சர்க்கரை வள்ளிக்கிழங்கு

 உள்ளுறுப்புகள் தூய்மையாகும்,

குடல் புற்றுநோயைத் தடுக்கும், சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மகத்துவங்கள்.....


சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இயற்கையாக இத்துணை மருத்துவ குணங்களா, அதனால் உடல் முழுவதையும் சுத்தம் செய்ய முடியுமா?


பொதுவாக கிழங்கு வகைகளைச் சாப்பிட்டால் வெயிட் போடும், வாயுத் தொல்லையை உண்டாக்கும் என்று சொல்லியே அவற்றை ஒதுக்கிவிடுவோம். ஆனால், எக்கச்சக்கமான மருத்துவ குணங்களைத் தந்து, இயற்கையாய் உடல் முழுவதையும் சுத்தம் செய்கிறது சர்க்கரை வள்ளிக்கிழங்கு. வாய் முதல் ஆசனவாய் வரையுள்ள உறுப்புகளில் ஏற்படும் சில புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.


முதன் முதலில் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பயிரிடப்பட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கை, கொலம்பஸ் தன் முதல் கடல் பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயினுக்கு திரும்பியபோது கொண்டு சென்றுள்ளார். இங்கிருந்து உலகம் முழுவதும் பரவிய சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆசிய பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.


வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துகள் அதிகம் உள்ளது சர்க்கரை வள்ளிக்கிழங்கு. இளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படும் சத்துகளை அளித்து உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.


இந்தநிலையில், சமீபகாலமாக மருத்துவர் ஆஷா லெனின் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பயன்கள் குறித்துப் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவில், சர்க்கரை வள்ளிக்கிழங்கு நுரையீரலில் ஏற்படும் எம்பஸீமா நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என்றும், குடல் புற்றுநோயில் தொடங்கி உடலிலுள்ள அனைத்து உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது என்றும், இது உள் உறுப்புகளின் வீக்கத்தைக் குறைத்து, உடல் முழுவதையும் சுத்தம் செய்து, உடலை சர்வீஸ் செய்யும் என்றும் மருத்துவர் ஆஷா லெனின் கூறியிருந்தார்.


சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இயற்கையாக இத்துணை மருத்துவ குணங்களா, இப்படி அதனால் உடல் முழுவதையும் சுத்தம் செய்ய முடியுமா என்ற கேள்விகளோடு சென்னை, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியர் எஸ்.டி.வெங்கடேஷ்வரன் அவர்கள் கூறுவது....


சர்க்கரை நோய் வந்துவிட்டால் வாழ்க்கையே போனதாக அர்த்தம் இல்லை. உடலைப் பராமரித்துக் கொள்ளத் தொடங்கும் தருணம் அது. உடலிலுள்ள குளூக்கோஸ் அளவை அதிகரிக்கும் கிளைசெமிக் இண்டெக்ஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கில் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதைச் சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான அனைத்து சக்தியையும் கொடுக்கும். இதை சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்று சொல்வதை விட சர்க்கரை கொல்லிக் கிழங்கு என்றுதான் சொல்ல வேண்டும்.


சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் கரோட்டினாய்ட்ஸ், பீட்டா கரோட்டின் உள்ளிட்ட சில சத்துகள் சில வகையான புற்றுநோய் வராமல் தடுக்கும். புற்றுநோயை குணமாக்க உதவுமா என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.


உருளைக்கிழங்கை விட சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கலோரிகள் அதிகம். இதைச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். இதிலிருக்கும் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் எலும்புகள் வலுப்பெற உதவும். அனைத்திற்கும் மேல், வயது அதிகமாக அதிகமாக பார்வை மங்கும், சருமத்தில் சுருக்கம் ஏற்படும். இது போன்ற வயது முதிர்வினால் ஏற்படும் பிரச்னைகளைக் குறைத்து என்றும் இளமையாகக் காட்டும் சிறந்த உணவு சர்க்கரை வள்ளிக்கிழங்கு.


தினம் தினம், நாம் சாப்பிடும் உணவு மலக்குடலில் தங்கும் போது, மலச்சிக்கல் ஏற்பட்டு நாளடைவில் மலம் இறுகி குடல் புற்றுநோயாக மாறிவிடும். வயிற்றைச் சுத்தம் செய்ய அந்தக் காலத்தில் விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்வோம். ஆனால் தற்போது அதுபோன்ற பழக்கங்கள் இல்லை. குடலை இயற்கையாகச் சுத்தம் செய்ய சர்க்கரை வள்ளிக்கிழங்கை எடுத்துக்கொள்ளலாம்...

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி