இலவங்கப்பட்டை
#vijaaiswamiji #bairavapeedam #bairavafoundation
இலவங்கபட்டை என்று அழைக்ககூடிய இது மரத்தின் பட்டைகளிலிருந்து எடுக்கப்படுகிறது.அதிக வாசனை கொண்ட இதை உணவு பொருள்களில் சேர்க்கும் போது உணவுக்கு சுவை கொடுக்கிறது. மருத்துவ ரீதியாக இவை வளர்சிதை மாற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம்
இந்த பட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில் பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம், மக்னீசியம், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.
பட்டை தண்ணீர் மற்றும் தேன் சேர்ந்த கலவை உடல் எடையை குறைக்க சிறந்த மருந்து. இவை நமது உடலில் உள்ள வேண்டாத நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது.
இலவங்கப்பட்டையினால் பாம்புக்கடி,சிலந்திப்பூச்சிக்கடி நஞ்சுகளும்,இரைப்பு, இருமல்,வயிற்றுக்கடுப்பு, உள்மூலப்புண் போகும்.உடற்குக் குளிர்ச்சியை உண்டுபண்ணும்.
இதற்குச் சூல்பையைச் சுருங்கச்செய்கிற குணமுண்டு, அதற்கு பட்டையின் தூளை 60 மி,கி முதற் 50மி,கி எடை கொடுக்கலாம்.
இலவங்கப்பட்டை, ஏலரிசி,சுக்கு இவைகளை பொடித்து,150 மி,கிராம் முதல் 600 மி, கி வரை கொடுக்க வாந்தி, வயிற்று பொருமல், வலி,கழிச்சல்,கடுப்பு போம்.
பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் என்பது ஒரு ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினை. இது பொதுவாக பெண்களுக்கு ஏற்படுகிறது. இதனால் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன. எனவே இதற்கு பட்டை தண்ணீரை குடித்து வந்தால் இந்த நோய்குறியிலிருந்து தப்பிக்கலாம். மேலும் இவை பெண்களின் இன்சுலின் எதிர்ப்பு பொருளை குறைத்து பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் பிரச்சினையை குறைக்கிறது.
விஜய் சுவாமிஜி
செல் :+91 9443351497 , 9842499006,
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org
#bairavar #bhairavar #vijayswamiji #bairavapeedam
Comments
Post a Comment