அசனாதி அன்னம்
ஓராயிரம் சிந்தனைகள் மனதிலே ஓடும்...
ஒரு நூறு வேலைகள் நம் முன்னே நிற்கும்...
ஒரு நொடி நம் ஆத்மனைப்பற்றி சிந்திக்க நேரமில்லை...
ஓயாமல் நாய்போல் ஓடி, ஒழியாமல் வாழ்ந்து பாழன தேகமது பாயிலே படுக்கும்போது,
நாம் செய்த செயல் யாவும் நம்மை கொன்றனவே என்று அறியும்.
நாம் தின்றனவெல்லாம் நம்மை காக்கும் என்று தின்று களித்தோம், அவையெல்லாம் நம்மை கொன்றனவே என்றெண்ணும் போது,
எதைத்தின்றால் நாம் மரணித்தல் தீரும்?
மரணமிலாபெருவாழ்வு பெற அசனாதி அன்னத்தை உண்ணுதல் அவசியம்.
அசனாதி அன்னமதை எவ்வாறு சமைப்பது?
வாசி என்ற யோகத்தால், சித்தவித்தை என்ற ஆயுதம் கொண்டு நிஷ்டை என்ற மௌனத்தால் மோனநிலை எய்த சமையுமே அசனாதி அன்னம். இதை விடுத்து எவ்வெவற்றையே தின்றால் அவை கொல்லுமே உன் உடலை.
புலை,கொலை செய்து வாழ்வோரெல்லாம் உடல் புண்ணாகி மாள்வரே அந்தோ...
ஜீவகாருண்யமதை கைக்கொண்டால் வென்றிடலாம் "வெற்றி" டத்தை, மனமென்ற குப்பைகளையகற்றி மனதை வெற்றிடமாக்க , குடிகொள்வான் கோமகனாகிய "ஈசன்".
பார்வதி உடலை கப்பாற்றுவாள்,
விநாயகன் தேகத்தை காக்கும் வினையாற்றுவான்.
கந்தன் என்ற காந்தன், முருகி சுக்கிலமாகிய பிரம்மத்தை ஆக்கிடுவான் 'அசனாதி' அன்னமாக இதை உண்போர் ஜீவித்திருப்பர் மண்ணூழி காலமட்டும்.
என் சிவானந்தன், வடகரை வள்ளலும், ஏனைய சித்தரும், புத்தரும் அடைந்தநிலை சித்தவித்தையாகிய வாசியோகத்தால் இதை அஜபா காயத்ரி என்றும் கூறுவர்.
விரும்புவோர் எம்மிடம் கற்று உய்யலாம்.
அன்றேல் மடியலாம் இன்பமென்ற துன்ப வாழ்வியல் மூலம்.
இவன் பிரம்மஸ்ரீ சங்கர்.
Comments
Post a Comment