ஆமணக்கு எண்ணெய் வைத்தியம்

 ஆரோக்கிய வாழ்வைத் தரும் ஆமணக்கு      

        (விளக்கெண்ணெய் வைத்தியம்)


 உடலின் உஷ்ணத்தை தணிப்பதற்கு விளக்கெண்ணை ஒரு சிறந்த மருந்து


     ஒரு கைப்பிடி முருங்கை மரத்து பட்டையை இடித்து இதில் 400 மில்லி தண்ணீர் சேர்த்து இதை 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி இதிலே இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து காலை வேளையில் குடித்து வந்தால் பித்தத்தால் வருகின்ற நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் உடல் உஷ்ணம் தணிந்து விடும்


    வெட்டை வாயு நிரந்தரமாக குணமாகும்  மார்பு வலி குன்ம லலி வயிற்று வலி முதலிய கடுமையான நோய்கள் அனைத்தும் எளிதாக விலகிவிடும்


  இதே முறையில் பூவரசன் பட்டை கசாயத்தில் விளக்கெண்ணெய் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் உடலில் உள்ள கடி விஷங்கள் கிரந்திப் புண்கள் மேலும் படை சொறி சிரங்கு முதலிய சரும நோய்கள் அனைத்தும் குணமாகும்


  இதைப்போல ஒரு எருக்க இலையை தண்ணீரில் நன்றாக கழுவி இதை கசாயம் செய்து இதனோடு ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் மேக சுரம் மற்றும் மேக வியாதிகள் எளிதாக குணமாகும் 


  மலச்சிக்கல் உள்ளவர்கள் 100 மில்லி சுடு நீரில் இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து இரவு வேலையில் சாப்பிட்டு வந்தால் காலையில் மலம் எளிதாக சிரமமின்றி கழியும்


  கர்ப்ப ஸ்திரீகளின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு நோய் வராமல் இருப்பதற்காக கர்ப்பமான ஐந்தாவது மாதத்தில் ஒரு சிறிய துண்டு பச்சை மஞ்சளை கசாயம் செய்து இதில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கொடுத்தால் கர்ப்பத்தில் இருக்கிற குழந்தைகள் நோய்கள் இல்லாமல் வளரும் பிறக்கின்ற குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் பிறக்கும் பத்து நாட்களுக்கு ஒரு முறை இந்த மருத்துவத்தை ஒரு மாதம் பயன்படுத்தினால் போதும்


    இதைப்போல கர்ப்பமாக இருக்கின்ற பெண்களின் ஏழாவது மாதத்தில் 5 கிராம் பச்சை மஞ்சளும் 5 லவங்கத்தை இடித்து கசாயமாக காய்ச்சி ஆறவைத்து இதில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து கற்ப ஸ்திரிகளுக்கு பத்து நாட்களுக்கு ஒருமுறை அதாவது ஒரு மாதத்திற்கு மூன்று முறை கொடுத்து வந்தால் பெண்களின் பிரசவ கால வேதனை இல்லாமல் குழந்தை பிறக்கும் இதனால் கர்ப்பப்பை பலம் பெறும் கர்ப்ப ஸ்திரீகளுக்கு வேறு நோய்கள் வராது மேலும் பிறக்கின்ற குழந்தைகளுக்கு கரப்பான் நோய் மற்றும் சளி தொண்டை கட்டு போன்ற நோய்கள் வராமல் குழந்தை ஆரோக்கியமாக திகழும் 


  உடலில் தோன்றுகின்ற கட்டிகளுக்கு விளக்கெண்ணெயுடன் சுண்ணாம்பு கலந்து பற்றுப்போட கட்டிகள் கரையும்


  கடுக்காய் சூரணத்துடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து இதை சாப்பிட்டு வந்தால் இதனால் சீதபேதி வயிற்று வலி அஜீரணக் கோளாறு மேலும் மூலச்சூடு குணமாவதோடு மலச்சிக்கல் தீரும் மேலும்வயிற்றில் உள்ள குடற்புழுக்கள் எளிதாக வெளியேறி விடும்


  உடலில் இருக்கின்ற உஷ்ணத்தை தணிப்பதற்காக விளக்கெண்ணையை கொஞ்சம் உச்சந்தலையில் வைத்து தேய்த்துக் கொண்டு வந்தால் உஷ்ணம் தணியும் கண் மற்றும் காதுகளில் இரண்டு துளி விட்டு வந்தாள் தலை குளிரும் விளக்கெண்ணெயை தலைக்கு தடவி வந்தால் தலைவலி வராது


  வீட்டில் விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி இந்த தீபத்தின் ஒளியைப் பார்த்து வந்தால் அல்லது இந்த ஒளி பிரகாசிக்கும் இடத்தில் வசித்து வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும்


   இரவு வேலையில் தினந்தோறும் ஐந்து துளி விளக்கெண்ணெய் தொப்புள் குழியில் தடவி வந்தால் உடல் உஷ்ணம் தணியும் இதனால் நரம்புத் தளர்ச்சி நரம்பு பலகீனம் ஏற்படாது 


   சிற்றின்ப சேர்க்கையால் ஏற்படுகின்ற உடல் உஷ்ணத்தை தவிர்ப்பதற்காக ஆண் பெண் இருபாலரும் உடலுறவுக்கு பின்னால்  தூங்கும் போது விளக்கெண்ணையை தொப்புளில் தடவி வந்தால் உடலில் உஷ்ணம் ஏற்படாது வெள்ளை வெட்டை மேலும் சுக்கில சுரோணித சூடுகள் உடலில் தோன்றாது


உடல் களைப்பு உடல் அசதி இல்லாமல் இதனால் ஆரோக்கியமாக வாழலாம்


நமது முன்னோர்கள் பயன்படுத்திய பழைய வைத்திய முறை  கீழே

  

   ஐம்பது  மில்லி பசுவின் கோமியத்தில் பத்து மில்லி விளக்கெண்ணெய் கலந்து காலை வேளையில் எட்டு நாட்கள் மட்டும் இதை குடித்து வந்தால் இதனால் பித்தம் காமாலை பித்த சோகை மேலும் கல்லீரல் நோய்  கல்லீரல் வீக்கத்தினால் உண்டாகின்ற மற்ற வியாதிகளும் எளிதாக நீங்கிவிடும் 


  உடலில் காய்ச்சல் இருக்கின்றபோது விளக்கெண்ணையை பயன்படுத்த கூடாது

   

                     சித்தர்களின் சீடன்

                பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி