மூட்டு வலி எண்ணெய்

 தீராத மூட்டு வலிக்கு தீர்வு


தேவையான பொருட்கள்  

நல்லெண்ணெய் 500 மில்லி வெண்குங்கிலியம் 60 கிராம் 

      பச்சைக் கற்பூரம் 10 கிராம்


செய்முறை


    வெண் குங்கிலியம் நல்லெண்ணெய் இரண்டையும் ஒன்றாகசேர்த்து லேசான தீயில் காய்ச்சவேண்டும் எண்ணையை ஒரு கரண்டியால் துழாவிக் கொண்டே வர குங்கிலியம சிறிது நேரத்தில் கரைந்து விடும் இப்போது எண்ணெய்யை தீயில் இருந்து இறக்கி வைத்து கொள்ளவும்


   எண்ணெய்யின் சூடு குறைந்து லேசான வெப்ப நிலையில் இருக்கின்ற பொழுத பச்சை கற்பூரத்தை பொடித்து இதிலே தூவிவிட வேண்டும் இப்போது

மூட்டு வலி தைலம்  தயார்


உபயோகிக்கும் முறை


    கால் முட்டிக்கு முன்புறமாகவும் கால்களில் முட்டிக்கு பின்புறமாக முழங்காலின்  மடிப்பிற்கு மேல் புறத்திறத்திலும் கீழ்  புறத்திலும் நான்கு விரல் அளவிற்கு எண்ணெயை மேற்பூச்சாக தடவி வந்தால் மூட்டு வலிகள் முழுமையாக குணமாகும் 


  முழங்கால் மூட்டுகளின் முன்புறத்தில் மட்டும் எண்ணையை  தடவிக்கொண்டு முட்டியின்  பின்புற மடிப்புகளின் மேலும் கீழும் என்னையை தடவாமல் விட்டு விட்டால் மூட்டுவலிகள் குணமாகாது 


மேலும்


    இந்த எண்ணையை கை கால் மரத்துப்போதல் பாத எரிச்சல் கால்களில் உணர்வற்ற நிலை இவைகளுக்கு மேற்பூச்சாக தடவிவர முழு நிவாரணம் கிடைக்கும் உடலில் வலி இருக்கின்ற இடங்களில் தடவி வரலாம் வலிகள் தீரும்


மூட்டு வலியை தீர்க்கும் மூலிகை வைத்தியம்   


    பீச்சங்கன்  இலையும் தழுதாழை இலையும் சமமாக சூரணம் செய்து கொண்டு காலை மாலை என இரண்டு வேளையும் மூன்று கிராம் அளவிற்கு சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர மூட்டுவலி நான்கைந்து நாட்களில் பூரணமாக குணமாகும்


  மேலும் ரத்தம் சுத்தியாகும் சிறுசிறு விஷ ஜந்துக்களின் விஷங்கள் நீங்கிவிடும் உடலிலுள்ள நமைச்சல் சொறி தோல் தடிப்பு அரிப்பு இவை அனைத்தும் குணமாகும்


        வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

              பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி