ஜாதிக்காய்

 #ஜாதிக்காய்_பொடி

#எப்படி_சாப்பிட_வேண்டும்❓


❤ தாம்பத்ய பிரச்சினை தீர❗


நிறைய பேருக்கு தங்களுடைய அந்தரங்க வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் உண்டு. இதை வெளியில் சொல்லவும் கூச்சப்பட்டு, மருத்துவரிடமும் ஆலோசிக்காமல் தங்களுடைய வாழ்க்கையையே பாழாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பது தான் ஜாதிக்காய். நம்முடைய முன்னோர்கள் டஜன் கணக்கில் குழந்தை பெற்று வளர்த்து, தாங்களும் கம்பீரமாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் அப்படியில்லை. இந்த தலைமுறையினரின் வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் இந்த பிரச்சினையின் தீவிரம் தான் இன்றைக்கு ஏராளமான செயற்கை கருத்தரிப்பு மையங்கள், குழந்தைப் பேறின்மையை தீர்க்கும் மருத்துவமனைகள் ஊருக்கு ஊர் முளைத்துவிட்டன.


இதுபோன்ற தாம்பத்திய உறவில் ஏற்படும் விந்து வேகமாக வெளியேறுதல், நரம்புத் தளர்ச்சி, விந்து நீர்த்துப் போதல் போன்ற பிரச்சினைகளுக்கு ஜாதிக்காய் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.


பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை. இரவு தூங்கும்முன் பாலில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி கலந்து குடியுங்கள். காலையில் வழக்கம் போல நீங்கள் குடிக்கும் டீயில் கலந்தோ டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் வெந்நீரில் கொதிக்க வைத்து தேன் சேர்த்தும் குடிக்கலாம்.


💊 ​சரியா தூங்க முடியலையா❓


இன்றைய தலைமுறையினருக்கு இருக்கிற மிகப்பெரிய பிரச்சினையே போதிய தூக்கம் இல்லாதது தான். இரவு முழுக்க தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பது, மொபைல் போனில் அதிக நேரம் செலவிடுவது என்றிருப்பதால், சரியான நேரத்திலோ போதிய நேரமோ தூங்குவதில்லை. இதனால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அப்படி குறைந்தபட்சம் 6 மணி நேரம் கூட தூங்காமல் இருப்பவர்கள் இரவு உணவுக்குப் பின் ஒரு டம்ளர் பாலில் இரண்டு சிட்டிகை அளவு ஜாதிக்காய் பவுடர் சேர்த்து குடித்து வந்தால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.


💊 ​பருக்கள் குணமடைய❓


சருமப் பிரச்சினைக்கு மிகச் சிறந்த தீர்வாக ஜாதிக்காய் அமையும். குறிப்பாக, சருமங்களில் ஏற்படுகின்ற முகப்பருக்கள் மற்றும் கருந்திட்டுக்களைப் போக்கும் ஆற்றல் கொண்டது.


ஜாதிக்காயை பொடி செய்து, சில துளிகள் தேன் சேர்த்து குழைத்து முகப்பருக்கள் உள்ள இடத்தில் ஒரு சில நாட்கள் தடவி வந்தாலே முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி