குப்பை மேனி இலை

 குப்பைமேனி


மூலிகை களஞ்சியம்


குப்பைமேனி சர்வ சாதாரணமாக எங்கும் கிடைக்கும் ஓர் அற்புதமான மூலிகை செடி சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் கபக் கட்டு நீங்க இதன் சாற்றை கொடுக்க வாந்தியுடன் கபம் வெளியேறும் இலையை சிறிதளவு உப்புடன் சேர்த்து சொறி சிரங்கு மீது தடவி கழுவி விட வேண்டும் பின்பு தேங்காய் எண்ணெயை தடவ குணமாகும்


இதன் இலைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து சூடு செய்து வெது வெதுப்பாயிருக்கையிலேயே உடல் வலிகளுக்கு தடவ குணமாகும்


இதன் இலையை சமைத்து சாப்பிடலாம் இதை உணவில் சேர்த்துக்கொள்ள திமிர் வாதம் குணமாகும்


குப்பைமேனி இலையை நிழலில் உலர்த்தி ஒளித்து வைத்துக்கொண்டு குழந்தைகளின் வயிற்றில் வேதனை உண்டு பண்ணும் புழுக்கள் வெளியாக இதை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கலந்து புகட்ட வேண்டும் படுக்கை புண்களை குணப்படுத்த இத்தூளை அதன் மேல் தூவி தேங்காய் எண்ணெய் தடவ குணமாகும் இதன் இலைகளை ஆமணக்கு எண்ணெய்  ஊற்றித் தாளித்து 40 நாள் தொடர்ந்து காலையில் சாப்பிட மூலம் நமைச்சல் பிற தோல் நோய்கள் நீங்குவதுடன் தோல் பளபளப்பாகும்


மேலும் இது எலிக்கடி பூரான் கடி விஷத்தை நீக்கும் இதற்கு கடிவாயில் இலைச்சாற்றுடன் சிறிது அளவு சுண்ணாம்பு சேர்த்து தடவ வேண்டும் மேலும் இது தேள்கடி விஷத்தை முறித்து கடுப்பை குறைக்கும்


இலையை அரைத்து சுண்ணாம்புடன் கலந்து வேதனையுடன் கூடிய வீக்கங்களுக்கு கட்டிகட்கும் பூச குணமாகும் காது வலிக்கு காதைச் சுற்றி பூச நோய் தணியும் இத்துடன் நோய் நீங்க குப்பைமேனி இலைக் கசாயத்தை உள்ளுக்கு கொடுக்க வேண்டும்


நெஞ்சுவலி நெஞ்சறுத்தல் மூச்சு திணறல் போன்றவை குணமாக ஏழு நாள் தொடர்ந்து  அரைத்து தேக்கரண்டி அளவு பொடியை பாலில் கலந்து படுப்பதற்கு அரைமணி நேரம் முன்பு சாப்பிட்டுவிட்டு படுக்க வேண்டும்


குப்பைமேனி இலை தூளுடன் அரிசிதிப்பிலியையும் பொடிசெய்து கலந்து 40 நாள் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர பவுத்திரம் குணமாகும்


குருவே துணை


அகத்தியர் குடில்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி