உடலில் கொழுப்பு சேராமல் இருக்க

 #இனிய_மதிய_வணக்கம்......


2 மாதம் #வெந்தய_நீரில்_தேன் கலந்து குடித்தால், எந்த பகுதியில் உள்ள கொழுப்பு கரையும் என்று தெரியுமா?


இன்றைய மோசமான உணவுப் பழக்கவழக்கத்தாலும், வாழ்க்கை முறையாலும் ஏராளமான நோய்கள் உடலை தாக்குகின்றன. முக்கியமாக உடலில் நச்சுக்களின் அளவும அதிகரிக்கிறது. குறிப்பாக இரத்த குழாய்களினுள் கொழுப்புக்கள் படித்து இரத்த குழாய்களை அடைத்து, இதயத்திற்கு இரத்தம் செல்வதில் இடையூறு ஏற்பட்டு, இதய பிரச்சனைகள் மற்றும் மூளை பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இப்படி இரத்த குழாய்களினுள் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க மருந்து மாத்திரைகள் மட்டுமின்றி, பல்வேறு உணவுகளும், பானங்களும் உதவுகின்றன. மருந்து மாத்திரைகள் கூட சில சமயங்களில் பக்க விளைவுகளை உண்டாக்கும். ஆனால் இயற்கை பானங்களும், உணவுகளும் எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. 


#வெந்தயம்

இரத்தக் குழாய்களில் அடைப்பை உண்டாக்கும் கொழுப்புக்களின் தேக்கத்தைக் கரைக்க வெந்தயம் பெரிதும் உதவியாக இருக்கும்.


பல்வேறு ஆய்வுகளில் வெந்தயத்தில் உள்ள ஏராளமான நார்ச்சத்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதாகவும் மற்றும் இந்த கரையக்கூடிய நார்ச்சத்து கொலஸ்ட்ராலை உடல் உறிஞ்சுவதை தடுப்பதாகவும் கண்டறியப்பட்டள்ளது.


வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்து உண்ணும் உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்வதோடு, பித்தநீரின் உற்பத்தியைச் சீர்செய்யும். மேலும் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றச் செய்யும்.


வெந்தய நீர் தயாரிப்பு முறை #1

ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து தினமும் இருமுறை குடிக்க வேண்டும்.


வெந்தய நீர் தயாரிப்பு முறை #2

வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றை 1-2 மாதங்கள் தினமும் குடித்து வந்தால், நிச்சயம் இரத்தக் குழாய்கள் சுத்தமாகி, இதயம் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.


கீழே இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மனதில் கொண்டு பின்பற்றினால், இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுக்கலாம்.


#டிப்ஸ்_1

எண்ணெயில் பொரித்த உணவுகள், சர்க்கரை உணவுகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.


#டிப்ஸ்_2

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்களை விட்டுவிட வேண்டும்.


#டிப்ஸ்_3

பிரகாசமான நிறங்களைக் கொண்ட பழங்களான தர்பூசணி, மாம்பழம், ஆரஞ்சு மற்றும் ப்ளூபெர்ரி போன்றவற்றை அன்றாடம் சிறிது உட்கொண்டு வந்தால், கொழுப்புக்கள் படிவதைத் தடுக்கலாம்.


#டிப்ஸ்_4

தினமும் காலை மற்றும் மாலையில் 1 கப் க்ரீன் டீ குடித்து வருவதன் மூலம், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புக்கள் கரைக்கப்படும். இதனால் உடல் எடையும் குறையும்.


#டிப்ஸ்_5

அன்றாட சமையலில் சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி சமைத்து வர, இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் படிவது தடுக்கப்படும்.


#டிப்ஸ்_6

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், கிரான்பெர்ரி ஜூஸ் கிடைக்கும் போது, தவறாமல் வாங்கிப் பருகுங்கள். ஏனெனில் இது கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, கொழுப்புக்கள் இரத்த குழாய்களில் படிவதைத் தடுக்கலாம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி