தொடரும்.


நன்றி.


மகேந்திரன்.

ஜேடர்பாளையம்.

நாமக்கல் மாவட்டம்.

cell-9597820861

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி