வெண்பூசணி பயன்

 உடற்பயிற்சி செய்துவிட்டு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக்கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும். காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது.

 

காலியில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும். பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும்  வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி,  தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள  நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்.

 

கொடிய நோய்களுக்கு மருந்து: வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப் புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல்,  எலும்புருக்கி முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும். 

 சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும் #simplyshenba

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி