விபூதி எனும் மருந்து

 நீண்ட நாட்களுக்கு பிறகு முறையாக சுரகுடுவையில் புடமிட்டு எங்கள் வீட்டில் சகல நோய்களையும் தீர்க்கும் ஜீவ பஸ்ப திருநீறு தயாரித்து வெற்றியும் கண்டேன். அந்த முறையை இன்று சித்தர்களின் குரலில் உங்களுடன் பகிர்கிறேன்... நீங்களும் தயாரித்து பயன் பெறுங்கள்....


(சிறு வயதில் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகளிடம் மூலிகை ரகசியங்களை பற்றி படிக்கும் போது "போகர் நிகண்டு" என்ற நூலில்  அவர் சொன்ன அபூர்வ ரகசியம் இது.)


விபூதியை கொண்டு அனைத்து வித நோய்களையும் குணமாக்கும் சித்து இது !!!


நமது நாட்டில் பெரும்பாலும் சாமியார்கள் அவர்களை பார்க்க சென்றால் விபூதி வழங்குவது வழக்கம் !!!


சிறிது வாயில் போட்டு விட்டு சிறிது நெற்றியில் இட்டு விடுவார்கள் !!!


அது பல விதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உடையதாக இருக்கும். சரி வெறும் விபூதி மட்டும் எப்படி இவ்வளவு ஆற்றல் வாய்ந்தது என்று சந்தேங்கம் தோன்றுவது இயல்பு தான்.


இவை வெறும் சித்து மட்டும் இல்லை இவை மருத்துவ குணம் வாய்ந்தது !!!


சிலர் சிறுநீரகத்தில் கல் இருந்தது அவர் கொடுத்த விபூதி மூன்று நாள் சாப்பிட சொன்னார் ஸ்கேன் செய்து பார்த்தும் கல் இல்லை என்று சொல்லி வியப்படைவதை பார்த்து இருக்கிறோம்.


இன்னும் சிலர் கை கால் தீராத வலி இருந்தது அந்த மகான் மந்திரித்து கொடுத்த விபூதி ஒருவாரத்தில் சரி செய்தது என்று சொல்ல கேட்டு இருக்கோம். 


இன்னும் சிலர் மூட்டுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, குதிங்கால்வலி, கெண்டைக்கால் சதை வலி போன்று அவதியில் இருந்தேன் தினமும் அந்த சாமியார் கொடுத்த விபூதி சாப்பிட்டேன் முழுமையாக குணமாகி விட்டது என்று கேள்விப் பட்டு இருக்கோம்.


சிலர் சொறி, சிறங்கு போன்றவற்றால் அவதி பட்டு இந்த விபூதியை அதன் மீது போட்டும் விபூதியை உண்டும் குணமானதை கண்டு இருக்கோம் !!!


இவை வெறும் கதைகளா அல்லது அவர்கள் சொல்வது உண்மையா ?


இவை அனைத்தும் நிதர்சனமான உண்மை தான். சரி அந்த விபூதி தயாரிப்பது எப்படி !!!


இரண்டு கிலோ சுத்தமான பசுஞ்சாண விபூதி வாங்க வேண்டும். அதில் கீழ் கண்ட 11 பற்பங்களையும் 10gr வீதம்  சேர்க்க வேண்டும்.


(1)படிகார பஸ்பம் - 10 கிராம்

(2)கல் நார் பஸ்பம் - 10 கிராம் 

(3)குங்கிலிய பஸ்பம் - 10 கிராம் 

(4)நண்டுக்கல் பஸ்பம் - 10 கிராம் 

(5)ஆமை ஓடு பஸ்பம் - 10 கிராம் 

(6)பவள பஸ்பம் - 10 கிராம் 

(7)சங்கு பஸ்பம் - 10 கிராம் 

(8)சிலா சத்து பஸ்பம் - 10 கிராம் 

(9)சிருங்கி பஸ்பம் - 10 கிராம் 

(10)முத்துச் சிப்பி பஸ்பம் - 10 கிராம் 

(11)நத்தை ஓடு பஸ்பம் - 10 கிராம் -


                  இது அனைத்தும் நீர் சத்து அதனால் மேலே சொன்ன அனைத்தும் நடக்கும்.


மேலும், 

1. கல்நார் பற்பம் (சிறுநீரகம்,பிறப்புறுப்பு மண்டலம்),

2. படிகார பற்பம் (குடல்புண்,சிறுநீரகம்),

3. சிலா சத்து பற்பம் (எலும்பு மண்டலம், உடலின் அத்தனை உறுப்புக்கள், சிறுநீரகம், பிறப்புறுப்பு மண்டலம்),

4. ஆமையோட்டு பற்பம் (எலும்பு மண்டலம், வயிறு, கல்லீரல், மண்ணீரல்),

5. சிருங்கி பற்பம் (எலும்பு மண்டலம், இதயம், இரத்தக் குழாய்கள்).

(சிருங்கி பற்பம் என்பது மான் கொம்பு பற்பம் ஆகும்)


இந்த பற்பங்கள் ஒவ்வொன்றும் 10 கிராம் போதுமானது. இது தான் மருந்து. இவை தான் நோய்களையும் குணப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.


மேலுள்ள 11  பற்பங்களையும் கலந்து அதை ஒரு விபூதியுடம் கலந்து வைத்துக் கொண்டு கொடுக்க வேண்டியது தான். சிலர் கோயிலில் சாமியார் போல் உட்கார்ந்து வரும் நபருக்கு வெறும் விபூதியை இட்டுவிட்டு, கலந்து வைத்திருக்கும் பற்பக் கலவையை ஒரு சிட்டிகை எடுத்து விபூதியை வாயில் போடுவது போல போட்டுவிட்டால், அந்த நபருக்கு எந்த வியாதி இருந்தாலும் போய்விடும் !!! இதை சித்து என்றும் சொல்லலாம் மருந்து என்றும் சொல்லலாம். இந்த திருநீறு பிரயோகம் மூலம் அதன்மூலம் பயன் பெற்றவர்கள் ஏராளம்.


இவைகள் அனைத்தையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நன்றாக கலந்து ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது காந்தம் பிடிக்காத எவர்சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கவும் . இது சுமார் ஒரு வருட உபயோகத்திற்கு வரும்.


இது பசும்சாணத்தோடு பல ஜீவராசிகளின் உயிர் பஸ்பங்களை முறைப்படி அளவோடு கலந்து தயாரிக்கப்படுவதால் இதற்கு ஜீவ பஸ்ப விபூதி என்று பெயர். இதனை நீரில் குழைத்து இடும்போது ஒருவித கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே மிகப்பெரிய சக்தி யாகும்.


இதனை தாம்பளத்தில் பரப்பி எந்த காரியம் சாதிக்க வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதில் உயிர் உள்ள ஜீவ பஸ்பங்கள் சேர்ததிருப்பதால் மிளகுப் பிரமாணம் எடுத்து சாப்பிட உடலில் இருக்கும் நோய் தீரும். மந்திரங்கள் ஜபித்து இடும்போது தொழில் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் தீரும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதனை பயன்படுத்த வேண்டும்.


சரி "தூய திருநீறு தயாரிப்பது எப்படி?" என்று பல அன்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பார்கள். அவர்களிக்கும் சேர்த்து இந்த பதிவை பகிர்கிறேன்


[ திருநீறு என்பது ஆன்மிக சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; இது மிகச்சிறந்த மருந்து. நமது உடலிலுள்ள கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றும் செயலுக்காக மூலிகைகளைக்கொண்டு சித்தர்கள் அவர்கள் முறையில் உருவாக்குகிறார்கள் இந்த திருநீறை. மூன்றுவிதமான பொருட்களை நெருப்பில் எரித்து, அதிலிருந்து பெறப்படும் சாம்பலே திருநீறு என்று கூறப்படுகிறது.


பெரும்பாலும் நமக்குக் கிட்டுவது சித்தர்கள் கூறிய திருநீறல்ல. இது ஒருவகை வெண்ணிற மண்ணாகும். சில ரசாயனப் பொருட்கள் மூலமும் இந்த விபூதி தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.


திருநீறு தயாரிக்கும் முறை

1. பசுமாட்டுச் சாணம்

2. திருநீற்றுப் பச்சிலைகள். (திணுத்திப் பச்சை இலை)

3. வில்வப்பழ ஓடுகள்


 மேற்கண்ட மூன்று பொருட்களையும் சமஅளவு சேகரித்துக் கொள்ளவேண்டும். இதில் திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்துக் கொண்டு, அதனை பசுஞ்சாணத்துடன் நன்கு கலந்துகொள்ள வேண்டும். பின் இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும். நன்றாகக் காய்ந்ததும் அவற்றை ஒன்றாக அடுக்கிவைத்து நெல் உமியால் மூடி நெருப்பு வைத்து புடம் போடவேண்டும். எருமுட்டை நன்கு வெந்து தீ தணிந்த பின்பு, இந்த சாண உருண்டைகள் வெண்மையானதாகிவிடும். நன்கு வெந்த இந்த சாண உருண்டைகளை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். தேவையானபோது ஒரு உருண்டையை எடுத்து தூளாகச் செய்து, அந்தத் தூளை மெல்லிய துணியில் சலித்தால் மிக மென்மையான திருநீறு கிடைத்துவிடும்.


இதுதான் உண்மையான திருநீறாகும். இதனை நமது நெற்றியிலும், தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரினை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும். எலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும். தொடர்ந்து பயன்படுத்திவந்தால் இந்த நோய்களை வராமலே தடுத்துவிடும். நமது நெற்றியில் பற்றுபோல் தினமும் பூசிவந்தால் தலையில் நீர் சேராமல் தடுத்து, தலைவலி, தலைபாரம் போன்ற சிறு உபாதைகளை நீக்கிவிடும்.


இந்த சாம்பலை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டு எச்சில் கூட்டிக் கலந்து உள்ளே அருந்தினால் வயிறு சம்பந்தமான சில நோய்கள் குணமாகும். முன்னாட்களில் சில சாமியார்கள் இதனை தயார் செய்து வைத்துக்கொண்டு, தன்னை நாடிவரும் மக்களுக்கு இந்த விபூதியை பூசிக்கொள்ளவும், சாப்பிடவும் கடவுளை வணங்கிக் கொடுப்பார்கள்.


பூசி, சாப்பிட்ட சிறிது நேரத்தில் நோய் சிரமம் நீங்கும். மக்கள் அந்த சாமியார்களை கடவுள் அனுக்கிரகம் பெற்றவர் என புகழ்ந்துபேசுவர். இதனைத்தான் “தந்திரமாவது நீறு’ என்றனர் பெரியோர். உண்மையான இறையருள் சேரும்போது இதன் வலிமை பலமடங்காகும்.

மூன்று பொருட்களைக்கொண்டு தயாரிப்பதாலும், திருநீற்றுப் பச்சிலை சேர்த்துச் செய்வதாலும் இதனை திருநீறு என்றனர். இந்த உண்மையினை...

புத்தியால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்

மூலமதையறிந்தக்கால் யோகமாச்சு

என்று என் குரு அகத்தியர் அடிக்கடி என் கனவில் கூறுவார்.


இந்த விபூதி பதினெட்டு சித்தர்கள் உருவாக்கி உபயோகப்படுத்தி வந்த மூலிகை மருத்துவப் பொருளாகும் . எனவே மனிதனாகப் பிறந்த அனைவருமே இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


குறிப்பு:-

*********


தயாரிக்கும் முறையை ஒளிவு மறைவு இல்லாமல் முழுமையாக பகிர்ந்துளேன். அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். தேடி வாங்கி நீங்களே வாங்கி தயாரித்து பயன்படுத்துங்கள். அப்போது தான் அதன் அருமை உங்களுக்கு புரியும். மேலும் இது போன்ற அனைத்து சித்தர்களால் உலகுக்கு அருளப்பட்ட அனைத்து யோக முறைகள், அபூர்வ சாதனைகள், தந்திர பிரயோகங்கள் அனைத்தையும் முழுமையாக சித்தர்களின் குரல் முக பக்கத்தில் எழுதுகிறேன்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி