அக்குபஞ்சர் அறிமுகம்

 பல சிகிச்சை முறைகளை கைகொண்ட பின்பும் சிலருக்கு மட்டும் நோய் குணமாவதே இல்லை, 

எந்த சிகிச்சையும் பலனளிக்காத நிலையை பற்றி சீன அக்குபங்சர் மருத்துவ முறை என்ன சொல்கிறது என்று பார்ப்போம். 


நண்பர்களே.....!


"மனமெனும் மாமருந்து"  எனக் கேள்விப் பட்டிருப்போம். ஆம். வெளியிலிருந்து கிடைக்கும் எத்தகைய அரிய மருந்தை நாம் ஒரு‌ நோயாளிக்கு தந்தாலும், அதை  அவரது முழு‌ மனதுடன் - விருப்பத்துடன் - நம்பிக்கையுடன் "ஆம் இது தான் நம் பிரச்சினைக்கு சரியான‌ மருந்து" என  ஏற்றுக் கொள்ளாவிடில், அந்த அரிய‌மருந்தும் தோற்றுவிடும். மருந்தாகவே இல்லாமல் சாதாரண  மண்ணை அள்ளிக் கொடுத்தாலும் , முழு மனதோடு - விருப்பத்தோடு அதை ஏற்றுக்கொண்டு எடுக்கும்போது,  அங்கு  அந்த மண்ணும் மருந்தாகவே‌ வேலை செய்கிறது. 


(If a patient is superstitious and doesn't beleive in medicine, or if a patient refuses to any treatment, then no matter what the physician does, the patient will not get well. This is evidence that healing comes from within. Ref : Huang di Neijing)


ஆக மனம் இங்கு பெரும் மாயத் திறவுகோலாகவே இருக்கிறது. இல்லாத ஒன்றை இருப்பதாகக் காண்கிறது. 

இருக்கின்ற ஒன்றை‌   இல்லையென்றும் உறுதிபட நம்புகிறது. 

ஆக வாழ்வின் நீட்சியும்   அதன் ‌தாழ்ச்சியும் மனதின் பிடியில்.


சரி‌ நாம் அக்குபங்க்சருக்குள் வருவோம்.....! 


ஹுவாங் ‌டி ஒரு‌ இடத்தில், "குருவே அக்குபங்க்சர்‌ சிகிச்சை,  மூலிகை‌ சிகிச்சை போன்ற பிற‌ முறைகள் கையாண்ட‌பிறகும் கூட‌ சிலருக்கு  நோய்‌ குணமாவதில்லையே‌‌. அது ஏன்? என்று‌ கேட்கிறார். 


அதற்கு சீ போ‌ வின்‌ பதில், " தான் வியாதியிலிருந்து குணம் பெறுவோம் எனும் நம்பிக்கையே இல்லாமல் இருக்கும் போது,‌ அவர்களின் ஆன்ம பலம் சிதறிச் சிதைகிறது. 

இதனால்  உணர்ச்சிகள் மேலிட்டு அவர்களது  Qi தளர்வடையும். படிப்படியாக எஸன்சும் காலியாகி குணமடையாமல் இறந்து விடுவார்கள். எனவே எந்த ஒரு சிகிச்சை முறை‌ எனினும் " ஆன்ம‌ அதாவது மனோபலத்தை ( strenght of Shen/Spirit) தக்கவைக்கவேண்டும்.


(Master, after using all the treatment modalities, the body is still weak, the qi and blood are still deficient, and the patient does not recover. Why is this?


 If the patients lack of the confidence to conquer illness, they allow their spirits to scatter and wither away. They let their emotions take control of their lives. They spend theit days drowned in desires and worries thus exhausting their jing/essence and qi and Shen/Spirit. Ofcourse, then, even with all the other modalities, the disease will not be cured.)


இதிலிருந்து நீண்ட கால அல்லது கடும் வியாதியிலிருந்து‌ ஒரு நோயாளி மீளவேண்டும் எனில் அவர் பயம்‌, அவநம்பிக்கை போன்றவை கொள்ளாமல், இதிலிருந்து மீண்டு வருவோம் எனும் திட‌ நம்பிக்கையோடு இருக்கவேண்டும். அவ்வாறு இருப்பின் இதயத்தில் குடியிருக்கும் ஆன்மா அல்லது மனம் (Shen Spirit ) குலையாமல் - சிதறாமல்  இருக்கும்.


அதாவது பயம், கோபம், துக்கம், கவலை, நம்பிக்கையின்மை எனும் உண்ர்ச்சிகளால் அலைகழிக்கப் படும் போது, இதயத்தின் ‌ஆன்மாவும் ( Shen -Spirit ) பாதிக்கப்படும். எனவே சக்தி மற்றும் இரத்த ஓட்டம் சிதறும். Zangfu உறுப்புகளுக்கு ஊட்டம் கிடைக்காமல் வியாதி மேலும் கூடி மரணம் சம்பவிக்கும்.


இதயம் என்பது 12 உறுப்புகளின் ராஜா ஆகும். 

ராஜாவே பிரஜைகளை‌ கட்டுப் படுத்துதவது போலவும், பராமரிப்பது போலவும் இதயம் ஒவ்வோரு உறுப்பையும் Qi மற்றும் இரத்தத்தை கொடுத்து பராமரிக்கிறது. இதயத்தில் குடி கொண்டுள்ள Shen சிதறாமல் சிதையாமல் இருந்தால்,  இதயம் சிந்தாமல் சிதறாமல் ஒவ்வொரு உறுப்புக்கும் தேவையான இரத்ததை சக்தியுடன்‌ சேர்த்து அனுப்பிவைக்கும். இந்த தாளம் தவறும் எல்லா உறுப்புகளும் ஊட்டம் கிடைக்காமல் தளறும். 


(If the Shen -Spirit is clear, all the functions of the other organs will be normal. If the spirit is disturbed and unclear, the other organs will not function properly.)


அதேபோல மனம் எனும் shen க்கும் இதயமே இடமளித்து உள்ளது, அல்லது இதயம் தான் மனதை பிடித்து வைத்துள்ளது எனலாம்.


ஒவ்வொரு உறுப்பிலும் பஞ்ச பூதங்களின் கூட்டுக்கலவை இருக்கும்,  

ஒவ்வொரு உறுப்பிலும் ஒரு பூதத்தின் தன்மை மிகுந்தும் மற்ற நான்கும் அதற்கு துணைபுரிந்து அந்த உறுப்பை பூரணத்துவம் அடைய செய்கிறது, உதாரணமாக இதயத்தில் நெருப்பின் தன்மை மிகுந்து மற்ற நான்கு பூதங்களின் கூட்டணியோடு இதயம் எனும் உறுப்பு முழுமைபெறுகிறது.


இதே போல தான் மனதும்.


இதயத்தின் ஆன்மா-shen நுரையீரலின் ஆன்மா-  po

கல்லீரலின் ஆன்மா-Hun

சிறுநீரகத்தின் ஆன்மா-zhi

மண்ணீரலின் ஆன்மா-hun.

 ஆகிய ஐந்து உறுப்புகளின் ஆன்மாவும் இணைந்து 

"Shen எனும் மனம்" முழுமை அடைகிறது.


இதனால் shen பாதிக்கப்பட்ட நிலையில் அனைத்து yin உறுப்புகளின் ஆன்மாவும் பாதிக்கப்பட்டு நோய்கள் குணமாவதில் தாமதத்தையோ அல்லது சிக்கலையோ ஏற்படுத்துகிறது. 


அடுத்தது ஒரு‌ முக்கியமான ‌விஷயம். Jing லிருந்தே‌ எல்லாம் அதாவது Blood, Qi, Shen எல்லாம் உருவாகிறது. தொடர்ந்து உணர்ச்சிகளின் ஊற்றாய் அலைகழிக்கப் பட்டுக் கொண்டே இருந்தால் - Shen,  Qi ,blood குறையும். மறுபடியும் இவற்றை‌ மீளுறுவாக்கம் செய்ய Jing செலவு செய்யப்படும். 

படிப்படியாக எஸன்சும் காலியாகும். 

இந்நிலையில் நோய்கள் குணமாவது என்பது மிக சவாலானதாக இருக்கும்.


இந்த அடிப்படையில் பார்த்தோமானால், எந்த சிகிச்சையும் பலனளிக்காத நிலையில் Shen ஐ பலப்படுத்தும் அக்குபங்சர் புள்ளிகளை சில முறை உபயோகித்த பின்பு நோய்களுக்கான சிகிச்சை அளிக்கும்போது தீராத நோய்களும் காணாமல் போகும்.


எந்த மருத்துவமும் செயல்படாத நிலையிலும் அக்குபங்சர் சிகிச்சை கை கொடுக்கும் என்பதே ஆணித்தரமான உண்மை.


நன்றி. 

திரு.முருகானந்தம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி