கால் பாத எரிச்சல்
பாத எரிச்சல் குணமாக
சில நபர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கால் பாதங்களில் எரிச்சல் ஏற்படும் இது உடல் வேதனையையும் மன வேதனையைவும் ஏற்படுத்தும் இதனை மிகச் சுலபமாக குணப்படுத்தலாம் பாத எரிச்சல் நோய் உள்ளவர்கள் மருத்துவரை நாடிபோக வேண்டியது இல்லை நோயாளிகளே கடையில் வாங்கி சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளலாம்
உட்கொள்ளும் மருந்து
சித்தா மருந்துக் கடையில் அமுக்கரா கிழங்கின் பொடி அஸ்வகந்தா சூரணம் என்ற பெயரில் விற்கும் அதனை 100 கிராம் வாங்கி காலை மாலை 5 கிராம் எடுத்து 1 டம்ளர் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். 100 கிராம் சூரணம் முடிவதற்குள் பாத எரிச்சல் குணமாகி விடும் இந்த அமுக்கரா கிழங்கின் பொடியை எவ்வளவு நாள் சாப்பிட்டாலும் கெடுதல் கிடையாது மாறாக உடல் பலம் கூடும் நரம்பின் வலிமை கூடும் நன்றாகத் தூக்கம் வரும்.
குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு சத்துணவு இது. எந்த மருந்து சாப்பிட்டாலும் இதனையும் தொடர்ந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோயினால் ஏற்பட்ட உடல் பலவீனம் நரம்புகளின் பலவீனம் போன்றவற்றை குணமாக்கும்
பின் விளைவுகள் இல்லாத சத்துணவு அஸ்வகந்தா சூரணமாகும்
வெளிப்பூச்சு மருந்து
சுத்தமான நல்லெண்ணெய் 500 ML
பச்சை கற்பூரம் 50 கிராம்
ஒரு சுத்தமான பாத்திரத்தில் நல்லெண்ணெயை ஊற்றி அதனை அடுப்பேற்றவும் எண்ணெய் சூடேறி னவுடன் தூள் செய்து வைத்துள்ள பச்சை கற்பூரத்தை எண்ணெயில் போட்டு அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி மூடி வைக்கவும்
ஆறினவுடன் பாட்டலில் ஊற்றி வைக்கவும்
காலை மாலை இந்த எண்ணெயை பாதம் முழுவதும் தேய்த்து வர பாத எரிச்சல் குணமாகும்
இந்த எண்ணெய் சங்ககிரி மனோகர் அவர்களின் அனுபவ மருந்தாகும்
தகவல் தொடர்புக்கு
KKE அக்பர் ஜி
ஜீவசக்தி ஹெர்பல் கிளினிக்
145 மாணிக்கவாசகர் காலணி
ஈரோடு 2
கைபேசி 9443014894
Comments
Post a Comment