நாடி பார்த்தல்

 நாடி நாடி !


நாடி ,பரிசம் ,நாநிறம் , மொழி , விழி ,மலம்  மூத்திரம் மருத்துவர் ஆயுதம்  என்கிறது  ஒரு சித்தர் பாடல் .


நோயாளியின் நோயைக்கணிக்க இவை அத்தனையும் காணவேண்டும் .

அதற்க்கு நோயாளியை முதலில் வைத்தியர் நேரில் பார்க்கவேண்டும் 

இதில் எட்டு சோதனைகள் உள்ளன 

இதில்தலையானது நாடிசோதனை .

இதில் தேர்ந்தவர்கள் இப்போது அறுகி வருகின்றனர் .-


மனதை ஒருநிலைப்படுத்தி ,ஐம்புலன்களையும்  அடக்கி  நாடியை கணிக்கவேண்டும் .


இதற்க்கு வைத்திய அறிவுடன் ஞானமும் திறம்பட வேண்டும் .


மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் மேலே மூன்று விரல்களால் (நடு விரல், மோதிர விரல், ஆள்காட்டி விரல்)ஒரே நேரத்தில் மெதுவாக அழுத்தி நாடி பார்க்க வேண்டும்.

பிறகு, விரல்களை மாறி மாறி அழுத்தியும்,தளர்த்தியும் பார்த்தால் நாடியின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.


(30 வினாடிகள் துடிப்பு கவனித்து அதை 2 ல் பெருக்கி வருவது நமது துடிப்பு எண்ணிக்கை.)18 வயதுக்கு குறைவானவர்களுக்கு சராசரியாக 70-100/ நிமிடம் துடிப்புகள்.மற்றவர்களுக்கு சராசரியாக 60-100/நிமிடம் துடிப்புகள் இருக்க வேண்டும்


ஆள்காட்டி விரல் மூலம் கீழ்வாத நாடி, நடு விரல் மூலம் கீழ் பித்த நாடி, மோதிர விரல் மூலம் கீழ் சிலேத்தும நாடி பெருவிரல் மற்றும் சுண்டு விரல் மூலம் பூத நாடியையும், ஐந்து விரல்கள் மூலம் குரு நாடியையும் உணரலாம்.


எவ்வித உடல் நலக் குறைபாடும் இல்லாத ஒருவருக்கு நாடி பார்த்தால், அவருடைய வாத நாடி குயில் மாதிரியும் அன்னம் மாதிரியும் நடக்கும். பித்த நாடி ஆமை மாதிரியும், அட்டை மாதிரியும், சிலேத்தும நாடி பாம்பு மாதிரியும், தவளை மாதிரியும் நடக்கும்...


மனித உடலில் பத்து இடங்களில் நாடி பார்க்க முடியும். என்கிறது சித்தமருத்துவம் 


நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்.


இவ்வாறு 8 வகைதேர்வுகளை ,அதிலும் சிறப்பாக நாடியைக்கொண்டு நோயைக்கணிப்பதே சித்தமருத்துவ மரபாகும் .அது இன்றைய நவீன மருத்துவ சோதனைகளுக்கு எந்தவிதத்திலும் குறைவானதில்லை .சொல்லப்போனால் அதைவிட உயர்வானது இந்த பண்டைய தமிழர் முறை 


என்னும் குறளிலே நாடி என்பது எத்தனை முறை பயன்படுத்தத்தப்பட்டிருக்கிறது என்பதில் இருந்து நாடி எனும் சொல் எத்தனை முக்கியமானது என்பதை உணரலாம் ..இதற்க்கு பொருள் வேறுதான் ஆனால் நான் நாடி எனும் சொற்களுக்காகவே  இதை சுட்டுகிறேன்  


சி டி ஸ்கேன்  எஸ் ரே  போன்றவைக்கு முன் இதைக்கொண்டே மிகச்சரியாக உடலின் தன்மையை அப்போதைய மருத்துவர்கள் அறிந்து மருந்து தந்திருக்கிறார்கள் 

 

ஆனால் சீரியமுறை.யில்நாடி பார்க்கும் மருத்துவர்கள் இப்போது அருகிக்கொண்டேபோகிறார்கள் 


அண்ணாமலை சுகுமாரன் 

17/2/2021

படம் இணையத்தில் பெற்றது

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி