முருங்கை விதை

 முருங்கை விதை சூரணம் 

உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருந்து மட்டுமே தீர்வு என நம்புகிறோம் 

ஆனால் உணவே மருந்து மற்றும் உடல் பயிற்சி போன்றவற்றால் குணப் படுத்தும் முறையைப் பின்பற்றுவது மிகவும் நல்லது 

அதற்கு உதவும் உணவே மருந்து இந்த முருங்கை விதை சூரணம் 


மருந்து 

முருங்கை விதை .பொடி .....  ஒரு தேக்கரண்டி 

கொள்ளு  பொடி .....  ஒரு தேக்கரண்டி 

கருப்பு உளுந்து   பொடி  .....  ஒரு தேக்கரண்டி 

பூண்டு ......  ஐந்து பற்கள் 

மிளகாய் வற்றல் .....  ஒன்று 

கறிவேப்பிலை  ....  சிறிது 

 பெருங்காயம் தூள் ...  சிறிது 

இந்துப்பு ....  தேவைக்கேற்ப 

செக்கு நல்லெண்ணெய் ....  மூன்று தேக்கரண்டி 

வாணலியில் செக்கு நல்லெண்ணெய் சிறிது ஊற்றி கறிவேப்பிலை பூண்டு வற்றல் போட்டு வதக்கி பெருங்காய தூள் போட்டுக் கிளறி 

சிறுதீயில் கருகி விடாமல் வதக்கி பின் முருங்கை விதை பொடி கொள்ளு  பொடி கருப்பு உளுந்து   பொடி  போட்டு வதக்கி இறக்கி அரைத்து துவையலாக நாள்தோறும் இரண்டு முறை அல்லது ஒரு முறையாவது உணவுடன் பிசைந்து சாப்பிட்டு வர 

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைத்து ஆண் பெண்களின் பலவீனங்களைக் குறைத்து நீண்ட காலம் ஆரோக்கியமாக வழி செய்யும் அற்புதமான மருந்து அல்ல உணவு இது 


மாத விலக்குக் கோளாறுகள் மற்றும் PCOD என்ற கருமுட்டைப் பைக் கட்டிகளைக் குணப் படுத்தும் அற்புதமான மருந்து இது 

மருந்து சாப்பிட்டால்தான் குணமாகும் என்ற மன நிலையை மாற்றி உணவே மருந்தாக சாப்பிட்டு வர அற்புதமான குணம் காண முடியும் 

பெண்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும் 

கருமுட்டை பை நீர்க்கட்டிகளால் பி சி ஒ டி யினால் 

உடல்  எடை அதிகரிப்பது 

தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேர்வது 

வயிற்று பகுதி அடிவயிறு பகுதி பிட்டப் பகுதி 

தொடைப்பகுதி போன்ற இடங்களில் கடுமையான அளவு உடல் எடை அதிகரிப்பது 


முகத்தில் உடலில் தேவையற்ற இடங்களில் முடி அதிகமாக வளர்வது 

ஆண்மைத்தன்மைக்கான ஹார்மோன்கள் அளவு அதிகமாகி பெண்களுக்கான நாளமில்லா சுரப்புகளின் அளவு குறைந்து விடுவது போன்ற பிரச்சினைகள் அடுக்கடுக்காக ஏற்படும் 

ஒரு அளவுக்கு மேல் தைராய்டு பிரச்சினைகள் குறைபாடுகள் சிறு வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப் படுவது போன்ற பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்புள்ளது 

இதற்காக  ஹார்மோன் ரீப்லேஸ்மென்ட் சிகிச்சை அல்லது கருத்தடை மாத்திரைகளோதான் பரிந்துரைக்கப் படுகின்றன 

அந்த மாத்திரைகளை சாப்பிட்டு வரும்போது மாதவிலக்கு ஒழுங்காக வருவது போல இருந்தாலும் பக்க விளைவுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது 


ஆனால் மாத்திரை மருந்துகள் சாபிட்டால் உடல் எடை அதிகமாவது மட்டுமன்றி பல பக்க விளைவுகளையும் சந்திக்க வேண்டி உள்ளது  


இந்தப் பிரச்சினைகளில் இருந்து விடுபட இயற்கையான முறையில் உணவு மூலம் இந்தப் பிரச்சனைகளை சரி செய்ய இந்த முருங்கை விதை சூரணம் உதவும் 


தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடலின் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளைத் தூண்டி 

உடலில் வளர்சிதை மாற்றங்களை கட்டுப் படுத்தும் காரணிகளை சரிசெய்து உடல் இயக்கத்துக்குத்தேவையான பலத்தைக் கொடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 

குழந்தைகள் கூட இந்த சூரணத்தை விரும்பி சாப்பிடுவார்கள் 


கருமுட்டைப் பை நீர்க் கட்டிகளைக் குணப் படுத்த மிகப் பெரிய அளவில் உதவும்  அற்புதமான மருந்து அல்லது உணவு இது

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி