நிலாவரை சூரணம்
* நீண்டநாள் நோய்களை நீக்கி
நீண்ட ஆயுளைத் தரும் நிலாவிரை கற்பம்
ஒரு ஸ்பூன் நிலாவிரை சூரணத்துடன் தேன் கலந்து காலை மாலை ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் பருத்த உடல் இளைக்கும் தேவையற்ற கொழுப்பு குறையும் ஊளை சதை வற்றும் வாத நோய்கள் தீரும்
இதே நிலாவரை சூரணத்துடன் பசுநெய் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் பெருத்து அழகாகும்
நிலாவரை பொடியுடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து மத்தித்து இருபது நாட்கள் சாப்பிட்டு வந்தால் எலிகடி விஷம் சிறு பூச்சிகடி விஷம் நீங்கும்
நிலாவரை சூரணத்தை பசும்பாலில் கலந்து ஒரு வாரம் காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புழுக்கள் நாக்குப்பூச்சிகள் இறந்து வெளியேறிவிடும்
பசு மோரில் நிலாவரை சூரணத்தை ஒரு ஸ்பூன் அளவு கலந்து காலை மாலை பத்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் செரியாமை நோய் வெகுவிரைவாக குணமாகும்
பாகல் இலைச் சாற்றில் நிலாவரை சூரணத்தை கலந்து சாப்பிட்டுவந்தால் செய்யான் கடி சிறு வண்டு விஷயங்கள் நீங்கிவிடும்
எருமைப்பாலில் நிலாவரை சூரணத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள காணாக்கடி விஷங்களும் எளிதாக குணமாகும்
நிலாவரை சூரணம் வல்லாரை சூரணம் இரண்டையும் சமமாக கலந்து தேனுடன் ஒரு மண்டல காலம் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் மூளை நரம்புகள் வலிமை பெற்று ஞாபக சக்தி உண்டாகும்
பள்ளி குழந்தைகளுக்கு இதை தருவதால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கி பசி உண்டாகும் சிந்தனைத் திறன் மேம்படும்
நிலாவரை சூரணத்துடன் திரிபலா கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும் வெகு மூத்திரம் தீரும்
நிலாவரை சூரணத்துடன் திரிகடுகு கலந்து சாப்பிட்டு வந்தால் தீராத மலபந்தம் தீர்ந்து விடும்
நிலாவரை சூரணத்துடன் ஆவாரை இலை சூரணத்தை சமமாக கலந்து சுடுநீரில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும் வெகுமூத்திரம் குணமாகும்
நிலாவரை சூரணத்தை சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் மலபந்தம் தீரும் உண்ட உணவு எளிதாக சீரணமாகும் குடல் சார்ந்த வியாதிகள் அனைத்தும் விரைவில் விலகிவிடும்
மூல நோயால் அவதிப்படுபவர் நிலாவரை சூரணத்தை தொடர்ந்து சாப்பிட கூடாது
நிலாவரை மூலிகை மலச்சிக்கலை நீக்கி அதன் மூலமாக உடலுக்கு நோய் வருவதை தடுக்கும் ஆற்றலை பெற்றிருப்பதால் இதை அனைத்து நோய்களையும் நீக்கி ஆயுளை வளர்க்கும் கற்ப மூலிகையாக சித்தர்களால் கருதப்படுகின்றது
வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
பிரம்மஸ்ரீ இராமலிங்கம்
Comments
Post a Comment