ஆரோக்கிய பானம்

 இந்த மருந்து இருந்தால் போதும் 

இனிமேல்

நோய்கள் நமக்கு வராது


ஆரோக்கிய சூரணம்


தேவையான பொருட்கள்


சுக்கு 50 கிராம் 

மிளகு 50 கிராம் 

திப்பிலி 50 கிராம் 

சீரகம் 50 கிராம் 

ஏலக்காய் 50 கிராம் 


    இவை அனைத்தையும் இளம் தீயில் லேசாக வறுத்து சூரணம் செய்து கொண்டு இந்த சூரணத்துடன் சீனி சர்க்கரை 250 கிராம்  சேர்த்துக் கலந்து வைத்துகொண்டு இதை காலை மாலை என தினமும் இரண்டு வேளை


       ஒரு மண்டல காலம் சுடு நீரில் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து சாப்பிட்டு வந்தால்

குடல் மந்தம் நீங்கி ஜிரண சக்தி ஏற்பட்டு அதனால் நல்ல பசி உண்டாகும்


மேலும்

 உடல் உஷ்ணம் குறையும் 


வாய்வு  தொந்தரவால் ஏற்படுகின்ற 

வயிற்று வலி நீங்கும் 


வயிற்றுப் பொருமல் உணவு செரியாமை வாய்வுத் தொல்லை உடனே நீங்கும்


மயக்கம் பித்தக் கிறுகிறுப்பு உடல் சோர்வு இவை அனைத்தும் குணமாகும் 


மூல வாய்வு வயிற்று உப்பிசம் நீங்கும் 


       மற்றும் கபம் சார்ந்த அனைத்து நோய்களும் நீங்கி உடல் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று இதனால் நமக்கு ஆரோக்கியம் உண்டாகும்


ஆரோக்கிய வாழ்வுக்கு 

இது ஒரு அத்தியாவசியமான மருந்து


தேவையான பொருட்கள்


சுக்கு 50 கிராம் 

மிளகு 50 கிராம் 

ஓமம் 50 கிராம் 

நிலவாகை 50 கிராம் 

வாய்விளங்கம் 50 கிராம் 

   

     இவை அனைத்தையும் சூரணம் செய்து வைத்துக்கொண்டு இதனுடன் சீனி சர்க்கரை 250 கிராம் கலந்து வைத்துக் கொள்ளவும

 

      இதை காலை மாலை என இருவேளையும் வெந்நீரில் ஒரு ஸ்பூன் அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலிலே வருகின்ற அனைத்து நோய்களையும் தடுக்கும் ஒரு அற்புத மருந்தாக செயல்படும்  அற்புதமான ஆற்றல் இந்த மருந்துக்கு உண்டு


        அதாவது குடல் வாய்வு பித்தம் உடல் உஷ்ணம் வயிற்றுப் பொருமல் வயிற்று மந்தம் மற்றும் கப நோய் வாந்தி 


      உடல் எரிச்சல் சுவாசகாசம் சொட்டு மூத்திரம் மலபந்தம் வயிற்றுப் பொருமல் வயிற்றுவலி குன்ம நோய் பெருவயிறு 


      வாய்வு தொந்தரவு கர்ப்ப காலத்தில் ஏற்படுகின்ற வயிற்று வலி  மேலும் கர்ப்ப நோய்கள் உடலிலுள்ள புழுகள் 


    மற்றும் வயிற்றில் ஏற்படுகின்ற அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கும் ஒரு அற்புதமான மருந்து இது


   வயிற்றிலே நோய் ஏற்படாமல் நம்மை காத்துக் கொண்டால் போதும் மற்ற எந்த நோய்களும் நமது உடலில் ஏற்படாது


நன்றி 

பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி