பிரசவத்த பெண்களுக்கான குழம்பு வகை
செலவு குழம்பு / பிரசவ குழம்பு செய்முறை விளக்கம்
தேவையானவை:
செலவு சாமான் – தலா 10 கிராம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்),
செலவு சாமான்கள் சுக்கு, மிளகு, கண்டந்திப்பிலி, வெந்தயம், சதகுப்பை, ஓமம், சீரகம், பெருங்காயம், கருஞ்சீரகம், சித்தரத்தை, அரிசி திப்பிலி ஆகியனவாகும்.
தோலுரித்த சின்ன வெங்காயம் – 10, காய்ந்த மிளகாய் - 5, நல்லெண்ணெய் – தேவையான அளவு
தாளிப்பு வடகம் - ஒரு டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெறும் வாணலியில் செலவு சாமான்களை சேர்த்து வறுத்து பவுடராக பொடிக்கவும். புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு வடகம் தாளித்து வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். பிறகு, அரைத்த பவுடரைச் சேர்த்து கொதிவிட்டு ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு இறக்கவும்.
சூடான சாதத்தில் சிறிதளவு நெய்விட்டு, இந்தக் குழம்பைச் சேர்த்து சாப்பிடலாம்.
பயன்:
குழந்தை பெற்ற பெண்களுக்கு நலம் பயக்கும்; காய்ச்சல் நேரங்களிலும் சாப்பிடலாம்.
Comments
Post a Comment