புற்றுநோய் காரணம்

 #கேன்சர்_பற்றி_அனைவரும்_அறிந்து #கொள்ள_வேண்டியது❗❗


🔯 புற்றுநோய் ஒரு கொடிய நோய் அல்ல, ஆனால் மக்கள் அலட்சியத்தால் மட்டுமே இறக்கின்றனர்……❗


🙏 🙏  தயவு செய்து பொருமையாக படித்து உங்களை பாதுகாத்து மற்றவர்களைவும் பாதுகாக்க வேண்டும் என்று தாழ்மைவுடன் கேட்டுக்கொள்ளுகிறேன் 🙏🙏🙏


⭕ கேன்சர் என்றால் என்ன❓


 நமது உடல் செல்களால் ஆனது. செல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம் உள்ளது. அவை இறக்கும் தருவாயில், இரண்டாகவோ, மூன்றாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட செல்களாக தன்னைத்தானே பிரித்து 

புதிய செல்களை உருவாக்கும். 


எத்தனை செல்களாக பிரிய வேண்டும் என்ற விபரம் செல்லில் உள்ள 

டி.என்.ஏ- [ DNA ] வில் பதியப்பட்டிருக்கும்.  டி.என்.ஏ-[ DNA ] ல் ஏதோ ஒரு காரணத்தால் கோளாறு ஏற்பட்டு, அளவுக்கு அதிகமாக செல்கள் பிரிந்து தேவையில்லாத செல்கள் உருவாகி விடுகின்றன. அந்த தேவையில்லாத செல்களின் தொகுப்பு ‘கட்டி’ என பொதுவாக அழைக்கப்படுகிறது. 

இந்த கட்டிகள் இரு வகைப்படும்.


👉1. பெனைன் கட்டி 


👉2. புற்றுநோய் கட்டி


⏩ 1. பெனைன் கட்டி எந்த ஒரு தீங்கும் செய்யாது, அருகில் உள்ள மற்ற செல்களை பாதிக்காது அப்படியே இருந்து விடும். 


⏩ 2. புற்றுநோய் கட்டி அருகில் உள்ள செல்களை பாதித்து அவற்றின் டி.என்.ஏ-வையும் செயலிழக்க செய்து அவற்றையும் புற்றுநோய் செல்களாக மாற்றி விடும். 


👉 செல்களின் வளர்சி உதாரணம்…


குழந்தை வயிற்றில் வளரும் பொழுது ஒரு செல் இரண்டு செல்களாகும், இரண்டு நான்காகி பல்கிப் பெருகி, 

கரு குழந்தையாக வளர்ச்சியடையும். ஆனால் பிறந்தவுடன், இந்த செல்கள் இரண்டாக பிரியும் சாகசம் நின்று விடும். இப்படித்தான் உடலில் பல செல்கள் இயங்குகின்றன.


சில செல்கள் மட்டும் இரண்டாக உடையும் தன்மையை வாழ்நாள் முழுதும் பெற்றிருக்கின்றன. எ.கா எலும்பு மஜ்ஜையில் இருக்கும் ரத்த செல்கள் உற்பத்தி. 


இப்பொழுது ஒருவர் வாயில் புகையிலை மெல்லுகிறார் என வைத்துக் கொள்வோம். 


புகையிலையில் உள்ள கெமிக்கல்கள் அவரது வாய் செல்களின் DNAவை டேமேஜ் செய்து விடும். இப்படி ஆவதால் வாயில் உள்ள ஒரு செல்லுக்கு இரண்டாக உடையும் ஆற்றல் வந்து, நான்காகி, எட்டாகி, அப்படியே கேன்சர் கட்டி ஆகிறது. 


இப்படி உடலில் உள்ள எல்லா செல்களும் கேன்சரால் பாதிப்படையலாம். ரத்த வெள்ளை செல் கேன்சர், தோல் கேன்சர், வயிறு, மார்பகம், கர்ப்பப்பை, நுரையீரல், 

எலும்பு என நாம் அறிந்த எந்த உறுப்பு செல்லிலும் கேன்சர் வரலாம். 

கேன்சருக்கு நாம் அறிந்த காரணங்கள் சில உண்டு. புகையிலை, சிகரெட், 

வைரஸ்கள்,சில கெமிக்கல்கள் 

நமக்கு தெரிந்தவை. 


❗தெரியாத காரணங்கள் பல.❗


அதனால் தான் கேன்சர் வந்த சிலருக்கு, 

"நாம் எந்த தவறும் செய்யவில்லையே, எனக்கு எப்படி கேன்சர் வந்தது❓" 


என டாக்டர்களிடம் கேட்க, டாக்டர்கள், "கேன்சர் யாருக்கு வேணா வரலாம், குழந்தை பெரியவர், ஆண் பெண் என்ற எந்த பாகுபாடும் கிடையாது என்பர்.


ஆகவே கேன்சர் என்பது நம் உடலில்  நிகழும் சில திடீர் மாற்றங்களால் ஏற்படும் நோய் ஆகும்.


💢👉 ஸ்டேஜ் என்றால் என்ன❓

அதுவும் கேன்சருக்கு கேன்சர் மாறுபடும்.❗


➡ ஸ்டேஜ் 1- சிறிய சைஸ் கேன்சர், 


➡ ஸ்டேஜ் 2- பெரிய சைஸ், 


➡ ஸ்டேஜ் 3- பெரிய சைஸ் மற்றும் நெறிக்கு பரவியுள்ளது, 


➡ ஸ்டேஜ் 4- வேறு செல்களுக்கு பரவியுள்ளது. 


என வித விதமான ஸ்டேஜ்கள் உள்ளன. 

ஒவ்வொரு கேன்சரும் ஒவ்வொரு மாதிரியானவை. சிலது ஒன்றுமே செய்யாது, ஜஸ்ட் வளர்ந்து கொண்டே இருக்கும். சிலது இருப்பதே தெரியாது. கண்டுபிடிக்கும் போதே டிரிட்மென்ட் தந்து சரி செய்ய முடியாத நிலையில் இருக்கும்.


⭕👉 #காரணங்கள்❓


செல்களில் உள்ள டி.என்.ஏ-வில் ஏற்படும் பாதிப்பே கேன்சர் ஏற்பட காரணமாகும். அந்த பாதிப்பை ஏற்படுத்துபவை எவை எவை என ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் . 


ஒரு மிக முக்கிய கேன்சரை உருவாக்கும் பொருளாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது புகையிலை❗கிட்டத்தட்ட 45% புற்றுநோய்கள் புகையிலையால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், “புகையிலை கேன்சரை உருவாக்கும்” என்ற எச்சரிக்கை வாசகம் இப்போது பரவலாக்கப்பட்டிருக்கிறது.


மேலும் புகையிலை என்பது கேன்சர் ஏற்படுவதற்கு இருக்கும் பல காரணங்களில் ஒன்று மட்டுமே. 


சில வகை கிருமிகள், டின்.என்.ஏ வில் பாதிப்பு ஏற்படுத்தி புற்றுநோய் ஏற்பட மறைமுக காரணமாய் இருக்கிறன.


⭐ ஹுமன் பாப்பிலோமா வைரஸ் - கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட மறைமுக காரணமாக இருக்கிறது


⭐ எச்-பிலின் வைரஸ் - இரைப்பை புற்றுநோய்  ஏற்பட மறைமுக காரணமாக இருக்கிறது.


கேன்சர் என்பது ஒரு பரம்பரை நோயல்ல. சில குறிப்பிட்ட வகை கேன்சர்கள் 5 முதல் 10 சதவீதம் மட்டுமே பரம்பரையாக ஏற்படுகின்றன. ஆகவே கேன்சரால் பாதிக்கப்பட்டவரின் குழந்தைகள் இது பற்றி பயப்பட வேண்டாம். வேண்டுமானால் அவ்வபோது உரிய பரிசோதனைகள் செய்து கொள்ளலாம்.


🉐 எந்த வகையில் கேன்சர் இருப்பதை அறியலாம்❓


கேன்சர் இருப்பதை வெறும் கண்களால் பார்த்து அறிய முடியாது.


 1. பயாப்ஸி சோதனை - கட்டியின் ஒரு பகுதியை எடுத்து, அதன் செல்களை, நுண்ணோக்கி/மைக்ரோஸ்கோப்பில் வைத்து சாதாரண செல்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது 


2. ஸ்கேன்/மேமொகிராம்/ஸ்கோப்பி - கட்டி உள்ள இடத்தை காட்சி படமெடுத்து, அதனை ஆராய்வது.


🈯 எந்த கிருமியால் ஏற்படுகிறது❓

கேன்சர் ஒரு தொற்றுநோயா❓


கேன்சர் என்பது பொதுவாக கிருமியால் ஏற்படும் நோய் அல்ல. ஆகவே இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தொற்றுநோய் அல்ல. கேன்சர் நோயாளிகளை நாம் தொடலாம், அவர்கள் சாப்பிட்ட தட்டில் நாமும் சாப்பிடலாம், அவர்கள் பயன்படுத்திய கழிவறையை நாமும் பயன்படுத்தலாம். ஆகவே கேன்சரால் பாதிக்கப்பட்டவரை ஒதுக்கிவைக்க்க் கூடாது.


🈳 கேன்சர் உடலின் எந்த பாகங்களில் எல்லாம் ஏற்படும்❓


செல்கள் உடலின் எல்லா பாகங்களிலும் இருக்கின்றன. ஆகவே உடலின் எந்த பாகத்திலும் கேன்சர் ஏற்படலாம். உடலில் முடி மற்றும் நகத்தில் மட்டும் கேன்சர் ஏற்படாது, ஏனெனில் அங்கு இறந்த செல்களே இருக்கின்றன. அதிகமாக உடலின் சில பாகங்களில் கேன்சர் ஏற்படுகிறது. அவற்றின் பெயராலேயே கேன்சரும் அழைக்கப்படுகிறது


கல்லீரல்,இரைப்பை,மார்பு

கருப்பை,கருப்பை வாய்,பாலுறுப்பு

சிறுநீரகம்,இரத்தம்,எலும்பு,மூளை          வாய்,தொண்டை,நுரையீரல்


⭕ #கேன்சரின்_அறிகுறிகள் #என்னென்ன❓


கேன்சருக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் என்று எதுவும் கிடையாது. கேன்சர் ஏற்படும் உடல் பாகங்கள் பொருத்து அறிகுறிகள் வேறுபடும். கேன்சர் ஏற்படும் உடல்பாகங்களில் கோளாறு ஏற்பட்டு, அவை வழக்கம் போல செயல்படாமல் போகும். அவ்வாறு செயல்படாமல் போகும் போது, மருத்துவரும் மற்றவர்களும் அந்த உடல் பாகத்தில் பொதுவாக ஏற்படும் நோய் எனக்கருதி அதற்கான பரிசோதனைகளையும், மருந்துகளையும் அளிப்பார்கள். அந்த பரிசோதனைகள் சிலவற்றில், மருத்துவர் நினைத்த நோய்கள் இருப்பதாக முடிவுகளும் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில் பல நேரங்களில் கேன்சர் வேறு சில நோய்களின் அறிகுறிகளையே காட்டும். எடுத்துக்காட்டாக நுரையீரல் புற்றுநோய், காசநோயின் அறிகுறிகளையே ஆரம்பத்தில் காட்டும்.


கொடுக்கப்பட்ட மருந்துகள் செயல்படாமல் போனவுடனேதான்,  மருத்துவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இது புற்றுநோயாக இருக்கலாம் என்ற சந்தேகம் வரும். அந்த சந்தேகம் வரும் வேளையில், கேன்சர் செல்கள் மற்ற உடல் பாகங்களுக்கு பரவி இருக்கலாம். இதனால்தான்,  கேன்சர் ஏற்பட்டு இருப்பதை உடனே கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. ஆகவே இந்த தாமத்திற்கு காரணம் கேன்சரின் தன்மையே தவிர மருத்துவர்களோ அல்லது மற்றவர்களோ கிடையாது❗


எவ்வளவு தான் நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் இருந்தாலும், புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோயாகவே உள்ளது. ஏனெனில் உலகில் உள்ள நோய்களிலேயே புற்றுநோயின் தாக்கத்தினால் தான் அதிக அளவு உயிரிழப்பானது ஏற்படுகிறது. இத்தகைய உயிரிழப்புக்களை தடுப்பதற்கு ஒரே வழியென்றால், ஆரம்பத்திலேயே புற்றுநோயின் அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்றாற் போல் சிகிச்சைகளை மேற்கொண்டால், அதிலிருந்து தப்பிக்க முடியும். 


மேலும் புற்றுநோயில் நிறைய வகைகள் உள்ளன. இவை அனைத்துமே ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருக்காது. ஒவ்வொரு புற்றுநோயும் ஒவ்வொருவிதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். வேண்டுமெனில் ஒருசில பொதுவான அறிகுறிகளான சோர்வு, காய்ச்சல், குறைவான இரத்தம் மற்றும் எடை குறைவு போன்றவை உள்ளன.


ஆனால் ஒரு குறிப்பிட்ட புற்றுநோயை கண்டறிய, ஒரு குறிப்பிட்ட அறிகுறிகளை தெரிந்திருப்பது அவசியம். இத்தகைய அறிகுறிகளை கண்டறிவது சற்று கடினம் தான். இருப்பினும், ஒருசில வித்தியாசமான அறிகுறிகளைக் கொண்டு, எந்த புற்றுநோய் உள்ளது என்பதை தெரிந்து பாதுகாக்கலாம். 


👉 சரி. இப்போது எந்த அறிகுறிகள் இருந்தால், என்ன புற்றுநோய் உள்ளது என்பதை கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா❗


🇨🇭 புற்றுநோயில் #200க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றை 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.


👉1, கார்சினோமா 


👉2, சார்க்கோமா 


👉3, மைலோமா 


👉4, லிம்ப்போமா 


👉5, லுக்கீமியா 


🔯 கார்சினோமா கேன்சர் 

நோய் வகை 🔯


கார்சினோமா என்பது உடலின் தடிமனான உறுப்புகளில் ஏற்படும் புற்று நோய். உதாரணமாக…… 


▶நுரையீரல், 


▶குடல், 


▶கருப்பை, 


▶கனையம், 


▶தோல் 


இவைகளில் கேன்சர் நோய் உண்டாவதை கார்சினோமா வகயை சார்ந்தாது. 


❓கார்சினோமா கேன்சர் அறிகுறிகள்.❓


👉 மேற்க்கூறிய உறுப்புகளில் ஏற்படும்……


▶தடிமானான உருண்டை வடிவ கட்டி(கள்), 


▶ஆறா புண்(கள்) நாற்பட்ட புண், 


▶வலி, 


▶வீக்கம், 


▶இரத்த கசிவு, 


▶காய்ச்சல்


▶உடல் எடை குறைதல், 


▶பசியின்னமை, 


▶தூக்கம் இன்மை 


போன்றவைகள் அறிகுறிகளாக காணப்படுகின்றன. 


🔯 சார்க்கோமா கேன்சர் வகை 🔯

சார்க்கோமா என்பது……


▶எலும்பு, 


▶சவ்வு, 


▶குருத்தெலும்பு, 


▶இரத்த குழாய், 


▶கொழுப்பு பகுதி முதலிய சார்பு தசைகளில் ஏற்படுவது. 


❓சார்க்கோமா கேன்சர் அறிகுறிகள்❓


◀எலும்பு பகுதியில் வலி, 


◀உடலை இருக்கி பிழிவது போன்ற கடுமையான வலி, 


◀கட்டிகள், 


◀புண், 


◀ஆறா புண்கள், 


◀பசியின்மை, 


◀தூக்கம் இன்மை. 


🔯 மைலோமா கேன்சர் வகை 🔯

மைலோமா புற்று நோய் செல்கள்…


◀எலும்பு மஜ்ஜைகளிலும், 


◀பிளாஸ்மாவிலும் ( இரத்ததின் நீர்ம பகுதி ) ஏற்படுவது


❓மைலோமா கேன்சர் அறிகுறிகள்❓


▶தாங்கமுடியாத எலும்பு மற்றும் உடல் வலி மிகுந்த காய்ச்சல், 


▶சோர்வு, 


▶இரத்த கசிவு, 


▶பசியின்மை, 


▶தூக்கம் இன்மை 


போன்றவைகள் காணப்படலாம்.


🔯 லிம்ப்போமா கேன்சர் நோய் வகை 🔯


லிம்ப்போமா புற்று நோய் செல்கள் மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலமான நினனீர் மற்றும் மண்ணீரலையும் பாதிக்க கூடியது. 


❓லிம்ப்போமா கேன்சர் அறிகுறிகள்❓


▶கட்டுபடுத்த முடியாத காய்ச்சல், 


▶மயக்கம், 


▶இரத்த கசிவு, 


▶மிகுந்த தலை வலி, 


▶இரத்த சோகை, 


▶தாங்கமுடியாத எலும்பு மற்றும் உடல் வலி, 


▶வீக்கம், 


▶மூச்சு விட சிரமம் 


போன்றவை உண்டாக்கும். 


🔯 லுக்கீமியா கேன்சர் நோய் வகை 🔯


சிகப்பு மற்றும் வெள்ளை அணுக்களை தோற்றுவிக்கும் எலும்பு மஜ்ஜை சார்ந்த அணுக்களை பாதித்து ஏற்படக்கூடியது. இதனையே இரத்த புற்று நோய் என்று அழைக்கப்படுகிறது. 


♦இரத்த புற்று நேய்களில் 

#137_வகைகள் உள்ளன.


❓லுக்கீமியா கேன்சர் அறிகுறிகள்❓


◀இரத்தத்தில் அதிகப்படியான வெள்ளை அணுக்கள் உண்டாகும், 


◀கட்டுபடுத்த முடியாத காய்ச்சல், 


◀மயக்கம், 


◀இரத்த கசிவு, 


◀மிகுந்த தலை வலி, 


◀இரத்த சோகை, 


◀தாங்கமுடியாத எலும்பு மற்றும் உடல் வலி, 


◀வீக்கம், 


◀மூச்சு விட சிரமம், 


மேற்க்கண்ட கேன்சர் நோய்களில் மிகவும் மோசமாக பாதிக்க கூடியாது குறிப்பாக குழந்தைகளை தாக்குவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.


➡ #குறிப்பு


மேற்கண்ட அனைத்து கேன்சர் நோய்காண அறிகுறிகள் இரண்டாம் நிலையை அடைந்த பின்னரே வெளிப்படுகின்றன. மற்றும் மேற்கூறிய அறிகுறிகள் வேறு சில சாதாரணமாக குணப்படுத்தக் கூடிய நோய்களிலும் வரக்கூடும். 

ஆகவே தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம். 


🔴 கேன்சர் என்றால் இறப்பு தானா❓


கேன்சர் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், 90%-க்கு மேல் குணப்படுத்த முடியும். 


கேன்சருக்கு இப்போது பலவிதமான மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் வந்து விட்டன. ஆகவே கேன்சர் என்றால் இறப்பு என்று அர்த்தம் கிடையாது.


👇#விபரம்……


☎ 999 437 9988

☎ 81 4849 6869


#மேலப்பாளையம்_திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி