தேங்காய் பால்

 தாய்ப்பாலுக்கு இணை தேங்காய்பாலா???

பொதுநலவிழிப்புணர்வுபதிவு..!!


தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர்.


உண்மை இதோ,

தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள் பற்றி சித்தர்களின் குரலில் இன்று விரிவாக பகிர்கிறேன்...


பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....! ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான், தேங்காய் கொழுப்பாய் மாறும்!

https://www.facebook.com/groups/305917699863621

தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால், அதுதான் அமிர்தம்......!

சகலவிதமான நோய்களையும்

குணமாகக்கும்........!

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும்

அழுக்குகளை அகற்றும்...!

இரத்தத்தை சுத்தமாக்கும்!!

உடலை உரமாக்கும்......!

உச்சிமுதல் பாதம்வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்!


தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை: -

நாம்,அன்னை வயிற்றிலிருந்து

பூமிக்குவர 10 மாதம்.....!

அதுபோல...

தேங்காய் கருவாகி பூமிக்கு

வர 10 மாதம் ஆகும்....!


இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்ணுங்கள்...!


தேங்காயை சமைத்து உண்டால் கெட்ட கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாறிவிடும். சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு (கொலஸ்ட்ரால்).....!


தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியாக அளியுங்கள்! அவ்வளவு ஆரோக்கியம்...!!


பழங்காலத்தில், இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால்

கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள்! ஆனால் இப்போது,

மாட்டு பால் ஊற்றி துக்கத்தில் ஆழ்கிறார்கள்..! தாய்ப்பாலுக்கு மாற்றாக, தேங்காய் பாலை குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்!


ஆனால் இப்போது, இரசாயண கலவையுடன் பாக்கெட் பால்............?


காலையில் தேங்காயை துருவி, அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி அல்லது தேன் சேர்த்து, (பாக்கட் பாலை தவிர்த்து விட்டு), அதற்கு பதிலாக தந்து பாருங்கள் ஆரோகியத்தை.........!


தாய்ப்பாலில் இருக்கும்

#மோனோலாரின்சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை....!!


தேங்காய் பால் மட்டுமே போதும் உடலை சுத்தமாக்க...!!


புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.


தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும்.


தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும்.


கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.


தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.


தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது.


தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது.


தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.


குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும்.


பெருவயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தல் சரியாகும். தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும்.


தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.


ஆரோக்கியமான சத்துகள் அதிகம் கொண்ட தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.


வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் இரும்பு சத்து கிடைக்கிறது.


தேங்காய் பால் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது.


தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.


செலினியம் தேங்காய் பாலில் அதிகமுள்ளது. தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.


மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் தேங்காய் பால் மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீக்கி, உடல் உறுப்புகள் சுத்தமாகும்.


தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.


தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.


ஓம் சிவ சிவ ஓம்

ஓம் சிவ சிவ ஓம்

ஓம் சிவ சிவ ஓம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி