கர்ப்பம் தரிக்க ஆலோசனை

 #கர்ப்பம்_தரிக்க_விரும்புவோர் 

#என்ன_செய்யவேண்டும்...❓


 👉 குழந்தை பெற உடலுறவு கொள்ள வேண்டிய நாள்கள்❓


👉 கர்ப்பம் தரிக்க  ஏதுவான நாட்கள் எது❓


⭕ பெண்கள் பிறக்கும் போதே அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக  எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்துவிடும். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு விந்துக்கள் தினம் உருவாகும். 


ஆண்களுக்கும்  விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக ஆக குறையும்.


பெண் வயதுக்கு வந்த பின் சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் அதாவது #fallopian_tube வழியாய் கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் இதற்கு (ஓவுலஷன்) என்று பெயர்.

 


❤ #கர்ப்பம்தரிக்க_ஏதுவான_நாட்கள்❓


கருமுட்டை கருப்பையில் இருந்து வெளிவந்து 18 முதல் 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேரவேண்டும். அதனால்  இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபியன் குழாய்களில் விந்து இருக்க வேண்டும். #ஆணின்_விந்து சராசரியாக #3_5_நாட்கள் வரை பெண்ணின்  பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும்.

 

பொதுவாக உடலுறவின் போது எண்ணெய், ஜெல் போன்றவை பயன்படுத்தினால் அவற்றை நிறுத்தி கொள்வது நல்லது. ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும். முடிந்தவரை எந்த விதமான எண்ணெய் பொருட்களையும் உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.

 

பல பெண்கள் உடலுறவு முடிந்ததும், பல திரவங்களையும், தண்ணீரையும் கொண்டு சுத்தம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அதாவது நீங்கள் கர்ப்பம் அடைய  நினைக்கும் நேரத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத்திரவங்கள் விந்துவைக் கொல்வதுடன் பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.


👫👉 #குழந்தை_பெற_உடலுறவுகொள்ள #வேண்டிய_நாள்கள்❓


மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 ஆகிய மூன்று நாள்கள் உடலுறவு கொண்டால் குழந்தை பிறக்கும். அதிலும் குறிப்பாக 14, 15 ஆகிய இரு நாள்களும் மிகச் சரியான நாள்கள். காரணம் 14, 15ஆம் நாள்களில்தான் பெண்ணின் சினையணு கருவுற தயார்நிலையில் இருக்கும்.


இந்த நாள்களுக்கு முன்னோ பின்னோ உடலுறவு கொள்வதால் குழந்தை பிறக்காது. இந்த உண்மை தெரியாததால் குழந்தை பிறப்புத் தள்ளிப் போகிறது. 


👇 பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, இரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன.


▶ ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். 


▶ சில பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்.


இந்த 28 நாளில் முதல் 4 - 5 நாட்களில், இரண்டு கருமுட்டை பைகளிலும் 3-4 முட்டைகள் வளரத் தொடங்கும். 


இந்த கருமுட்டைகளில், ஒரு முட்டை மட்டும் தலைவியாக உருவாகும். அந்த ஒரு தலைவி கருமுட்டைதான் அந்த மாதத்தில் வருகின்ற கருமுட்டை. இந்தத் தலைவி கருமுட்டை நன்கு வளர்ந்து 14-ம் நாளில் வெடிக்கும். இது வெடிக்கையில் இதிலிருந்து வெளிவருவது, ‘கருமுட்டை’.


இந்த கருமுட்டையானது மிகவும் அரிதானது. இதை ‘பொக்கிஷம்’ என்றும் சொல்லலாம். இந்த கருமுட்டையானது 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த நேரத்துக்குள் ஒரு ஆண் விந்துவுடன் இந்த கருமுட்டை இணைந்தால்தான். அது குழந்தையாக (கருவாக) மாறும்.


உங்களுக்கு எப்போது பீரியட் (மாதவிலக்கு) தொடங்குகிறது எனக் காலண்டரில் குறித்து வைக்கப் பழகி கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.


எந்த நாளில் மாதவிலக்கு வருகிறது எனத் தெரிந்து, குறித்து வைத்தால்தான் உங்களால் கருமுட்டை வெளிவரும் நாளை சரியாக கணக்கிட முடியும்.


👉 பல பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வரும். 


👉 சிலருக்கு 30 அல்லது 34 நாட்களுக்கு ஒருமுறை கூட வரலாம். 


➡ பெண்களின் உடல்நிலையை பொறுத்து மாறுபடும்.


➡ #உதாரணமாக………


உங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி மாதவிலக்கு முதல் நாளாகத் தொடங்கி இருந்தால், அடுத்த மாதவிலக்கு உங்களுக்கு டிசம்பர் 29-ம் தேதியில் மாதவிலக்கு வரும் என்றால் அந்த தேதியும் மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கான மாதவிலக்குக்கான காலகட்டம் (மென்சுரல் சைக்கிள்). உங்களுக்கான மாதவிலக்கு சுழற்சி, 28 நாட்களுக்கு ஒரு முறை.


கருமுட்டை எப்போது வெளிவரும் என்றால், அடுத்த மாதவிலக்கு தொடங்கும் முன்னராக 2 வாரத்துக்கு முன்பாக கருமுட்டை வெளிவரும்.


👉 உங்களது மாதவிலக்கு சைக்கிள் 28 நாட்களுக்கு ஒருமுறை என்றால், கருமுட்டை வெளிவரும் நாள் 14-வது நாள்.


➡ 28 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 14-ம் நாள் தான் கருமுட்டை வரும்


➡ 30 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 16-ம் நாள் தான் கருமுட்டை வரும்


➡ 34 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 20-ம் நாள் தான் கருமுட்டை வரும்


இந்த கருமுட்டை வெளிவரும் நாட்களில், அதற்கு முன் நாளன்று, உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம்.


இதெல்லாம் சீராக மாதவிலக்கு வருபவர்களுக்கு பொருந்தும். அவர்கள் எளிதாகக் கணக்கிட்டு கொள்ளலாம்.


💢➡ #குழந்தை_வேண்டிய_தம்பதிகள்

#கடைபிடிக்க_வேண்டியவை……❗


💚 ஒவ்வொரு முறையும் உடலுறவு கொள்ளும் போது குளித்துவிட்டு உடல் தூய்மையுடன் உடலுறவு கொள்ளுங்கள்


💚 ஆண் பெண் உறவு கொள்ளும் போது உடைகள் அற்ற நிலைல உறவு கொள்ளுங்க....


💚அதிகாலை வேலைல உறவு கொள்ளும் போது வெகுவிரைவாக பெண் கற்பமடைவாள்.


💚ஆண் பெண் இருவரும் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது,இருவரும் ஒருமித்து ஒரே எண்ணத்தோடு இருக்க வேண்டும்.....


💚துணைக்கு நாட்டம் இல்லாத போது வற்புருத்தி புணர வேண்டாம்.


💚இரவு உணவு உண்டு மூன்று மணி நேரம் கழித்த பிறகே உறவில் ஈடுபட வேண்டும். இல்லை என்றால் எதிர்காலத்தில் குடல் சார்ந்த பிரச்சனைகள் வரும்


❌ வயிற்றில் மலம் மற்றும் சிறுநீரை அடக்கி வைத்து கொண்டு உடலுறவில் ஈடுபடாதீர்கள்……❗


⏩ அப்படி செய்தால் பிறக்கும் குழந்தைகள்………


👉 மந்தபுத்தி,


👉உடல்ஊனம்,


👉மூளைவளர்ச்சி குன்றி 


பிறப்பார்கள்....ஆகையால் மலம்,சிறுநீர்  கழித்த பிறகு உடலுறவில் ஈடுபடுங்கள்.


⭕ எடுத்த உடனேயே புணர்ச்சியில் ஈடுபடாதீர்கள்……


👉முதலில் ஒருவரை ஒருவர் அதற்காக தயார்படுத்தி கொள்ளுங்கள் 


👉முத்தமிடல்,


👉தழுவுதல்,


👉தீண்டுதல்,


👉தூண்டுதல்,


👉தேடுதல் 


என உங்கள் துணையின் மேனியை பரவசப்படுத்துங்கள்,


உணர்ச்சி பொங்கிவரும் வேலையில் தாம்பத்தியம் சுகம் காணுங்கள் புணர்ச்சியில் ஈடுபடுங்கள்.


💚 சில நேரங்களில் பெண் உறுப்பில் செலுத்தப்பட்ட விந்தணுக்கள் உள்ளே செல்லாமல் வெளியே வந்துவிடும் இதன் காரணமாகவும் பெண் கர்பமடைவது தடைப்படும்.....


👉 ஆகையால் பெண்ணின் பின் புறம் ஒரு *தலையணையை* வைத்துவிட்டு  ஈடுபடுங்கள் இதன் மூலமாக விந்தணு வெளியில் வராமல் உள்ளே முழுமையாக செல்லும்....


⭕💚 எண்னெய் தேய்த்து குளியுங்கள்,இதன் மூலமாக உடல்சூடு குறையும்.உடல்சூட்டின் காரணமாக கூட பெண்களுக்கு கர்பம்கலைய நேரிடும் ஆகையால்.....


⭐ ஆணாக இருந்தால் புதன் மற்று சனிகிழமைகளில் எண்னெய் தேய்த்து குளியுங்கள்.


⭐ பெண்ணாக இருந்தால் செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் எண்னெய் தேய்த்து குளியுங்கள்.


⭐ எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மிதமான சூட்டில் குளிக்க வேண்டும் பச்சை தண்ணீர் பயன்படுத்த கூடாது.


⭐ எண்னெய் தேய்த்து குளித்த அன்று உடலுறவில் ஈடுபட கூடாது.


உடலுறவில் உச்சகட்டத்தை அடைந்ததும் விலகி சென்று உறங்கி விடாதீர்கள்,


உங்கள் துணையை அரவணைத்து அவளை ஆஸ்வாசப்படுத்துங்கள் *அன்பின் மொழி பேசுங்கள்* அவள் விருப்பம் தெரிந்து நடந்து கொள்ளுங்கள்.


*மற்ற உயிரினங்களுக்கு புணர்ச்சி என்பது வெறும் இனப் பெருக்கத்திற்காக மட்டுமே,ஆனால் உண்மையான தாம்பத்தியம் இனப்பெருக்கத்திற்காக மட்டும் அல்ல அது அன்பின் மொழி உணர்வுகளில் பறிமாற்றம் இரு உயிர்களின் உன்னதமான சங்கமம்.


*கடைசியாக உடலுறவு செய்து முடித்த பிறகு ஆணும் பெண்ணும் கட்டாயம் 

60 நிமிடங்களுக்குள் சிறுநீர் கழித்துவிட்டு வருவது நன்று,சிறுநீர் கழிப்பதால் பிறப்புறுப்பில் தேங்கி இருக்கும் விந்து மற்றும் அதை உண்ண வந்த கிருமிகள் வெளியேறிவிடும்.....


இதனால் பிறப்புறுப்பு சார்ந்த பிரச்சனைகள் வராது.


⭕ #பெண்கள்_உடலுறவின்_பின்…


1. உடலுறவு முடிந்தவுடன் பெண், தங்கள் உறுப்புகளை சுத்தம் செய்ய சென்று விடலாமா❓


2. 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாமா❓


3 . உடனே பெண் எழுந்து சென்றால் விந்தணுக்கள் பெண் உறுப்பிலிறுந்து வெளியே வந்துவிடுமே❓


4. ஆதலால், கர்ப்பம்தரிக்க தடைபடுமே❓


❓மேற்கண்ட சந்தேகங்கள் திருமணமாகி குழந்தை தள்ளி போகிறவர்களுக்கு ஏற்படுவது வழக்கம். அத்தனைக்கும் பதில் கீழே…


இது நிறையப் பேருக்கு ஏற்படும் சந்தேகமே. உண்மையில் விந்தணுக்கள் அசைவின் மூலம் *(நீந்துவதன் மூலம்)*

பெண்ணின் முட்டையைச்

சென்றடையும். அதனால் உடலுறவின் பின் உடனடியாக எழுந்து போனாலும் கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் உள்ளது.


இருந்தாலும் கர்ப்பத்திற்காக எதிர்பார்த்திருக்கும் பெண்கள் உடலுறவின் பின் 60 நிமிடங்களுக்கு படுக்கையிலே இருப்பது நல்லது.

 

அந்த நேரத்தில் இடுப்பின் கீழே ஒரு தலையனைய வைத்து உங்கள் இடுப்புப் பகுதியை உயர்த்தி வைப்பதும் 

கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும். 


அதேநேரம் கால்களை ஒன்றன்மேல் ஒன்று போட்டவாறு அதாவது கத்தரிகோள் போன்று படுத்திருப்பதும் உகந்தது.


🌟வாரத்துக்கு இரு முறை முருங்கைகீரையை உணவில் சேர்த்துகங்க.....


🌟வாரம் ஒரு முறை அத்திக்காயை உணவில் சேர்த்துகங்க....


🌟நல்ல சுத்தமான தயிரில் உயிர் சத்துக்கள் அதிகம் கிடைத்தால் பயன்படுத்துங்கள்.


🌟தாதுபலப்படும்,கற்பபைபலப்படும், விந்துஎண்ணிக்கை கூடும் நல்ல தாம்பத்தியம் நிலைபெரும்.


🔴 ஆண் & பெண்…❓❓❓

 

உணவில் புளி, தயிர், எலுமிச்சம்பழம் சேர்த்துக்கொள்ளாதீர்கள். 


புளி விந்துவை சீக்கிரத்தில் வெளியேற்றிவிடும். 


எலுமிச்சம் பழச்சாறும் புளியைக் காட்டிலும் வேகமாய் விந்துவை கலைத்துவிடும். 


அதனால் இரவு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். 


அப்பொழுதுதான் தேன்நிலவு, தேன் நிலவாக இருக்கும். 


இது தேன் நிலவுக்கு வெளியூர்ப்பயணத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல *புதுமணத்தம்பதிகளுக்கு மட்டுமின்றி* *எல்லாத் தம்பதிகளுக்குமே* *பொருந்தும்.*


*பிராய்லர் சிக்கனை தவிர்க்கவும்,


*நொருக்கு தீணியை தவிர்க்கவும்,


*வெளிநாட்டு உணவு முறையை தவிர்க்கவும்.....

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி