விசக்கடி மருந்து

 *                விஷக்கடி வைத்தியம்


 எந்த வகையான விஷ ஜந்துக்கள் கடித்து விட்டாலும் உடலில் விஷம் ஏறாமல் இருப்பதற்கான முதல் உதவி  வைத்தியம் இது

 

  சுக்கு மிளகு திப்பிலி மூன்றையும் சம அளவாக எடுத்து பொடி செய்து கொண்டு இதன் மொத்த எடைக்கு பச்சையாக இருக்கின்ற கருடன் கிழங்கை சேர்த்து முதலில் கருடன் கிழங்கை மைபோல அரைத்துக் கொண்டு அதன்பின் இந்த பொடி வகைகளை கருடன் கிழங்குடன் சேர்த்து பசும்பால் விட்டு அரைத்து பட்டாணி அளவு சிறுசிறு மாத்திரைகளாக  உருட்டி நிழலில் உலர்த்தி பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும்


   பூரான் தேள் பாம்பு முதலிய வேறு எந்த விஷ ஜந்துகள் கடித்து இருந்தாலும் இதிலே இரண்டு மாத்திரைகளை உள்ளுக்கு விழுங்கி விட்டு இரண்டு மாத்திரையை பசும்பால் விட்டு அரைத்து கடித்த இடத்தில் மேல்பூச்சாக பற்றுப்போட்டு வந்தால் எந்த வகையான விஷம் தீண்டி இருந்தாலும் இதன் விஷங்கள் எதுவும் நமது உடலிலே பரவாது 


மேலும்  இந்த மாத்திரையை ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் சுத்தமாகும் உடலில் இருக்கின்ற அனைத்து வகையான விஷக்கடிகளும் குணமாகும் தோல் நோய்கள் அனைத்தும் நீங்கும்


   வேலிப்பருத்தி இலை குப்பைமேனி இலை இரண்டையும் சம அளவாக கொண்டுவந்து இடித்து இதில் 100 மில்லி சாறு எடுத்துக் கொண்டு இதனுடன் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு கருடன் கிழங்கை அரைத்து இந்த சாற்றுடன் கலந்து குடித்து விட்டால் எந்த வகையான விஷ ஜந்துக்கள் கடித்து இருந்தாலும் இதனுடைய விஷம் உடலில் ஏறாது உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம்


  வேலிப்பருத்தி மூலிகையை முழு செடியாக பிடுங்கி வந்து இதில் இரண்டு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு  சுக்கு மிளகு திப்பிலி தலா 5 கிராம் இதில் சேர்த்தரைத்து பாம்பு கடி வாயில் மேற்பூச்சாக பற்றிட விஷம் கீழ் நோக்கும் மேல் ஏறாது பிறகு விரும்பிய வைத்தியத்தை பார்த்து குணம் காணலாம்


           வளமுடன் வாழ வாழ்த்துக்கள்


                       சித்தர்களின் சீடன்

                 பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி