Posts

Showing posts from February, 2021

கைபேசி தகவல் பெற

 மொபைல் போன்களை பற்றிய பெறுமதியான தகவல்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.... *#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க *#0000# – தயாரிப்பு தேதி பார்க்க #*2472# –... தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய *#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர *8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய *#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய *#0001# – *#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய #*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய *#67705646# – clears the LCD display(operator logo). *#147# – This lets you know who called you last (Only vodofone). *#1471# – Last call (Only vodofone). #pw+1234567890+1# – Provider Lock Status. #pw+1234567890+2# – Network Lock Status. #pw+1234567890+3# – Country Lock Status. #pw+1234567890+4# – SIM Card Lock Status. *#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to. *#2640# – Displays phone security code in use. *#30# – Lets you see the private number. *#2820# – ப்ளுடுத் ...

முருங்கைக்காய்

 முருங்கைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் பயன்கள் !! நன்றி : webdunia #முருங்கைக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சத்துகள் முருங்கைக்காயில் அதிகளவில் உள்ளதால், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.   நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு, தொடர்ந்து உணவில் முருங்கைக்காயை சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இவ்வாறு முருங்கைக்காயில் அதிகளவு பயன்கள் உள்ளதால் உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இளம் வயது ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு பிரச்சனைக்கு இந்த முருங்கைக்காய் சிறந்த மருந்தாகிறது.   கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உணவில் அடிக்கடி முருங்கைக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தைக்கு மிகவும் நல்லது. பாலூட்டும் தாய்மார்கள்  முருங்கைக்காய் சாப்பிட்டால் பால் சுரப்பு அதிகரிக்கும். நன்றி : வெப்துனியா

சத்துமாவு தயாரிக்கும் முறை

 அனைவருக்கும் ஏற்ற பாரம்பரிய முறையில் 25+ தானியங்கள் கொண்டு  சத்தான சத்து மாவு தயாரிக்கும் முறை தேவையான பொருட்கள்: 1.ராகி 250g 2.சோளம் 250g 3.நாட்டு சர்க்கரை 500கி 4.பாசிப்பயறு 250கி 5.கொள்ளு 250கி 6.மக்காசோளம் 250கி 7.பொட்டுக்கடலை 100கி 8.சோயா 100கி 9.தினை 100கி 10.கருப்பு உளுந்து 100கி  11.சம்பா கோதுமை 250கி 12.பார்லி 100கி 13.நிலக்கடலை 250கி 14.மாப்பிள்ளை சம்பா அவல் 250கி 15.ஜவ்வரிசி 100கி 16.வெள்ளை எள் 100கி 17.கசகசா 50கி 18.ஏலம் 50கி 19.முந்திரி 50கி 20.சாரப்பருப்பு 50கி 21.பாதாம் 50கி 22.ஓமம் 50கி 23.சுக்கு 50கி 24.பிஸ்தா 50கி 25.ஜாதிக்காய் 2  26.மாசிக்காய் 2 செய்முறை : ◆ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.  ◆தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார்...

ஏலக்காய்

 ♥ பசி  மற்றும்  நோய் தீர்க்கும் மருந்து  -  உணவு பாகம் - 10. ♥ ♥ ஏலக்காய்  ♥                ♥♥ சமையலில் முக்கியமாக இனிப்புப் வகைகள், கேக், போன்றவற்றிற்கு வாசனை, சுவை அளிக்க கூடிய ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’(Queen of the spices) என்று சிறப்புப் பெயர் - செல்லப் பெயர் கொண்ட ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.♥♥  1 ♥  ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன. 2 ♥  ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. 3 ♥  சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன் மென்று தின்றால், அஜீரணம் அகலும். பசி ருசி உண்டாகும். 4 ♥...

இதய துடிப்பு

 #இதய_துடிப்பை_பார்த்து…… #உங்கள்_உடம்பை #பேணிக்கொள்ளுங்கள்.❗❗❗ 👉 மருத்துவரிடம் சென்று உடலை பரிசோதனை செய்தால் அவர் முதலில் பரிசோதிப்பது நாடித்துடிப்பைதான்.  ▶ ஒருவரின் உடலில் உயிர் உள்ளதா என்பதை அறிய நாடித்துடிப்பைதான் சோதிப்பார்கள். நம்மில் பலர் நாடித்துடிப்பை மணிக்கட்டில் மட்டும்தான் உணரமுடியும் என நினைப்பதுண்டு அது தவறு. இந்த நாடித்துடிப்பு அதிகமாகவோ இல்லை குறைவாகவோ துடித்தால் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.  உடலின் பல்வேறு பாகங்களில் நாம் நமது இதயத்தின் துடிப்பை உணர முடியும். நமது இதயத்தின் துடிப்பைத்தான் நாடித்துடிப்பு என அழைக்கிறோம்.இந்த துடிப்பை கழுத்து கால் போன்ற இடங்களிலும் உணர முடியும்.  ❤ சராசரியான நாடித்துடிப்பு எவ்வளவு இருக்க வேண்டும்❓ ஒரு நல்ல ஆரோக்கியமான மனிதனுக்கு நாடித்துடிப்பு நிமிடத்திற்க்கு 72 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.  இது மனிதனின் பாலினம் வாழ்கைசூழல் போன்றவற்றை பொருத்து மாறும்.  👉  🏃 அதுவே ஒரு விளையாட்டு வீரனாக இருந்தால் 50 முதல் 60 என்ற எண்ணிக்கையில் இருக்கும்.  👉  👶 இது பிறந்த குழந்தை என்றால் ...

தேங்காய் பால. இரசம்

 வயிறு புண் குணமாக தேங்காய்ப்பால் ரசம்... தேவையான பொருட்கள் தேங்காய் பால் – 2 கப் பெரிய வெங்காயம் – 4 இஞ்சி – சிறிய அளவு எலுமிச்சை பழம் – 1 பழம் உப்பு – தேவைக்கேற்ப கொத்தமல்லி தழை – தேவைக்கேற்ப பச்சைமிளகாய் – 8 நல்லெண்ணெய் – தேவையான அளவு பசும்பால் – 2 1/2 கப் சோள மாவு – 3 spoon செய்முறை விளக்கம் : முன்னதாக தேங்காய்ப் பாலுடன் சோளமாவை சேர்த்துக்கொள்ளவும். கடாயில் மூன்று அல்லது நான்கு டீஸ்பூன் எண்ணெ விடவும் , எண்ணெ சூடான வுடன் வெங்காயத்தை பொடியாக நறுக்கி நன்கு வதக்கவும் அதன் பின் வெங்காயம் நல்ல பொன்னிறத்திற்கு வந்த உடன் பால் சேர்க்கவும் , அதனுடன் இஞ்சி கொத்தமல்லி பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும் , நன்றா கொதித்த உடன் தேவையான அளவு உப்பை சேர்க்கவும். கடைசியாக எலுமிச்சைப்பழம் சாறை சேர்த்து சூப்பை இறக்கி விடவும்.

பிரசவத்த பெண்களுக்கான குழம்பு வகை

 செலவு குழம்பு / பிரசவ குழம்பு செய்முறை விளக்கம் தேவையானவை: செலவு சாமான் – தலா 10 கிராம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்),  செலவு சாமான்கள் சுக்கு, மிளகு, கண்டந்திப்பிலி, வெந்தயம், சதகுப்பை, ஓமம், சீரகம், பெருங்காயம், கருஞ்சீரகம், சித்தரத்தை, அரிசி திப்பிலி ஆகியனவாகும். தோலுரித்த சின்ன வெங்காயம் – 10, காய்ந்த மிளகாய் - 5, நல்லெண்ணெய் – தேவையான அளவு தாளிப்பு வடகம் - ஒரு டீஸ்பூன் புளி – எலுமிச்சை அளவு கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் செலவு சாமான்களை சேர்த்து வறுத்து பவுடராக பொடிக்கவும். புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு வடகம் தாளித்து வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். பிறகு, அரைத்த பவுடரைச் சேர்த்து கொதிவிட்டு ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு இறக்கவும். சூடான சாதத்தில் சிறிதளவு நெய்விட்டு, இந்தக் குழம்பைச் சேர்த்து சாப்பிடலாம். பயன்: குழந்தை பெற்ற பெண்களுக்கு நலம் பயக்கும்; காய்ச்சல் நேரங்களிலும் சாப்பிடலாம்.

நலங்கு மாவு

 நலங்கு மாவின் அற்புதப் பலன்கள்.: நலங்கு மாவில் கடலை பருப்பு, பாசி பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத்தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரை, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை கொண்டு நலங்கு மாவு தயாரிக்கப்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில், இப்பொருட்கள் கிடைக்கின்றன. ஆண்கள் பயன்படுத்தும் போது, மஞ்சள் சேர்க்காமல், தயாரித்துக் கொள்ளலாம். சருமத்தை  பராமரிப்பதில், நலங்கு மாவு முக்கிய பங்கு வகிக்கிறது.  நலங்கு மாவை உபயோகிப்பது, பன்நெடுங்காலமாகவே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது. நலங்குமாவில் இடம் பெற்றுள்ள பொருட்கள், எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு. இன்றைய தலைமுறையினருக்கு, முக்கிய பிரச்னையாக இருப்பது முகப்பரு. சிலர், பருக்களை கிள்ளி விடுவதால், அந்த இடத்தில் பரு இருந்ததற்கான  அடையாளம் அப்படியே இருக்கிறது. இதற்கு சிறந்த தீர்வை தருகிறது, நலங்கு மாவு. நலங்கு மாவை தொடர்ந்து உபயோகிக்கும் போது, முகப்பருவானது  குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டு...

மருத்துவ குறிப்புகள்

 அஞ்சறைப் பெட்டியில் அடங்கியிருக்கும் 10 வீட்டு வைத்தியங்கள்! நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம். 1. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும். 2.ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் தேக்கரண்டி மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும். 3.ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும். 4.சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும். 5.படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும். 6.சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும். 7.விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத பு...

மூங்கிலரிசி

 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள். மூங்கில் அரிசி நெல் போலவே இருக்கும், பழங்குடி மக்களின் முக்கிய உணவு. இந்த மூங்கில் அரிசி உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை வழங்கும். மூங்கில் அரிசி என்பது காடுகளில் விளைகின்ற 60 வயதான மூங்கில் மரங்களில் உள்ள பூப்பகுதியில் இருந்து சேர்க்கப்படும் விதைகளாகும். தினமும் மூங்கில் அரிசி உட்கொள்வதினால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் நிகழ்கின்றது. மூங்கில் அரிசியில் உள்ள சத்துக்கள்:- இந்த மூங்கில் அரிசில் ஏராளமான கலோரிகள் உள்ளது. ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும் கார்போஹைட்ரேட்ஸ், புரத சத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின். ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. மூங்கில் அரிசி பயன்கள்: 1 சர்க்கைரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகி போனவர்களை, மாறும்படியும் சீரான உடல் அமைப்பை பெற செய்யும் இந்த மூங்கில் அரிசி. மூங்கில் அரிசி பயன்கள்: 2 மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிரிசி ஆகியவரை 100 கிராம் எடுத்து அரைத்து மாவுபோல் செத்து கொள்ளவும். இந்த மாவில் இருந்து இரண்டு ஸ்பூன் எடுத்து கஞ...

விபூதி எனும் மருந்து

 நீண்ட நாட்களுக்கு பிறகு முறையாக சுரகுடுவையில் புடமிட்டு எங்கள் வீட்டில் சகல நோய்களையும் தீர்க்கும் ஜீவ பஸ்ப திருநீறு தயாரித்து வெற்றியும் கண்டேன். அந்த முறையை இன்று சித்தர்களின் குரலில் உங்களுடன் பகிர்கிறேன்... நீங்களும் தயாரித்து பயன் பெறுங்கள்.... (சிறு வயதில் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகளிடம் மூலிகை ரகசியங்களை பற்றி படிக்கும் போது "போகர் நிகண்டு" என்ற நூலில்  அவர் சொன்ன அபூர்வ ரகசியம் இது.) விபூதியை கொண்டு அனைத்து வித நோய்களையும் குணமாக்கும் சித்து இது !!! நமது நாட்டில் பெரும்பாலும் சாமியார்கள் அவர்களை பார்க்க சென்றால் விபூதி வழங்குவது வழக்கம் !!! சிறிது வாயில் போட்டு விட்டு சிறிது நெற்றியில் இட்டு விடுவார்கள் !!! அது பல விதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உடையதாக இருக்கும். சரி வெறும் விபூதி மட்டும் எப்படி இவ்வளவு ஆற்றல் வாய்ந்தது என்று சந்தேங்கம் தோன்றுவது இயல்பு தான். இவை வெறும் சித்து மட்டும் இல்லை இவை மருத்துவ குணம் வாய்ந்தது !!! சிலர் சிறுநீரகத்தில் கல் இருந்தது அவர் கொடுத்த விபூதி மூன்று நாள் சாப்பிட சொன்னார் ஸ்கேன் செய்து பார்த்தும் கல் இல்லை என்று சொல்லி வியப...

அக்கு பிரசர் விரல் அழுத்தம்

 விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! - இது எப்படி ஏற்படுகிறது? நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம். தலைவலி : நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப...

காய்ச்சல் விளக்கம்

 பகிர்வு பதிவு.. அக்குபங்சர் பார்வையில் காய்ச்சல்  என்பது என்ன?.... உடலின் வெப்பநிலை 98.4 டிகிரிக்கு மேலே செல்வதை காய்ச்சல் என்கிறோம்..... மூன்றுவித நிலைகளில் நம் உடலின் வெப்பம் அதிகரிக்கிறது..... I.சிறுகுடல்; நம் உடலின் எந்த உறுப்பையும் விட அதிகமான வெப்பத்தை தாங்க கூடிய உறுப்பு....பல சமயங்களில் இந்த உறுப்பு... அதிகரிக்கும் உடலின் வெப்பத்தை தாங்குகிறது.... சிறுகுடல் அதிகப்படியான வெப்பத்தை தாங்கும் சக்திக்கு கல்லீரலின் எசன்ஸான கிளைக்கோஜனனும், சிறுநீரகமும் உறுதுணையாய் இருக்கின்றன.... வயிறும் மண்ணீரலும் ஓரளவுக்கு துணை நிற்கின்றன... நுரையீரலும், பெருங்குடலும்  சிறுகுடலின் அதிகப்படியான வெப்பத்தை உடலை விட்டு வெளியேற முயல்கின்றன.... இந்த சிறுகுடலில் அதிகப்படியான வெப்ப தேக்கத்திற்கு காரணமாய் இருப்பது வயிறு தான்.... அதாவது நாம் உண்ணும் உணவால் வயிறு அதிக வெப்பம் அடைகிறது.... இந்த வெப்பம் மண்ணீரல் மூலம் நுரையீரலுக்கு கடத்தப் படுகிறது..... ஆரம்பத்தில் இந்த நுரையீரலை அடையும் வெப்பம்....சுறு சுறுப்பான இயக்கத்தை தருகிறது.... ஆனால் நாளாவட்டத்தில்...நுரையீரலில் அதிகப்படியான வெப்பம் ஏற்படு...

தலைவலி - 1

 #தலைவலி_பகுதி_1 இன்றைய கால சூழ்நிலையில் அனைத்து தரப்பு மக்களிடத்திலும்  பொதுவாக காணப்படும் நோய் அறிகுறிகளில் ஒன்று தலைவலி. சிலருக்கு இந்த பிரச்சனை மிகப் பிரதானமாகவும் தீவிரமாகவும் இருக்கிறது. தன் வாழ்நாளில் ஒருமுறை கூட தலைவலியை அனுபவிக்காத நபர்களை பார்ப்பது மிக மிகஅரிது. கொலை வலியை கூட தாங்கிவிடலாம், ஆனால் இந்த தலைவலியை தாங்குவது மிகக் கடினம் என்று பலரும் கூற கேட்டிருப்போம். அந்த அளவுக்கு தலைவலி எனும் நோய் பல்கிப்பெருகி பரவலாக எல்லோரிடத்திலும் காணப்படுகிறது. மைக்ரேன் தலைவலி, முன்பக்க தலைவலி, பின்பக்க தலைவலி, டென்ஷன் தலைவலி மற்றும் பொதுவாக காணப்படும் அனைத்து விதமான தலைவலிகள் பற்றியும், அது உருவாகும் காரணங்கள் பற்றியும் விரிவாக காண்போம். பல்வேறு காரணங்களால் ஒரு மனிதனுக்கு தலைவலிகள் உருவாகும் என்பதை தொன்மையான சீன அக்குபங்சர் மருத்துவம் மிகத்தெளிவாக கூறுகிறது,  ● பரம்பரை குறைபாடுகள்.     (தாய்-தந்தையிடமிருந்து      குழந்தைக்கு ஏற்படும் குறைபாடு) ● உணர்ச்சிகள்.    புறச்சூழல் மற்றும் மன     அழுத்தங்களால் நமக்குள்   ...

தலைவலி - 2

 #தலைவலி_பகுதி_2 தலைவலியின் வகைகள் மற்றும் அது உருவாகும் காரணங்கள் பற்றி சீன அக்குபங்சர் முறையில் பார்த்துவருகிறோம்,  கடந்த பதிவில் பரம்பரை மூலம் வரும் தலைவலிகள் பற்றி விரிவாக  பார்த்தோம்.. அதன் தொடர்ச்சியாக மனிதன் #உணர்ச்சிகள் எவ்வாறு ஆரோக்கியத்தை பாதித்து தலைவலிகளை ஏற்படுத்துகிறது என்று பார்ப்போம்.  உணர்ச்சிகள். மனிதனிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு உணர்ச்சியும் ஏதாவது ஒரு உள்ளுறுப்போடு சம்மந்தம் கொண்டிருக்கும். கோபம்-கல்லீரல் துக்கம்-நுரையீரல் சிரிப்பு-இதயம் பயம்-சிறுநீரகம் சோகம்-மண்ணீரல் இதனடிப்படையில் மனித உணர்ச்சிகளுக்கும் நோய்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு, அதிலும் குறிப்பாக உணர்ச்சிகளுக்கும் தலைவலிக்கும் மிகமிக நெருங்கிய தொடர்புண்டு என்றால் அது மிகையாகாது. ◆கோபம்.  சீன மருத்துவத்தில் விரக்தி, மனக்கசப்பு ஆகிய உணர்வுகளும் கோபம் எனும் உணர்ச்சியின் வகையை சார்ந்ததாக கூறப்படுகிறது. இந்த உணர்ச்சிகள் கல்லீரலின் Yang rising, மற்றும் கல்லீரல் fire'க்கு காரணமாக இருக்கிறது.  கல்லீரல் yang rising மற்றும் fire blazing காரணமாக வெப்பம் மேலேறி தலைவலியை ஏற்படுத்தும்,...

தலைவலி - 3

 #தலைவலி_பகுதி_3 கடந்த இரு பகுதிகளில் தலைவலியின் தன்மை மற்றும் உருவாகும் காரணங்கள் பற்றி சீன அக்குபங்சர் முறையில் வகரிவாக பார்த்தோம். அதிகமான உடலுழைப்பு, அதிகமான பாலியல் செயல்பாடு, மற்றும் முறையற்ற உணவுமுறையால் ஏற்படும் தலைவலிகள் பற்றி இன்று பார்ப்போம். அதிகப்படியான உடலுழைப்பு. ஒவ்வொரு உயிருக்கும் தேவையான அளவு உணவு, தேவையான அளவு உடலுழைப்பு, மற்றும் தேவையான அளவு ஓய்வும் தேவை, இந்த மூன்றும் சரி விகிதத்தில் இருந்தால் மட்டுமே ஆரோக்கியம் என்பதும் மேலோங்கி இருக்கும். ஒருசிலர் தேவையான ஓய்வின்றி அதிகப்படியான உடலுழைப்பில் ஈடுபடுகிறார்கள், இதனால் மண்ணீரல் Qi பாதிப்படைகிறது, இதுவே தொடரும் பட்சத்தில் சிறுநீரக Yin'னிலும் பாதிப்பு ஏற்படும். சிறுநீரக Yin பற்றாக்குறையால் ஒட்டுமொத்த தலையிலும் தலைவலியானது ஏற்படலாம், அல்லது கல்லீரல் வெப்பத்தை ஏற்படுத்தி மைக்ரேன் தலைவலி மற்றும் தலையில் உள்ள பித்தப்பை சக்தியோட்ட பாதைகளில்(பக்கவாட்டு தலையில்)  வலியை உண்டுபண்ணும். அதிகமான காமநுகர்வு. மாதம் ஒரு போகம் என்பது சித்தர் வாக்கு, அதிகமான பாலியல் செயல்பாடுகள் என்பது தலைவலிக்கான ஒரு பொதுவான காரணமாக சீன அக்குப...

பப்பாளி

 தினமும் பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்!! ●பல்  சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்.   ●நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய்  குறைபாடு சீராகும்.   ●அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது  இவர்களை தாக்காது. ●பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒருவகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில்  நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.   ●பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக்காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாள...

களாக்காய்

 #களாகாய்  இன்றைய மூலிகை நாளை கிடைக்கும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் களாக்காயே சிறந்தது என்பது பழமொழி களாக்காய் மிகுந்த மருத்துவ தன்மைகளை கொண்டது இதன் பூ காய் பழம் வேர் முதலியன மருந்தாகின்றன இதன் பழம் தாகத்தை தணிக்கும் குளிர்ச்சியைத் தரும் பித்த மயக்கத்தைப் போக்கும் இரைப்பைக்கு வலுவைத் தரும் பசியை உண்டாக்கும் மூளை நோய்களை குணமாக்கும் சொரி சிரங்குகளையும் குணமாக்கும் இதனால் தொண்டை வலி போகும் இந்தச் செடியின் வேருக்கு வயிற்றுப் புழுக்களை கொல்லும் தன்மை உண்டு இச்செடியின் பூக்களுக்கு கண்ணில் உண்டாகும் கரும்படலம் வெண்படலம் குருவி படம் சதைப்படலம் ஆகியவற்றை போக்கும் தன்மை உண்டு நாட்டுப்புற மருத்துவம் ஓர் ஆய்வு குருவே துணை @அகத்தியர் குடில்

பழங்களின் பயன்

 பழங்களின் மருத்துவ குணங்கள்:- 1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும் 2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும் 3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. 4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும் 5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி 6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும் 7. ஆப்பிள் பழம் :- வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது. 8. நாவல் பழம் :- நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும். 9. திரட்சை :- 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும். 10. மஞ்சள் வழைப்பழம் :- மலச்சிக்கலைப் போக்கும். 11. மாம்பழம் :- மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகாpக்கப்...

பித்த மயக்கம்

 *#பித்தமயக்கம்,  #பிரஷர்_மயக்கம் தீர  எளிய வைத்தியம்* *1, சீரகம் சுக்கு ஏலக்காய் நெல்லிவற்றல் இவைகளை சம அளவாக சூரணம் செய்து கொண்டு பால் அல்லது தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தால் ஏற்படுகின்ற மயக்கம் அனைத்திற்கும் இதன்மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் இதில் சிறிது இந்துப்பு கலந்து இதில் ஐந்து கிராம் சூரணத்தை எடுத்து காலையில் சாப்பிடுகின்ற முதல் அன்னத்தில் பிசைந்தும் சாப்பிட்டு வரலாம் இதனால் உடல் எரிச்சல் குறையும் உடல் உஷ்ணம் தணியும் ரத்தத்தில் வெப்பம் தணிந்து பித்த மயக்கம் குணமாகும்* *2, பொன்னாங்கண்ணி   100 கிராம்*    *கரிசலாங்கண்ணி 75  கிராம்* *சீரகம் 50 கிராம்      மிளகு 25 கிராம்* *இவைகளை பொடியாக செய்து கொண்டு இதில் மூன்று கிராம் அளவு எடுத்து சுடுநீர் கலந்து பருகி வந்தால் உடல் உஷ்ணம் பித்தமயக்கம் பிரஷர் மயக்கம் குணமாகும். இதை காலையில் சூப்பாக செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி உண்டாகும் நோயால் தேகம் மெலிந்து இருப்பவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்  நல்ல மருந்தாக இது செய...

ஆமணக்கு எண்ணெய் வைத்தியம்

 ஆரோக்கிய வாழ்வைத் தரும் ஆமணக்கு               (விளக்கெண்ணெய் வைத்தியம்)  உடலின் உஷ்ணத்தை தணிப்பதற்கு விளக்கெண்ணை ஒரு சிறந்த மருந்து      ஒரு கைப்பிடி முருங்கை மரத்து பட்டையை இடித்து இதில் 400 மில்லி தண்ணீர் சேர்த்து இதை 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி இதிலே இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து காலை வேளையில் குடித்து வந்தால் பித்தத்தால் வருகின்ற நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் உடல் உஷ்ணம் தணிந்து விடும்     வெட்டை வாயு நிரந்தரமாக குணமாகும்  மார்பு வலி குன்ம லலி வயிற்று வலி முதலிய கடுமையான நோய்கள் அனைத்தும் எளிதாக விலகிவிடும்   இதே முறையில் பூவரசன் பட்டை கசாயத்தில் விளக்கெண்ணெய் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் உடலில் உள்ள கடி விஷங்கள் கிரந்திப் புண்கள் மேலும் படை சொறி சிரங்கு முதலிய சரும நோய்கள் அனைத்தும் குணமாகும்   இதைப்போல ஒரு எருக்க இலையை தண்ணீரில் நன்றாக கழுவி இதை கசாயம் செய்து இதனோடு ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் மேக சுரம் மற்றும் மேக வியாதிகள் எளிதாக குணமாகும்...

மருத்துவ குறிப்புகள் 2622021

 நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்... 1. குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து நன்கு அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்து வர அவை குணமாகும்.   2. எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும். 3. அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.   4. சுக்கு: தினம் காலையில் சுக்குக் காப்பி பருக மூக்கடைப்பு, உடல் பித்தம் குணமாகும். பசியை தூண்டவும், அஜீரணத்தை  போக்கவும் வல்லது.   5. மிளகு: சளி, பசியின்மையைப் போக்குகிறது. திடீர் அரிப்பு, தடிப்புக்கு, ஆஸ்துமா, சைனஸ்(நீர்கோவையுடன் மூக்கடைப்பு)  சிறந்த நிவாரணமாகிறது.   6. சோம்பு: சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண்  நாளடைவில் குணமடையும்.   7. வெந்தயம்: வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும்....

நவரா அரிசி கேரள மக்களின் விருப்பமானது

 கேரளா மக்களின் முக்கிய உணவான "நவரா அரிசி". 🌾🌾🌾 பல்வேறு வகையான மருத்துவ பலன்கள் கொண்டுள்ள நவராஅரிசி வகையாகும்.  ஆயுர்வேத மருத்துவ முறையில் இவ்வகை அரிசியை மூலிகை அரிசி என அறியப்படுகிறது. தனி சிறப்புகள்: கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை தொற்று, தோல் வியாதி குறைபாடு போன்றவைக்கு ஏற்ற உணவாகும். நவரா ரக அரிசி, சிறுபிள்ளைகளுக்கு இளம் வயதில் பிடிக்கும் சளியைப் போக்கக்கூடியது. மற்றும் சுறுசுறுப்புக்கு உட்கார்ந்தது 🏊  இந்த அரிசிக் கஞ்சி அல்லது சாதத்தை உணவாக எடுத்து வந்தால், சளி முழுமையாகக் குணமடையும். Alternative Names: நவரா அரிசி | மூலிகை அரிசி | ஆயுர்வேத மூலிகை அரிசி | கேரளா பாரம்பரிய நவரா அரிசி | அரிசி                  🏊HEALTH BENEFITS🏊 வேகவைத்த நவர என்பது குழந்தைகளுக்கு, குறிப்பாக குறைந்த எடை கொண்டவர்களுக்கு தேங்காய் பாலில் கஞ்சியாக கொடுக்கலாம்.  நவரா அரிசியை கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது,   காய்கனிகளுடன்  குழம்பு செய்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு உட்கொள்ள, நலம். தேங்காய் பாலில் மற்றும் மூலிகைகள் ...

வெந்தயம்

 #வெந்தயமா………❗❗❗ #எங்களுக்கு_தெரியுமேன்னு #சொல்றீங்களா..❗❗❓❓ 👉ஆமா. நம்ம எல்லாருக்குமே தெரிஞ்சது தான்..  👉அதற்கான பதிவு தான் இது.. பாருங்க.. 👉முயலுங்க.. பலன் சொல்லுங்க..  நம் வீட்டுச் சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த மற்றும் மிகுந்த கசப்பைக் கொண்ட ஓர் பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் நம் உடல் எடையைக் குறைக்கவும்  உதவும்.. வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன், மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரைகளை உடைத்தெறிந்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் தேவையற்ற கொழுப்புக்களைக் கரையச் செய்யும். வெந்தயம் வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். வெந்தயத்தில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட், உடல் பருமனடைவதைத் தடுக்கும்.  வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைத் தடுத்து, உடலின் மெட்டபாலிச அளவை ஊக்குவிக்கும். இதன் காரணமாக அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படும்.  🔯 #வெந்தயத்தை_முளைக்கட்டச் #செய்வது_எப்படி❓ ♦முறை 1 * முதலில் வெந்தயத்தை நீரில் நன்கு கழுவி, ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 12 மணிநேரம் ஊற வைக்க வேண...

தாம்பத்தியத்தின் அவசியம்

 #தாம்பத்தியத்தை_நிறுத்தினால்  #ஏற்படும்_மாற்றங்கள்…❗❗❓❓ பொதுவாகவே குறிப்பிட்ட வயதிற்கு பின் ஆண், பெண் இருபாலருக்கும் தாம்பத்தியத்தை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் இருக்கும்.  உடலுறவு என்பது காமமும், காதலும் சேர்ந்த கலவையாகும். தாம்பத்தியத்தில் பல நன்மைகளும் உள்ளடங்கி இருக்கிறது. தற்போது பல கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டு உறவில் விரிசல் ஏற்படவும் காரணமாக இருப்பதும் தாம்பத்யமே. என்ன தான் உறவில் விரிசல் ஏற்பட காரணமாக இருந்தாலும், அன்பையும்  அன்யோன்யத்தையும் அதிகரிக்கிறது. புதுமண தம்பதிகள் தாம்பத்தியத்தில் அதிகம் ஈடுபடுவார்கள். ஆனால், குழந்தை பிறந்ததும் படிப்படியாக குறைந்து குறிப்பிட்ட வயதில் முற்றிலும் இல்லாமல் போய்விடும்.  பெரும்பாலும் பெண்களுக்கு 40 வயதை கடந்தவுடன் உடலுறவில் நாட்டமின்றி போய்விடும், ஆனால், ஆண்களுக்கு 60 வயதிற்கு மேலும் இதில் ஈடுபாடு இருந்து கொண்டே இருக்கும்.  தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால், தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை முற்றிலும் நிறுத்தினாலும் மாற்றங்கள் ஏற்படும். இங்கு அவை என்னென்ன...

5 மரப்பட்டை கசாயம்

 ஐந்து மரப் பட்டை கசாயம்  நரம்பு முடிச்சு நோய் காரணமாக வரும் புண்கள்  சர்க்கரை நோய் காரணமாக வரும் புண்கள்  கால்களில் ஏற்படும் ஆறாத புண்கள்  உடலில் ஏற்படும் ஆறாத புண்கள்  மோசமான தோல் நோயான சொரியாசிஸ் நோய் புண்கள்  பெண்களுக்கு வெள்ளைபடுதல் காரணமாக ஏற்படும் புண்கள்  மெனோபாஸ் ஆன பெண்களின் பிறப்பு உறுப்பு வறட்சி காரணமாக ஏற்படும் புண்கள்  ஆகிய அனைத்து நாட்பட்ட புண்களையும், ஆறாத குழிப் புண்களையும் குணமாக்க உள் மருந்தாகவும் புண்களைக் கழுவுவதற்கு  வெளிப்புற மருந்தாகவும் பயன்படும் அற்புதமான மருந்து இது  அரச மரப் பட்டை ............  இரண்டு கிராம்  ஆலமரப்பட்டை............  இரண்டு கிராம்  பூவரசு மரப் பட்டை............  இரண்டு கிராம்  அத்தி மரப் பட்டை ............  இரண்டு கிராம் இத்தி மரப் பட்டை ............  இரண்டு கிராம் ஆகிய ஐந்து பொருட்களையும் கொடுத்துள்ள அளவின் படி எடுத்து  நானூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் காய்ச்சி நூறு மில்லி கசாயமாக சுருக்கி இறக்கி வடிகட்டி ஒரு வேளை மருந்தாக குடித்து வ...