கழற்சிக்காய்

 #vijaaiswamiji #bairavapeedam #bairavafoundation

 கழற்சிக்கோடி  இந்தியாவிலும், இலங்கையிலும், வேலிகளிலும், தோட்டங்களிலும் வளருகின்ற ஒரு வித கொடிவகை.

இதில் கருமை, வெண்மை என இரு வகை உண்டு.

கருங்கழற்ச்சி இலையால்- அண்ட வாயு, சூலைக்கட்டு, வெள்ளை,பல வித குன்மம்,உள்ளழலை  போம்.

வெண்கழற்சி இலையால் - ஏறண்டம், இறங்கண்டம், தசையண்டம் போம்.

இதன் இலையுடன் தேங்காய்ப்பூ சேர்த்து, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, வீக்கங்களில் வைத்துக்கட்ட, வீக்கங்கள்  கரையும்,விரை வீக்கம் மறையும்.

கழற்சிக்காய் பருப்பு,வெள்ளுள்ளி,முருங்கைப் பட்டை, வசம்பு,சுக்கு முதலியவற்றைத் தண்ணீர் விட்டு எட்டில் ஒன்றாய்  வற்றச் செய்து கொடுக்க, குடல் வாதம், சூலை, குன்மம் போகும்.

விதையை சுட்டு பொடித்து, அதோடு வறுத்த பாக்குத்தூள்  சமஎடை சிறிது வெங்காரமும் சேர்த்து பல் துலக்கி வர, பல் இறுகும், பல் நோய் தீரும்.

புதிதாக அரைத்து தூளாக்கப்பட்ட கழற்சிக்காய் தூளை தினமும் சிறிதளவு நீர் விட்டு குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் மீது பற்றிட்டு வர அவை சீக்கிரம் குணமாகும். தழும்புகளேற்படுவதையும் தடுக்கும்.

இந்த கழற்சிக்காய் சூரணத்தை சுமார் 5 கிராம் என்ற அளவில் எடுத்துக்ஒரு டம்ளர் மோரில் கலந்து காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் அருந்தவேண்டும்.

இப்படித் தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்துவர சினைப்பையில் தோன்றியிருந்த நீர்க்கட்டிகள் கரைந்துவிடும்.

விஜய் சுவாமிஜி

செல் :+91 9443351497 , 9842499006,

www.bairavafoundation.org

www.swarnabhairavapeedam.org

#bairavar #bhairavar #vijayswamiji #bairavapeedam

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி