வாயில் எச்சில் ஒழுகுதல்

 #வாயை_திறந்து_தூங்கும் 

#பழக்கத்தைக்_கொண்டவரா❓❗


#தூக்கத்தில்_எச்சில்_வடிக்கும் 

#பழக்கம்_உள்ளவரா_நீங்கள்……❓❗


👉 `பொதுவாக  மனித உடலில் உமிழ்நீர் சுரப்பியால் ஒரு நாளைக்கு 1 முதல் 2 லிட்டர் எச்சில் சுரக்கும். தூங்கும் சமயங்களில் நமக்குத் தெரியாமல் வெளிவரும் எச்சிலைத்தான் `ஜொள் வடிப்பது' என்றும் ஆங்கிலத்தில் `ட்ரூலிங்' (Drooling) என்றும் சொல்வார்கள்.


இயற்கையாகவே எச்சில், வாயில் அமில உற்பத்தியை அதிகரிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்.


தூங்கும் போது பெரும்பாலானோர் வாயை திறந்தவாறு தூங்குவார்கள். வேண்டுமென்றே யாரும் அப்படி தூங்குவதில்லை. இருப்பினும் இப்படி வாயைத் திறந்தவாறு தூங்குவதால் தான், தூங்கி எழுந்த பின் அனைவரது வாயும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.


வாயை திறந்தவாறு தூங்கும் போது, பாதுகாப்பை வழங்கும் எச்சில் வறட்சியடைவதோடு, அது பற்களையும் பாதிக்கிறது. தூங்கும் போது வாயை திறந்தவாறு தூங்குவதால் வாயில் அமில அளவுகள் அதிகரித்து, பல் அரிப்பு மற்றும் பற்கள் சொத்தையாக ஆரம்பமாகும்.


தூக்கத்தில் வாய் திறந்திருப்பதே, எச்சில் வெளிவருவதற்கு முக்கியக் காரணம். எச்சில் வடிதல் என்பது அளவாக இருக்கும்வரை எந்தச் சிகிச்சையும் தேவையில்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக ஏற்படும் நிலையில் சிகிச்சைகள் அவசியம்.


இரவு தூங்கி காலையில் எழுந்து பார்க்கும்போது தலையணை ஈரமாகவும், ஆங்காங்கே வெள்ளைக் கறை படிந்தும் இருக்கும் அனுபவம் நம்மில் பலருக்கு ஏற்பட்டிருக்கும். இது தூக்கத்தின்போது வாயிலிருந்து எச்சில் வழிவதால் ஏற்படுகிறது.


சிலருக்குப் பயணத்தின்போது உறங்கிய நிலையில் எச்சில் வடிக்கும் பழக்கம் இருக்கும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலருக்கும் இந்தப் பிரச்னை இருக்கும். 


தூக்கத்தில் எச்சில் வடிப்பதால் உறவினர்கள், நண்பர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகியிருப்போம்.


 

 🔯 #காரணங்கள்❓


⭕ கணைய அழற்சி


இது உமிழ்நீர் சுரப்பிகளின் இயல்பான தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். பல வருடங்களுக்கு மேலாக தொடரும் குடிப்பழக்கத்தால் இது ஏற்படுகிறது.


⭕ வாய் புண்


வாயில் புண் இருக்கும்போது உமிழ்நீர் சுரப்பு அதிகமாவது இயற்கைதான். எனவே, வலிமிகுந்த வாய்வழி புண்களால் உமிழ்நீர் சுரப்பு அதிகமாகவே இருக்கும். அத்தகைய புண்களின் அறிகுறிகள் வழக்கமாக வலி மற்றும் சிவப்பு நிற புடைப்புபோலத் தோன்றும்.


⭕ கல்லீரல் நோய்


உமிழ்நீர் சுரப்பு தன்னியக்க நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. கல்லீரல் நோயால் அதிகமான உமிழ் நீர் உற்பத்தி தூண்டப்படலாம்.


⭕ வாய்வழி தொற்றுகள்


வாய்வழி வீக்கம் அதிகமான உமிழ்நீர் சுரப்பை ஏற்படுத்தலாம். தொண்டை அழற்சி போன்ற வாய்வழி தொற்றுகள் அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பை ஏற்படுத்தும். வாய்வழித் தொற்று ஹெர்பெஸ் போன்ற ஒரு வைரஸ் தொற்று வடிவில் கூட ஏற்படலாம். இது வாய் மண்டலத்தை சுற்றி காய்ச்சல், கொப்புளங்கள் மற்றும் இரைப்பை குடல் அழற்சி நோய் குளிர் புண்களை ஏற்படுகிறது. 


⭕ வயது - குழந்தைகள் எச்சில் வடிப்பது பொதுவானது. குழந்தைகளால் முகத் தசைகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாததால் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட எச்சில் வடித்துக்கொண்டே இருப்பார்கள். 

2 வயதுக்கு மேல் இது குறையத் தொடங்கும்.


⭕ தூங்கும் நிலை - முதுகைத் தரையில் நேராக வைத்துத் தூங்கும்போது எச்சிலைச் சுலபமாக விழுங்கிவிடலாம். அதுவே, பக்கவாட்டில் திரும்பிப் படுக்கும்போது எச்சில் வாயின் ஒரு பக்கம் சேர்ந்துவிடுவதால் தூக்கத்தில் எச்சில் வழிகிறது. 


⭕ மன அழுத்தம் - மனஅழுத்தத்தால் ஏற்படும் பக்கவிளைவுகளில் அதிகமாக உமிழ் நீர் சுரப்பதும் ஒன்று. 


⭕ அஜீரணம் - அஜீரணப் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு உமிழ் சுரப்பி அதிகமான உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. அதிகமான உமிழ் நீர் சுரப்பதால் தூக்கத்தில் எச்சிலை விழுங்க முடியாத நிலை ஏற்படும். 


⭕ ஒவ்வாமைகள் மற்றும் சளி - ஒவ்வாமை மற்றும் சளிப் பிரச்னைகளால் ஏற்படும் மூக்கடைப்பால் தூக்கத்தில் எச்சில் வழியக்கூடும். மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள் பொதுவாக வாயால் மூச்சுவிடுவார்கள். வாயால் மூச்சுவிடும்போது அதிகமாக உமிழ் நீர் சுரக்கும் என்பதால் தூக்கத்தில் எச்சில் வழியும்.


⭕ தொண்டைப் பிரச்னைகள் - தொண்டை வலி மற்றும் தொண்டை எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது எச்சிலை விழுங்குவதில் சிரமம் ஏற்படும். அந்தச் சமயத்தில் உடல் எச்சிலை வாய் வழியாக வெளியேற்றும்.


⭕ மருந்துகள் - தூக்கத்திற்காக மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கும். அதுமட்டுமன்றி, தூக்கத்துக்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதால் தன்னை மறந்து ஆழ்ந்த நிலையில் தூங்குவதாலும் எச்சில் வழியக்கூடும். 


⭕ நரம்பியல் பிரச்னைகள் - தூக்கத்தில் எச்சில் வடிப்பதற்கான முக்கியக் காரணங்களில் நரம்பியல் கோளாறுகளும் ஒன்று. பக்கவாதம், கட்டிகள், பெருமூளை வாதம் போன்ற நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தூக்கத்தில் அதிகமான எச்சில் வடிய வாய்ப்பு உள்ளது.


#பிரச்னைக்குத்_தீர்வு_என்ன❓


தூங்கும்போது முதுகைத் தரையில் வைத்து நேராகப் படுத்து உறங்க கற்றுக்கொள்ள வேண்டும். நேராகத் தூங்கும்போது உடல் இயற்கையாகவே எச்சிலைச் சுலபமாக விழுங்கிவிடும். 


இடது பக்கமாக தூங்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் வாயை திறந்தவாறு தூங்குவதைத் தவிர்ப்பதுடன், பற்கள் பாதிப்படைவதையும் தடுக்கலாம்.


வாயில் உண்டாகும் எச்சில் உற்பத்தியை குறைப்பதில் தண்ணீருக்கு மிக அதிக பங்கு உண்டு. தண்ணீர் அதிகமாகக் குடித்தால் தான் எச்சில் அதிகமாக உற்பத்தியாகும் என்று நினைப்பது மிக மிக தவறு. அதிகமாக தண்ணீர் குடித்தால் எச்சில் உற்பத்தி குறைய ஆரம்பிக்கும்.


மௌத் வாஷ் பயன்படுத்தி வாயைக் கழுவுதல் வாயை தற்காலிகமாக உலர வைக்க உதவுகிறது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி