தலைவலி - 2

 #தலைவலி_பகுதி_2


தலைவலியின் வகைகள் மற்றும் அது உருவாகும் காரணங்கள் பற்றி சீன அக்குபங்சர் முறையில் பார்த்துவருகிறோம்,

 கடந்த பதிவில் பரம்பரை மூலம் வரும் தலைவலிகள் பற்றி விரிவாக  பார்த்தோம்..

அதன் தொடர்ச்சியாக மனிதன் #உணர்ச்சிகள் எவ்வாறு ஆரோக்கியத்தை பாதித்து தலைவலிகளை ஏற்படுத்துகிறது என்று பார்ப்போம்.


 உணர்ச்சிகள்.


மனிதனிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு உணர்ச்சியும் ஏதாவது ஒரு உள்ளுறுப்போடு சம்மந்தம் கொண்டிருக்கும்.


கோபம்-கல்லீரல்

துக்கம்-நுரையீரல்

சிரிப்பு-இதயம்

பயம்-சிறுநீரகம்

சோகம்-மண்ணீரல்


இதனடிப்படையில் மனித உணர்ச்சிகளுக்கும் நோய்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு, அதிலும் குறிப்பாக உணர்ச்சிகளுக்கும் தலைவலிக்கும் மிகமிக நெருங்கிய தொடர்புண்டு என்றால் அது மிகையாகாது.


◆கோபம்.

 சீன மருத்துவத்தில் விரக்தி, மனக்கசப்பு ஆகிய உணர்வுகளும் கோபம் எனும் உணர்ச்சியின் வகையை சார்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த உணர்ச்சிகள் கல்லீரலின் Yang rising, மற்றும் கல்லீரல் fire'க்கு காரணமாக இருக்கிறது. 

கல்லீரல் yang rising மற்றும் fire blazing காரணமாக வெப்பம் மேலேறி தலைவலியை ஏற்படுத்தும், 

இது தலையில் பித்தப்பை சக்தியோட்ட பாதை செல்லும் இடங்களான உச்சந்தலை மற்றும் பக்கவாட்டு தலை பகுதிகளில் தலைவலியாக பிரதிபலிக்கும்.


கோபம் மட்டுமே தலைவலியை ஏற்படுத்தும் என்றில்லை,


◆கவலை.

அதிகப்படியான கவலை Qi ஐ தடை செய்கிறது, குறிப்பாக இதயம் மற்றும் நுரையீரல் Qi. இது பெரும்பாலும் தலைவலிக்கான ஒரு மறைமுக காரணமாகும்.

அதாவது நுரையீரல் Qi பாதிப்படையும் போது, கல்லீரல் yang  risingஆனது தலையை அடைவதற்கு வழி கிடைத்து தலைவலியை உண்டுபண்ணுகிறது.

கவலை எனும் உணர்ச்சியால் ஏற்படும் தலைவலியானது தலையின் மேல் பகுதி மற்றும் முன் பகுதியில் சற்று மந்தமான தலைவலியாக இருக்கும்.


◆சோகம்-வருத்தம்.

இந்த உணர்ச்சியானது Qi ஐ குறைக்கும், அதேவேளையில் இரத்தத்தையும் குறைத்து இரத்த குறைபாட்டுக்கு (blood deficiency) அடிகோலும்.


இரத்தம் குறைந்தால் இயற்கையாகவே தலைவலி ஏற்படும், இரத்த பற்றாக்குறை நீண்டகாலம் தொடரும் பட்சத்தில் கல்லீரல் சூடு அதிகரித்து அதன் காரணமாக தலைவலி பிரச்சனை தொடர்கதை ஆகிவிடும்.

பெண்களே இரத்த குறைபாட்டால் வரும் தலைவலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.


◆பயம்.

நீண்டகாலமாக இருக்கும் பய உணர்ச்சியானது சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கிறது, இது நேரடியாகவே தலைவலியை ஏற்படுத்தும், தலை முழுவதும் இந்த வலியை உணரமுடியும், 

சிறுநீரக எஸன்ஸ் குறைபாடானது மறைமுகமாக கல்லீரலின் வெப்பத்தை அதிகரக்க வழிவகுக்கும்.


◆அதிர்ச்சி.

   இந்த உணர்ச்சி Qi'யின் ஓட்டத்தை தடை செய்யும், குறிப்பாக இதயம், நுரையீரல் மற்றும் மண்ணீரல் Qi'யை தடை செய்து முழு தலையிலும் வலியை ஏற்படுத்துகிறது.


◆மிக்குணர்வு.

  இது அதிக சிந்தனை, ஏக்கம், மனதிற்கு அதிகமாக வேலை கொடுத்தல், ஏமாற்றம் போன்ற பல்வேறு தன்மைகளை உள்ளடக்கிய ஒரு உணர்ச்சியாகும்.


மனதின் அதிகப்படியான செயல்பாடுகளால் சிரார்களுக்கு மிகக்கடுமையான தலைவலி ஏற்படும்.

பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்புகளால் சிறு வயதிலேயே பள்ளிகளில் சேர்த்துவிடுகின்றனர், பள்ளியையும் பெற்றோரையும் திருப்தி அடைய செய்வதற்காக மனதுக்கும் மூளைக்கும் மிகுந்த கவலையுடன் பல மணி நேரம் வேலை கொடுக்கிறார்கள், 

இதனால் சிறுவயதிலேயே தலைவலி மற்றும் மைக்ரேன் தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்,

மேலும் அதிக நேரம் புத்தங்களை படிப்பது அல்லது கணினியை பார்ப்பது போன்ற செயல்களால் கண்களுக்கு அதிக வேலை தருகிறார்கள், இதுவும் தலைவலிக்கான ஓரு முக்கிய காரணமாக உள்ளது.


◆குற்ற உணர்வு.

   இன்றைய சூழலில் எல்லா தரப்பு மக்களும் ஏதேனும் ஒருசில தருணத்தில் குற்ற உணர்ச்சிக்கு ஆளாவதை பார்க்க முடிகிறது, 

கலாச்சாரம், சமுதாய கட்டமைப்பு, அரசியல் சட்டங்கள், விதிமுறைகள் போன்ற பல காரணங்களால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகின்றனர். 

குற்ற உணர்வு என்பதிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம்.

நெடுங்காலமாக ஒருவருக்கு குற்ற உணர்வு இருக்குமாயின் அவரது உடலின் Qi தேக்கம் அடைகிறது, இது எந்த உள்ளுறுப்புகளிலும் நிகழலாம், Qi தேக்கமானது வெகு சுலபமாக இரத்த தேக்கத்திற்கு வித்திடும் என்பதை நாம் அறியவேண்டும்.

குற்ற உணர்ச்சி காரணமாக ஏற்பட்ட இரத்த தேக்கமானது Upper burner'இல் உள்ள சக்தியோட்ட பாதைகள் வழியாக தலைவலியை ஏற்படுத்துகிறது.


◆ அவமானம்-வெட்கம்

   வெட்கம்-அவமானம் என்பது சுயமதிப்பு இல்லாதபோது ஏற்படக்கூடியது,

வெளியே செல்லாமல் மனிதனை முடக்கி வைக்கக்கூடியது, எனவே

இந்த உணர்ச்சி உள்முகமாக திரும்பக்கூடயது எனலாம், 

இந்த உணர்வு நாள்பட்டு இருக்குமாயின் Qi தேக்கமடைந்து அதன் சக்தியை இழந்து Qi sinking எனும் நிலைக்கு கொண்டுபோய்விடும்.

மண்ணீரல் Qi பாதிக்கப்பட்ட நிலையில் ஈரப்பதம் (Dampness) உருவாகிறது, இது தலையில் சேர்ந்து நாட்பட்ட தலைவலியை உருவாக்கும்.


தொடரும்.


மகேந்திரன்.

ஜேடர்பாளையம்.

நாமக்கல் மாவட்டம்.

cell-9597820861

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி