ஆவாரை குளியல் பொடி

 எளிய முறையில் அழகையும் ஆரோக்கியத்தையும் பெறலாம்


 ஆரோக்கிய குளியல் பொடி


தேவையான பொருட்கள்

 ஆவாரம் இலை பொடி 150 கிராம். .

.ஆவாரம் பூ பொடி 50 கிராம் 

 சீயக்காய் தூள் 100 கிராம்


  இவைகளை ஒன்றாகக் கலந்து கொண்டு குளிக்கும் பொழுது   உச்சி முதல் பாதம் வரை  தலைக்கு தேய்ப்பதற்கும் மேலும் உடலுக்கு வாசனை சோப்பிற்கு பதிலாகவும் இந்த பொடியை தேய்த்து குளிக்கலாம்


பயன்கள்

உடல் குளிர்ச்சி அடையும் 

வேர்வை நாற்றம் நீங்கும் 

தோல் நோய்கள் உடலில் தோன்றாது 


தோலில் சுருக்கம் எப்பொழுதும் ஏற்படாது


உடல் நமைச்சல் உடல் அரிப்பு குணமாகும்


உடலுக்கு நல்ல நிறத்தை தரும் 

முகத்தில் வசீகரம் உண்டாகும்


இதை  முகத்தில் தேய்த்து குளித்துவந்தால் கொப்பளங்கள் பருக்கள் தோன்றாது


முகம் அழகாய் மிளிரும்


மொத்தத்தில் உடலிலுக்கு அழகும் ஆரோக்கியமும் உண்டாகும்


இன்னொரு முறை


  வாகை மரத்தின் உள் பட்டையை பொடியாக செய்து கொண்டு உடலுக்கு குளிப்பதற்கு பயன்படுத்தினால் உடலில் இருக்கின்ற தீராத அழுக்குகள்  கரும்புள்ளிகள் படைகள்  போன்ற  தோல் சார்ந்த சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்


  தோலில் படிந்திருக்கின்ற அழுக்குகளை நீக்கி இதன் மூலம் முழு அழகையும் தருகின்ற ஒரு அற்புத ஆற்றல் வாகை மரப்பட்டைக்கு  உண்டு


  இந்த வாகை மர பொடியுடன் சிறிது பசும்பால் கலந்து இதை முகத்திற்கு மேல்பூச்சாக பூசி முப்பது நிமிடம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகம்  அழகாக தோன்றும்


இதன் மூலம் இளமையான தோற்றம் முகத்தில் எப்போதும் இருக்கும்


நன்றி 

பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

இடு மருந்து

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்