இதய துடிப்பு

 #இதய_துடிப்பை_பார்த்து……


#உங்கள்_உடம்பை #பேணிக்கொள்ளுங்கள்.❗❗❗


👉 மருத்துவரிடம் சென்று உடலை பரிசோதனை செய்தால் அவர் முதலில் பரிசோதிப்பது நாடித்துடிப்பைதான். 


▶ ஒருவரின் உடலில் உயிர் உள்ளதா என்பதை அறிய நாடித்துடிப்பைதான் சோதிப்பார்கள்.


நம்மில் பலர் நாடித்துடிப்பை மணிக்கட்டில் மட்டும்தான் உணரமுடியும் என நினைப்பதுண்டு அது தவறு. இந்த நாடித்துடிப்பு அதிகமாகவோ இல்லை குறைவாகவோ துடித்தால் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். 


உடலின் பல்வேறு பாகங்களில் நாம் நமது இதயத்தின் துடிப்பை உணர முடியும். நமது இதயத்தின் துடிப்பைத்தான் நாடித்துடிப்பு என அழைக்கிறோம்.இந்த துடிப்பை கழுத்து கால் போன்ற இடங்களிலும் உணர முடியும். 


❤ சராசரியான நாடித்துடிப்பு எவ்வளவு இருக்க வேண்டும்❓


ஒரு நல்ல ஆரோக்கியமான மனிதனுக்கு நாடித்துடிப்பு நிமிடத்திற்க்கு 72 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். 


இது மனிதனின் பாலினம் வாழ்கைசூழல் போன்றவற்றை பொருத்து மாறும். 


👉  🏃 அதுவே ஒரு விளையாட்டு வீரனாக இருந்தால் 50 முதல் 60 என்ற எண்ணிக்கையில் இருக்கும். 


👉  👶 இது பிறந்த குழந்தை என்றால் 100 முதல் 160 வரை இருக்கும். 


👉  கொஞ்சம் வளர்ந்த குழந்தை என்றால் 100 முதல் 120 வரை இருக்கும். 


👉  👦 சிறுவர்களாக இருந்தால் இது 70 முதல் 80 வரை இருக்கும். 


இந்த நாடித்துடிப்பு உடல்பயிற்சி செய்யும் போதும் உடல் உழைப்பு செய்யும் போதும் இயற்கையாகவே கூடும்.


⬆ நாடித்துடிப்பு என்ன காரணதிற்க்கு எல்லாம் அதிகமாகும்❓


⬆அதிக அளவு எடை இருந்தால் உடலில் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் இவை இதயத்திற்க்கு அழுத்தம் கொடுத்து இதயத்துடிப்பை பாதிக்கும்.இதனால் இரத்த அழுத்தம் ஏற்படும்.இந்த காரணத்தினால் தான் குண்டாக இருப்பவர்களுக்கு வேகமாக இதயநோய் வந்துவிடுகிறது.


⬆முந்தைய காலத்தில் பெண்கள் கர்ப்பமாக உள்ளனரா என்பதை அறிய நாடித்துடிப்பைதான் சோதிப்பார்கள். கர்ப்பமாக உள்ள பெண்களின் நாடித்துடிப்பு நிமிடத்திற்க்கு 150 வரை இருக்கும்.ஏனென்றால் கர்ப்பமாக உள்ள பெண்களின் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.


⬆இதயமானது உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்த சற்று கடினமாக வேலை செய்யும் இது சாதரணமான ஒன்றுதான்.இருந்தாலும் கர்ப்பிணி பெண்கள் இரத்த அழுத்ததை அறிய வேண்டும்.


⬆புகைபிடிப்பவர்கள் உடலில் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். ஏனெனில் அதில் உள்ள நிகோட்டின் மற்றும் புகையிலை இதயத்துடிப்பை அதிகரிக்கும்.இதனால் இரத்த அழுத்தம் மாறுபடும்.


❤ எனவே இதய துடிப்பை பார்த்து உங்கள் உடம்பை பேணிக்கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி