கடலை மிட்டாய்

 கடலையும் வெல்லமும் சேர்ந்து சுவையுடன் பல மருத்துவ நன்மைகளை அள்ளிக்கொடுக்கிறது. பொதுவாக கடலையில் பித்தம் இருந்த போதும் அதனுடன் வெல்லம் சேர்க்கப்படும்போது பயன்கள் இரட்டிப்பாகி பித்த சேர்க்கையை சீர் செய்வதுடன் புரதம் இரும்பு செலினியம் மற்றும் பல சத்துக்களுடன்

ஒரு சிறந்த மருந்தாக உருவாகிறது.பொதுவாக நிலக்கடலையில் கார்போஹைட்ரேட் நார்ச் சத்தும் கரையும் நல்ல கொழுப்பும்,புரோட்டீன்,வைட்டமின்கள்,இரும்புச்சத்து, கால்சியம்,துத்தநாகம்,மாங்கனீஸ்,பாஸ்பரஸ்,பொட்டாசியம், மற்றும் நம் உடலுக்கு தேவையான சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.


அதேபோன்று வெல்லத்தில் இரும்பு சத்தும் கால்சியமும் அபரிமிதமாக உள்ளது. மேலும் நிலக்கடலையில் உள்ள விட்டமின் பி உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது தசைகளின் வலிமைக்கும் இது உதவுகிறது. மேலும் உடலின் நன்மையான வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதிலுள்ள விட்டமின் பி 3 மூளையின் செயல்பாட்டை தூண்டுவதோடு நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.நிலக்கடலையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனே அன் சாச்சுரேட் போலிக் அமிலம் போன்றவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது. கடலை மிட்டாய் சாப்பிடும்போது இந்த நன்மைகளை இயல்பாகவே கிடைத்துவிடும்.

சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம் வேர்க்கடலையில் தான் உள்ளது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதமும் இரைச்சி உணவுகளுக்கு நிகரான சத்துக்களும் இதில் உள்ளது. அதேபோன்று நிலக்கடலையில் ட்ரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற முளை நரம்புகளை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. அதேபோன்று போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு கருப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள் நீர்கட்டிகள் ஏற்படாதது. கருவின் மூளை, நரம்பு மற்றும் எலும்புகளின் வளர்ச்சி சிறப்பாக அமையும். கடலை மிட்டாய் சாப்பிடும் பொழுது அதன் பலன் இரட்டிப்பு அடையும்.

#simplyshenba

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி